ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி ஆலையில், 3-வது ஷிஃப்ட்டிலும் உற்பத்தி துவக்கம்
ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி ஆலையில், கூடுதலாக 3-வது ஷிஃப்ட்டிலும் உற்பத்தி துவங்கபட்டுள்ளது.
ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம், இந்தியாவின் மஹாராஷ்டிராவின் பூனே அருகே சகன் என்ற இடத்தில் உள்ள தங்களின் உற்பத்தி ஆலையில் உற்பத்தியை விஸ்தரித்துள்ளனர்.
அமியோ செடானின் வரவாலும், ஏற்றுமதிக்கான தேவைகள் அதிகரிப்பதாலும், இந்த உற்பத்தியை கூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு, 800 பணியாளார்கள் தேர்ந்தெடுக்கபட்டதோடு மட்டுமல்லாமல், கூடுதலாக 3-வது ஷிஃப்ட்டிலும் உற்பத்தி துவங்கியுள்ளது. உற்பத்தியை 15% வரை கூட்ட முயற்சிப்பதால், பணியாளர்கள் மேலும் அதிக அளவில் தேர்வு செய்யபடுவார்கள் என தகவல்கள் வெளியாகிறது.

இது குறித்து, ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட்-டின் எம்.டி, டாக்டர். ஆண்ட்ரியாஸ் லார்மேன் சில முக்கியமான தகவல்களை வெளியிட்டார். அப்போது, "2016-ஆம் இந்திய வாகன சந்தைகளிலும், ஏற்றுமதி சந்தைகளிலும் தேவைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இந்திய சந்தைகளுக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கபட்ட அமியோ-வும் வெளியாகிறது. இதனால், இந்திய வாகன சந்தைகளில் இருந்தும், சர்வதேச சந்தைகளில் இருந்தும் தேவைகள் அதிகரிக்க உள்ளதாக எதிர்பார்க்கிறோம். ஒட்டுமொத்தத்தில், கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டில் 15% வரை உற்பத்தி கூட்டப்படலாம்" என டாக்டர். ஆண்ட்ரியாஸ் லார்மேன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








