ஃபோக்ஸ்வேகன் அமியோ டீசல் வேரியன்ட்டின் ஸ்பை படங்கள் வெளியாகியது

By Ravichandran

ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடானின் டீசல் வேரியன்ட்டின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

அமியோ காம்பேக்ட் செடானின் டீசல் வேரியன்ட் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஃபோக்ஸ்வேகன் அமியோ...

ஃபோக்ஸ்வேகன் அமியோ...

ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடான், ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தயாரித்து வழங்கும் மாடல் ஆகும்.

ஃபோக்ஸ்வேகன் அமியோவின் பெட்ரோல் வேரியன்ட், கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

டீசல் வேரியன்ட்;

டீசல் வேரியன்ட்;

ஃபோக்ஸ்வேகன் அமியோ, இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்யப்படும் போது, பெட்ரோல் வேரியன்ட்டில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால், டீசல் வேரியன்ட்டில் அறிமுகம் செய்யப்படாதது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், இந்த டீசல்கேட் ஸ்கேண்டிலில் இருந்தும் முழுதாக விடுபடாத நிலை நீடித்து வருகிறது.

ஸ்பை படங்கள்;

ஸ்பை படங்கள்;

இந்த நிலையில் தான், ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடானின் டீசல் வேரியன்ட் சோதனைகள் மேற்கொள்ளப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடானின் டீசல் வேரியன்ட்டில், 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இதே 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜின் தான், போலோ ஹேட்ச்பேக், வென்ட்டோ மற்றும் ஸ்கோடா ரேபிட் ஆகிய மாடல்களில் உபயோகிக்கப்படுகிறது.

இஞ்ஜின் திறன்;

இஞ்ஜின் திறன்;

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், இந்த அமியோ மாடளுக்கான இஞ்ஜின் திறன், தற்போதைய 103 பிஹெச்பி என்ற அளவில் இருந்து 108 பிஹெச்பி என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

போலோ மாடலில் உள்ள 89 பிஹெச்பி வேரியன்ட்டில் உள்ள இஞ்ஜினும் பொருத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடானின் டீசல் வேரியன்ட்டின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7-ஸ்பீட் டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகிய தேர்வுகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய ஃபோக்ஸ்வேகன் அமியோ கார் எப்படி இருக்கிறது... ஒரு ரவுண்டு பார்த்துடலாம்!

ஃபோக்ஸ்வேகன் தொடர்புடைய செய்திகள்

அமியோ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Spy Pictures Credit ; www.carwale.com

More from DriveSpark

Article Published On: Friday, July 22, 2016, 7:05 [IST]
English summary
Volkswagen Ameo Compact Sedan Diesel variant Spy Pics captured during Testing was released recently. Volkswagen launched their Ameo compact sedan back in June. Diesel powered Ameo uses tweaked version of 1.5-litre diesel engine, which currently in use in other cars from VW group including Polo hatchback, Vento and Skoda Rapid. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+