ஃபோக்ஸ்வேகன் இந்தியா, 1.85 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்து சாதனை

Written By:

ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளில் 1.85 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் இந்தியா படைத்த இந்த சாதனை குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளலாம்.

1,85,000 கார்கள்...

1,85,000 கார்கள்...

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்திய அங்கமான ஃபோக்ஸ்வேகன் இந்தியா, கடந்த 5 ஆண்டுகளில் கார்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது.

ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்த சாதனையை, 5 ஆண்டுகளில் நிகழ்த்தியுள்ளது.

இந்தியாவில் உற்பத்தி;

இந்தியாவில் உற்பத்தி;

இந்த 1,85,000 கார்களும், இந்தியாவில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் பூனே அருகே உள்ள சகன் என்ற இடத்தில் அமைந்துள்ள ஃபோக்ஸ்வேகன் கார் உற்பத்தி ஆலையில்

தயார் செய்யபட்டது என்பது குறிப்பிடதக்கது.

ஏற்றுமதி;

ஏற்றுமதி;

இந்தியாவில் இருந்து ஃபோக்ஸ்வேகன் தயாரிப்புகளின் ஏற்றுமதி நடவடிக்கைகள் 2011-ஆம் ஆண்டில் துவங்கியது.

இந்தியாவில் அமைந்துள்ள உற்பத்தி ஆலையில் இருந்து, ஃபோக்ஸ்வேகன் தயாரிப்புகளை பெற்ற முதல் சர்வதேச சந்தையாக தென் ஆஃப்ரிக்கா தான் விளங்கியது.

தற்போதைய நிலையில், இந்த 2016-ஆம் ஆண்டில், இந்தியாவில் தயாரிக்கபடும் ஃபோக்ஸ்வேகன் தயாரிப்புகள் சுமார் 35+ மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபடுகிறது.

உற்பத்தி மையமாகும் இந்தியா...

உற்பத்தி மையமாகும் இந்தியா...

2015-ஆம் ஆண்டில், ஃபோக்ஸ்வேகன் இந்தியா உற்பத்தி ஆலையில் தயாரிக்கபட்ட ஒட்டுமொத்த கார்களில், 55% கார்கள் ஏற்றுமதிக்கு பயன்படுத்தபட்டது.

ஃபோக்ஸ்வேகன் தயாரிப்புகளுக்கான சர்வதேச அளவிலான டிமாண்ட் மிக அதிக அளவில் உள்ளது. பூனேவில் இந்த உற்பத்தி ஆலை, இந்த டிமாண்ட்களுக்கு

ஈடு கொடுக்கும் வகையில் திறன்பட உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது.

ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் இந்தியாவை சேர்ந்த இந்த பூனே உற்பத்தி மையத்தை, சர்வதேச உற்பத்தி மையமாக மாற்றி கொண்டுள்ளது.

போலோ, வென்ட்டோ;

போலோ, வென்ட்டோ;

தற்போதைய நிலையில், போலோ, வென்ட்டோ ஆகிய மாடல்கள், வலது-கை இயக்கம் மற்றும் இடது-கை இயக்கத்திலான கான்ஃபிகரேஷனில் ஃபோக்ஸ்வேகன் இந்தியா உற்பத்தி ஆலையில் தயாரிக்கபட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதில், 2015-ஆம் ஆண்டில் 80 சதவிகிததிற்கும் கூடுதலான மாடல்கள் மெக்சிக்கோவிற்கு ஏற்றுமதி செய்யபட்டது.

இந்தியாவில் கிடைக்கும் மாடல்கள்;

இந்தியாவில் கிடைக்கும் மாடல்கள்;

தற்போதைய நிலையில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய வாகன சந்தைகளில் 6 மாடல்களை வழங்கி வருகிறது.

போலோ, போலோ ஜிடி, கிராஸ் போலோ, வென்ட்டோ, ஜெட்டா மற்றும் பீட்டில் ஆகிய மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் ஃபோக்ஸ்வேகன்;

ஆட்டோ எக்ஸ்போவில் ஃபோக்ஸ்வேகன்;

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தங்களின் அமியோ காம்பேக்ட் செடான், போலோ ஜிடிஐ பெர்ஃபார்மன்ஸ் ஹேட்ச்பேக் மற்றும்

டிகுவான் பிரிமியம் எஸ்யூவி ஆகிய மாடல்களை காட்சிபடுத்தின.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

2016 ஸ்கோடா சூப்பர்ப் செடான் கார் ஃபிப்ரவரி 23-ல் தேதி விற்பனைக்கு அறிமுகமாகிறது

புதிய போலோ ஜிடிஐ ஹேட்ச்பேக் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது

ஃபோக்ஸ்வேகன் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Volkswagen India has exported over 1.85 Lakh Vehicles in 5 Years. All these vehicles were made and exported from Volkswagen India facility in Chakan, Pune. Export of Volkswagen products from India began in 2011. South Africa was very first international market to receive Volkswagen models from the India.To know more about this, check here...
Story first published: Friday, March 18, 2016, 16:43 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark