ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் 2016 ஃபோக்ஸ்ஃபெஸ்ட் துவங்கியது
ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் 2016 ஃபோக்ஸ்ஃபெஸ்ட் என்னும் கொண்டாட்டம் இந்தியாவில் துவங்கியுள்ளது. இந்தியாவில் பண்டிகை காலங்கள் துவங்கிவிட்டன. ஏராளமான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பல்வேறு வகையிலான சலுகைகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குகின்றனர்.
ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் 2016 ஃபோக்ஸ்ஃபெஸ்ட் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

சலுகைகள் மழை;
ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம், பண்டிகை காலங்களில் நடைபெறும் 2016 ஃபோக்ஸ்ஃபெஸ்ட்டின் போது, வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையிலான ஈர்க்கும் சலுகைகள் மற்றும் ஆதாயங்கள் அளிக்கப்படுகிறது.

கிடைக்கும் காலம்;
ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் வழங்கும் இந்த சலுகைகள், அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை வழங்கப்படும்.

போலோ, வென்ட்டோ;
ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் போலோ மற்றும் வென்ட்டோ, தவிர்க்கமுடியாத ஃபைனான்ஸ் தேர்வுடன் கிடைக்கின்றன. இந்த ஹேட்ச்பேக் மற்றும் செடானை, ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 0% வட்டி விகிதத்தில் அளிக்கின்றனர். மேலும், வாடிக்கையாளர்கள் 10,000 ரூபாய் மதிப்பிலான லாயல்டி போனஸும் பெறலாம். இதோடு மட்டுமல்லாமல், பல்வேறு பிற சலுகைகள் மற்றும் ஆதாயங்கள் கிடைக்கிறது.

பீட்டில்;
ஃபோக்ஸ்வேகனின் 21-வது சென்ச்சுரி பீட்டில், ஈர்க்கும் வகையிலான இஎம்ஐ தேர்வுடன் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த ஃபோக்ஸ்வேகன் பீட்டில் மாடலை 29,999 ரூபாய் என்ற இஎம்ஐ-யில் இருந்து பெறலாம். இந்தியா முழுவதும் ஃபோக்ஸ்வேகன் பீட்டில் மீது கிடைக்கும் இந்த சலுகைகள், ஸ்டாக்குகள் தீரும் வரை, குறைந்த அளவிலான கார்கள் மீது மட்டுமே கிடைக்கும்.

ஜெட்டா;
ஃபோக்ஸ்வேகனின் ஜெட்டா செடான் 4.99% வட்டி விகிதத்தில் அளிக்கப்படும்.

பிற பரிசுகள்;
ஃபோக்ஸ்வேகனின் பல்வேறு வாகனங்களின் சர்வீஸ் மீதும் ஸ்பெஷல் சலுகைகள் அளிக்கப்படும். ஃபோக்ஸ்வேகனின் வாகனங்களை டெஸ்ட் டிரைவ் செய்ய கொண்டு செல்லு, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், நிச்சய பரிசுகள் வழங்கப்படும்.

தினசரி பரிசுகள்;
இதோடு மட்டுமல்லாமல், ஃபோக்ஸ்வேகனின் வாகனங்களை புக்கிங் செய்யும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும். மேலும், ஃபோக்ஸ்வேகன் கார்களை சர்வீஸ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கும் தினசரி பரிசுகள் அளிக்கப்படும். மேலும், ஒரு மல்டிமீடியா டேப்லட் பரிசானது அதிர்ஷ்ட குலுக்கல் முறையில் அளிக்கப்படும்.

பிற சுவாரஸ்யமான செய்திகள்;
இஸ்ரோவின் புதிய ஸ்க்ராம்ஜெட் ராக்கெட் எஞ்சின் பற்றிய சிறப்புத் தகவல்கள்!
உலகின் நீளமான டாப் 10 நெடுஞ்சாலைகள்... இந்தியாவின் தங்க நாற்கர சாலைக்கும் இடம்!
தானியங்கி பறக்கும் காரை தயாரிக்கும் ஏர்பஸ் விமான நிறுவனம்!


Click it and Unblock the Notifications








