ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் செடான் காருக்கு அமியோ என பெயர் சூட்டபட்டுள்ளது
புதிய காம்பேக்ட் செடான் காருக்கு, ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 'அமியோ' என பெயர் சூட்டியுள்ளது.
முன்னதாக, இந்த ஆண்டில் குறைந்தது 3 தயாரிப்புகளை அறிமுகம் செய்யும் வகையில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்த வரிசையில், தங்கள் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் செடான் காருக்கு அமியோ என பெயரிட்டுள்ளது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சார்பாக தயாரிக்கபடும் இந்த காம்பேக்ட் செடான் காரின் பெயரான அமியோ, டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் முறைப்படி அறிவிக்கபட உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
அமியோ, பூனே அருகே சகன் என்ற இடத்தில் உள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் தயாரிக்கபட உள்ளது. இந்த அமியோ இந்திய சாலைகளுக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கபட்டுள்ளது.

இந்த புதிய அமியோ காரின் உற்பத்திக்காக, ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 720 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.
ஏற்கனவே மிகுந்த போட்டி நிலவும் காம்பேக்ட் கார் செக்மண்ட்டில், அமியோ காம்பேக்ட் செடான் காரின் அறிமுகம், இந்த நிறுவனத்திற்கு மாபெரும் திருப்புமுனையாக அமையும் என ஃபோக்ஸ்வேகன் எதிர்பார்க்கிறது.
இந்த அமியோ காம்பேக்ட் செடான் கார் போன்ற அறிமுகத்தில் இருந்து, இனி இந்திய வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு பிரத்யேக கவனம் செலுத்தபடும் என ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் உயர் அதிகாரி மைக்கேல் மேயர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








