ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ இந்தியாவில் விற்பனைக்கு வந்தது - விலைய கேட்டு ஷாக்காயிடாதீங்கோ!

Written By:

பெர்ஃபார்மென்ஸ் கார் பிரியர்களின் எதிர்பார்ப்புகளுக்கு தீணி போடும் வகையில், ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் அதிசக்திவாய்ந்த ஹேட்ச்பேக் ரக கார் மாடலாக வந்திருக்கும் இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ காரின் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட முக்கிய விபரங்களை தொடர்ந்து காணலாம்.

 ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ இந்தியாவில் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் லிமிடேட் எடிசன் மாடலாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்ப்டடு இருக்கிறது ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ கார். மொத்தம் 99 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும்.

 ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ இந்தியாவில் விற்பனைக்கு வந்தது

போலோ ஜிடிஐ காரில் டர்போசார்ஜர் துணையுடன் இயங்கும் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 189 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வாரி வழங்கும் திறன் படைத்தது.

 ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ இந்தியாவில் விற்பனைக்கு வந்தது

இந்த காரில் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. முன்புற வீல்களுக்கு எஞ்சின் சக்தி செலுத்தப்படுகிறது. இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை 7.2 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 233 கிமீ வேகம் வரை செல்லும் கட்டமைப்பு கொண்டது.

பக்கவாட்டில் போலோ ஜிடிஐ காரில் சற்றே உப்பிய வீல் ஆர்ச்சுகள், 17 இன்ச் அலாய் வீல்கள் போன்றவை குறிப்பிடத்தக்கதாக இருக்கின்றன.

 ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ இந்தியாவில் விற்பனைக்கு வந்தது

பின்புறத்தில் போலோ ஜிடிஐ காரில் இரட்டை புகைப்போக்கி குழல்கள் உள்ளன. கூரையின் பின்புறத்தில் ஸ்பாய்லர் பொருத்தப்பட்டு இருக்கிறது.

 ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ இந்தியாவில் விற்பனைக்கு வந்தது

உட்புறத்தில் தட்டையான ஸ்டீயரிங் வீல், கருப்பு வண்ண இன்டீரியரில் ஆங்காங்கே சிவப்பு வண்ண பாகங்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.

 ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ இந்தியாவில் விற்பனைக்கு வந்தது

ரூ.25.65 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ கார் விற்பனைக்கு வந்துள்ளது. மினி பிராண்டு கார்களுடன் இது போட்டி போடும்.

 ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ இந்தியாவில் விற்பனைக்கு வந்தது

குறிப்பிட்ட ஃபோக்ஸ்வேகன் டீலர்களில் மட்டுமே இந்த காருக்கு முன்பதிவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த காரை டெஸ்ட் டிரைவ் செய்வதற்கு விருப்பமுள்ள வாடிக்கையாளர்களில் சிலரை தேர்வு செய்து டெஸ்ட் டிரைவ் வாய்ப்பை வழங்க இருக்கிறது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்.

English summary
Volkswagen has launched the limited edition Polo GTI hot hatchback in India.
Story first published: Thursday, November 3, 2016, 12:48 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark