ஃபோகஸ்வேகனின் போலோ செலக்ட், வென்ட்டோ செலஸ்ட் ஸ்பெஷல் எடிஷன்கள் அறிமுகம்
ஃபோக்ஸ்வேகன் போலோ செலக்ட் மற்றும் வென்ட்டோ செலஸ்ட் எனப்படும் 2 மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம், 2 ஸ்பெஷல் எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளனர். ஃபோக்ஸ்வேகன் போலோ செலக்ட் மற்றும் வென்ட்டோ செலஸ்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த இரு மாடல்களும் ஸ்பெஷல் எடிஷன் மாடல்களாக வழங்கப்படுகிறது. இந்த 2 மடல்களுமே இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஃபோக்ஸ்வேகன் ஷோரூம்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

போலோ செலக்ட் மற்றும் வென்ட்டோ செலஸ்ட் மாடல்களின் பிளாக் நிறத்திலான பாடி சைட் மோல்டிங், பிளாக் ரூஃப் ஃபாயில், கார்பன் ஃபினிஷ் செய்யப்பட்ட ஓஆர்விஎம் கவர்கள் ஆகியவை வழங்கபட்டுள்ளது. ஸ்பெஷல் எடிஷன் கெத்தையும், பிரத்யேகத்தன்மையை பாதுக்காக்கவும், போலோ செலக்ட் மற்றும் வென்ட்டோ செலஸ்ட் மாடல்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்கப்படுகிறது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வழங்கும் இந்த இரு ஸ்பெஷல் எடிஷன் மாடல்களும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட டிரிம்களில் மட்டுமே கிடைக்கும். வென்ட்டோ செலஸ்ட் மாடல், ஹைலைன் வேரியன்ட்டில் மேனுவல் மற்றும் டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன் ஆகிய 2 தேர்வுகளிலும் வழங்கப்படுகிறது. போலோ செலக்ட் ஹைலைன் வேரியன்ட்டில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வில் மட்டுமே கிடைக்கும்.
போலோ செலக்ட் கார்பன் ஃபினிஷ் சென்டர் கன்சோல் கொண்டுள்ளது. போலோ செலக்ட் மாடலக்கு ஃபோக்ஸ்வேகன் லோகோ உடைய ஸ்கஃப் பிளேட்கள் மற்றும் சீட் கவர்கள் வழங்கப்பட்டுள்ளது.

வென்ட்டோ செலஸ்ட், கீறல்கள் ஏற்படாத வகையிலான ஸ்கிராட்ச் ரெசிஸ்டன்ட் டேஷ்போர்ட் கொண்டுள்ளது. வென்ட்டோ செலஸ்ட் மாடலுக்கு ப்லாபுன்க்ட் டச்ஸ்கிரீன் என்டர்டெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தபட்டுள்ளது.
இந்த இரு மாடல்களுமே டிடாச்சபில் விண்டோ பிலைன்ட்கள் மற்றும் டெக்ஸ்டைல் மேட்கள் பெறுகின்றன.
பாதுகாப்பை பொருத்த வரை, போலோ செலக்ட் மற்றும் வென்ட்டோ செலஸ்ட் ஆகிய 2 மாடல்களுக்குமே, ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், ட்யூவல் ஏர் பேக்குகள் மற்றும் எபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கபட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








