வால்வோ நிறுவனம், இந்தியாவிற்குள் ஹைப்ரிட் மாடல்களை 2016-ஆம் ஆண்டிற்குள் கொண்டு வர முடிவு

By Ravichandran

வால்வோ நிறுவனம், இந்த ஆண்டில் இந்திய வாகன சந்தைகளுக்கு ஹைப்ரிட் மாடல்களை கொண்டு வரும் என தெரிவித்துள்ளது.

வால்வோ இந்த திட்டம் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

வால்வோ ஹைப்ரிட்...

வால்வோ ஹைப்ரிட்...

உலகம் முழுவதும் ஹைப்ரிட் கார்களின் உபயோகம் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், இந்தியாவிலும் ஹைப்ரிட் வாகனங்களின் உபயோகம் அதிகமாகி வருகிறது. வால்வோவும் தங்கள் நிறுவனத்தின் சார்பில்

சில ஹைப்ரிட் வாகனங்களை களமிறக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு முடிவதற்குள்ளாகவே, சில மாடல்கள் அறிமுகமாக அதிக வாய்ப்புகள் உள்ளது.

இந்தியாவில் வால்வோ...

இந்தியாவில் வால்வோ...

ஸ்வீடனை மையமாக கொண்டு இயங்கும் வால்வோ நிறுவனம், தற்போதைய நிலையில் ஏராளமான சொகுசு கார்களை இந்திய வாகன சந்தைகளில் வழங்கி வருகிறது.

ஹைப்ரிட் வாகனங்களின் அறிமுகம், வால்வோ நிறுவனத்திற்கு சொகுசு வாகன சந்தைகளில் இருக்கும் மதிப்பை நிச்சயமாக கூட்டும் என தெரிகிறது.

எக்ஸ்சி90 ஹைப்ரிட் எஸ்யூவி;

எக்ஸ்சி90 ஹைப்ரிட் எஸ்யூவி;

தற்போதைய நிலையில், வால்வோ நிறுவனம் அதன் எக்ஸ்சி90 ஹைப்ரிட் எஸ்யூவி மாடலை மட்டுமே பிளக்-இன் ஹைப்ரிட் தேர்வுடன் வழங்குகிறது.

சர்வதேச சந்தைகளுக்கு, எக்ஸ்சி90 ஹைப்ரிட் எஸ்யூவி, மொமெண்டம், ஆர்-டிசைன் மற்றும் இன்ஸ்கிரிப்ஷன் ஆகிய 3 வேரின்யண்ட்களில் வழங்கபடுகிறது.

இந்த ஹைப்ரிட் மாடல்களின் விலைகள், சுமாராக 42 லட்சம் ரூபாயில் இருந்து, 44 லட்சம் ரூபாய்க்கு மத்தியில் நிர்ணயிக்கபட்டுள்ளது.

இந்தியாவிற்கான ஹைப்ரிட்?

இந்தியாவிற்கான ஹைப்ரிட்?

வால்வோ நிறுவனம் வழங்கும் எக்ஸ்சி90 எஸ்யூவியின், பெட்ரோல்-ஹைப்ரிட் மாடல் தான் இந்தியாவில் முதலில் அறிமுகம் செய்யபடலாம் என தெரிகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

இந்தியாவிற்கான எக்ஸ்சி90 ஹைப்ரிட் எஸ்யூவி, எலக்ட்ரிக் மோட்டார் கொண்ட 2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் பெட்ரோல் இஞ்ஜின் முன் சக்கரங்களுக்கும், இதன் எலக்ட்ரிக் மோட்டார் பின் சக்கரங்களுக்கும் பவர் செலுத்துகிறது.

காலத்தின் கட்டாயம்;

காலத்தின் கட்டாயம்;

சமீக காலமாக, இந்திய அரசும், வாகனங்களின் மாசு உமிழ்வு தொடர்பான நெறிமுறைகளின் மிகுந்த கண்டிப்பை காட்டி வருகிறது.

இதற்கு ஏற்றவாறு, வால்வோ ஆட்டோ நிறுவனமும் மாசு உமிழ்வு குறைவாக உள்ள சுத்தமான மற்றும் பசுமையான போக்குவரத்திற்க்கான எஸ்யூவி

வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

மேலும், இந்த வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவிக்கு மத்திய அரசின் ஃபேம் ஸ்கீம் அடிப்படையில் சில சலுகைகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடதக்கது.

வருங்கால திட்டங்கள்;

வருங்கால திட்டங்கள்;

எக்ஸ்சி90 பிளக் இன் ஹைப்ரிட் எஸ்யூவியின் அடிப்படையில் பல்வேறு ஹைப்ரிட் எஸ்யூவிகளை, வால்வோ நிறுவனம் பல்வேறு ஹைப்ரிட் எஸ்யூவிகளை இந்தியாவிற்குள் அறிமுகம் செய்ய உள்ளது.

இது குறித்து, எந்த விதமான அதிகாரப்பூர்வ கருத்துகளையும் வால்வோ நிறுவனம் இது வரை தெரிவிக்கவில்லை.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

போர்ஷே நிறுவனத்தின் அனைத்து மாடல்களிலும், ஹைப்ரிட் வேரியண்ட் விரைவில் அறிமுகம்

பிஎம்டபிள்யூ ஐ8 - உலகில் அதிகம் விற்பனையாகும் ஹைப்ரிட் ஸ்போர்ட்ஸ் கார்

எம் ஸீரோ... இந்தியாவின் முதல் சூப்பர் காரின் புரோட்டோடைப் ரெடி...!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

More from DriveSpark

Article Published On: Monday, March 14, 2016, 16:50 [IST]
English summary
Volvo Auto has recently confirmed that, they would bring in hybrid models within 2016 to India. At present, Volvo offers only XC90 SUV with plug-in hybrid option. For Global markets, Volvo offers XC90 hybrid in 3 variants, Momentum, R-Design, and Inscription. Approximate pricing for hybrid SUV is between Rs. 42 lakh to Rs. 44 lakh. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+