நாட்டின் மிக பிரம்மாண்டமான வால்வோ ஷோரூம்... விஜயவாடாவில் திறப்பு

By Meena

வெளிநாட்டில் மெகா ஹிட்டடித்த பெரிய பிராண்ட் கார்கள் இந்தியாவுக்கு வராதா? என ஏங்கிக் கிடந்தது எல்லாம் ஒரு காலம். தற்போது பிஎம்டபிள்யூ, ஜாகுவார், ஆடி என பல பெரிய நிறுவனங்கள், தங்களது உற்பத்தி மையங்களையும், விற்பனை நிலையங்களையும் இந்தியாவின் பல மாநிலங்களில் நிறுவிவிட்டன.

சர்வதேச அளவில் இந்தியப் பொருளாதாரம் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வருவது அதற்கு ஒரு முக்கியக் காரணம். இதைத் தவிர நம் நாட்டு மக்களின் நுகர்வுத் திறன், அதாவது Buying Capacity எந்த நாட்டுக்கும் சளைத்தது அல்ல என்று நிரூபணமாகியிருப்பது மற்றொரு காரணம்.

வால்வோ ஷோரூம்

உலக அளவில் முன்னணியில் இருக்கும் பல பிராண்ட்களின் மிகப் பெரிய வர்த்தக சந்தையாக இந்தியா விளங்கி வருகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அப்படியாக ஸ்வீடன் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வால்வோ நிறுவனம், இந்தியாவின் பல இடங்களில் தங்களது ஷோ ரூமைத் திறந்துள்ளது.

அதற்கு புதிய சிகரம் வைத்தாற்போல நாட்டிலேயே மிகப்பெரிய வால்வோ ஷோ ரூமை ஆந்திர மாநிலம், விஜயாவாடா நகரில் அண்மையில் தொடங்கியுள்ளது.

மொத்தம் 3 தளங்கள் உள்ள இந்த ஷோ ரூம், 26,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.

வால்வோ ஷோரூம் திறப்பு

வால்வோ நிறுவனம் தயாரிப்பில் உருவான அனைத்து மாடல்களும் இந்த ஷோ ரூமில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையிலான ஏற்பாடுகள் இங்கு செய்யப்பட்டுள்ளன.

திறப்பு விழா நிகழ்ச்சியில், வால்வோ ஆட்டோ இந்தியா மேலாண் இயக்குநர் டாம் வோன் போண்ஸ்டார்ஃப், நிறுவனத்தின் ஆசிய-பசுபிக் பிராந்திய துணைத் தலைவர் ஜேரி கோஹோனன், விஜயவாடா டீலர் மனோஜ் கிருஷ்ணா ஆகியோர் பங்கேற்றனர்.

வால்வோ ஷோரூம் திறப்பு 1

இந்தியாவில் வால்வோ சொகுசு கார்களின் விலை எவ்வளவு எனக் கேட்கிறீர்களா? மாடலுக்கு மாடல் அது வேறுபடுகிறது. விலைக்குத் தகுந்தாற்போல், சொகுசு வசதிகளும் அதிகமாக உள்ளது.

வி-40 - ரூ.25.5 லட்சம்

வி-40 கிராஸ் கன்ட்ரி - ரூ.27.3 லட்சம்

எஸ்-60 - ரூ.30.88 லட்சம்

எஸ்-60 கிராஸ் கன்ட்ரி - ரூ.38.9 லட்சம்

எக்சி-60 - ரூ.44.8 லட்சம்

எக்சி-90 - ரூ.70.96 லட்சம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 29, 2016, 9:55 [IST]
English summary
Volvo Inaugurates Their Biggest Showroom In India Till Date.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+