வால்வோ நிறுவனத்தின் 2 புதிய மாடல்கள் இந்த ஆண்டின் இறுதிக்குள் அறிமுகம்
வால்வோ நிறுவனம், இந்த ஆண்டு இறுதிக்குள் 2 புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
வால்வோ அறிமுகம் செய்ய உள்ள மாடல்கள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

புதிய அறிமுகங்கள்;
வால்வோ ஆட்டோ நிறுவனம் சமீபத்தில் தான், புதிய எஸ்60 கிராஸ் கன்ட்ரி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தனர். இந்த அறிமுக நிகழ்ச்சியின் போது, இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் இரு மாடல்கள் அறிமுகம் செய்யபடும் என வால்வோ தெரிவித்தது.
எஸ்90 சொகுசு செடான் மற்றும் மேம்படுத்தபட்ட வி40 ஹேட்ச்பேக் தான், இந்த இரு மாடல்கள் ஆகும்.

இஞ்ஜின் - எஸ்90 செடான்;
வால்வோ எஸ்90 சொகுசு செடான், 2.0 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது. எக்ஸ்90 எஸ்யூவி உபயோகிக்கபடும் அதே இஞ்ஜின் தான் இந்த எஸ்90 சொகுசு செடானிலும் உபயோகிக்கபடுகிறது.
எனினும் இந்த மாடலுக்கு ஏற்ற திறனை வெளிபடுத்தும் வகையில், இதன் இஞ்ஜின் ட்யூன் செய்யபடுகிறது.

இஞ்ஜின் - வி40 ஹேட்ச்பேக்;
இஞ்ஜின் விஷயத்தில், மேம்படுத்தபட்ட வால்வோ வி40 ஹேட்ச்பேக்கிலும், முந்தைய வால்வோ வி40 ஹேட்ச்பேக்கில் இருந்த அதே அம்சங்களும் தொடரபடுகிறது.
வால்வோ வி40 ஹேட்ச்பேக், 4-சிலிண்டர், டி3, 2.0 லிட்டர் டர்போ டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின் 150 பிஹெச்பியையும், 350 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.
இதன் இஞ்ஜின், 6-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களின் தேர்வுகள் கொண்டுள்ளது.

டிசைன்;
வால்வோ எஸ்90 சொகுசு செடான் மற்றும் பொலிவுகூட்டபட்ட வால்வோ வி40 ஹேட்ச்பேக் ஆகிய இரு மாடல்களுக்கும் வால்வோவின் புதிய டிசைன் மொழி ஏற்கபட்டுள்ளது.
வால்வோ எஸ்90 செடான், பொலிவுகூட்டபட்ட வால்வோ வி40 ஹேட்ச்பேக், வால்வோ சிக்நேச்சர் தோர் ஹேம்மர்-ஸ்டைல் டிஆர்எல்-கள் கொண்டிருக்கும்.
இவற்றின் ரெகுலர் ட்ரிம் மாடல்களுக்கு, ஸ்போர்ட்டியான தோற்றம் வழங்கும் வகையில், இதன் வெளிப்புற தோற்றம் நன்கு செதுக்கபட்டது போல் மறுவடிவமைக்கபட்டுள்ளது.

போட்டி;
இந்திய சொகுசு வாகன சந்தைகளில், வால்வோ நிறுவனம் ஜெர்மானிய கார் உற்பத்தி நிறுவனங்களான ஆடி, பிஎம்டபுள்யூ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஆகிய நிறுவனத்தின் தயாரிப்புகளில் இருந்து கடும் போட்டியை எதிர்கொள்ள நேரிடும்.

அறிமுகம்?
வால்வோ எஸ்90 செடான், பொலிவுகூட்டபட்ட வால்வோ வி40 ஹேட்ச்பேக் இந்த ஆண்டில் அறிமுகம் செய்யபடும் என தகவல்கள் வெளியாகி வந்தாலும், எந்த மாடல் எப்போது வெளியாகும் என்பது குறித்த தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
ஸ்வீடனை மையமாக கொண்டு இயங்கும் வால்வோ நிறுவனம், முதலில் பொலிவுகூட்டபட்ட வால்வோ வி40 ஹேட்ச்பேக் பண்டிகை காலங்களுக்கு முன்னதாகவே அறிமுகம் செய்துவிடும் என தகவல்கள் வெளியாகிறது.
வால்வோ இந்தியா நிறுவனம், வால்வோ எஸ்90 செடான் காரை, பண்டிகை காலங்களை ஒட்டி அறிமுகம் செய்யும் என தெரிவிக்கபட்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;
வால்வோ நிறுவனம், இந்தியாவிற்குள் ஹைப்ரிட் மாடல்களை 2016-ஆம் ஆண்டிற்குள் கொண்டு வர முடிவு
எக்ஸ்சி90 தொடர்புடைய செய்திகள்
வால்வோ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








