வாகனங்களை டிராக்கிங் செய்யும் புதிய சாதனம் அறிமுகம்...!

By Meena

ஆன் - லைனில் பொருள்களை வாங்கும் நடைமுறை தற்போது அதிகரித்து வருகிறது. ஆர்டர் செய்தால் போதும்.... எங்கோ ஒரு மூலையில் தயாரித்த பொருள், அடுத்த ஓரிரு நாள்களில் பஜனை கோயில் தெரு, ராமசாமி வீட்டுக்கு டான் என்று வந்து சேருகிறது.

அவ்வாறு பொருள்களை டெலிவரி செய்யும் பார்சல் சர்வீஸ்களின் சரக்குப் போக்குவரத்து சேவைக்குப் பின்னால் பல ரகசியங்கள் உள்ளன. வேறு எங்கோ இருந்து அனுப்பி வைக்கப்பட்ட பொருள்களைப் பெற்றுக் கொள்ளும் லோக்கல் நிறுவனங்கள் பொய்யான தகவல்களைத் தெரிவிக்க முடியாது. சரக்கு வந்து சேரவில்லை, டெலிவரிக்கு இன்னும் லேட்டாகும் என எந்த சாக்கு போக்கும் செல்லுபடியாகாது. முழுக்க, முழுக்க அனைத்தும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஃப்லீட் மேனேஜ்மென்ட் என்று பெயர். அந்தத் துறையில் பிரபலமாக இருக்கும் ஃபாஸ்ட் டிராக்கர்ஸ் நிறுவனம், தற்போது புதிய டிராக்கிங் சாதனத்தை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

டிராக்கிங் சாதனம்

அந்த மாடலுக்கு எஃப்டி 007 என்று பெயர். மிகவும் கையடக்கமாக இருக்கும் இந்த சாதனத்தில் ஜிபிஎஸ் ஆண்டனா பொருத்தப்பட்டுள்ளது. எனவே, இதனை சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் பொருத்திவிட்டால் போதும். வண்டி எங்கு செல்கிறது? எந்த வழியாகப் போகிறது? எத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது? என்பன குறித்த தகவல்கள் நம்மை வந்தடைந்து விடும். இதைத் தவிர ஆபத்து காலங்களில் எச்சரிக்கை அலாரம் ஒலிக்கும் வசதியும் இந்த கருவியில் உள்ளது.

பேட்டரிகள் இதில் பொருத்தப்பட்டு இருப்பதால், சரக்கை ஏற்றி வந்த வாகனம் பயணித்த வழிகளை நாம் மீண்டும் ஆய்வு செய்ய முடியும். இப்படி பல்வேறு அம்சங்களுடன் அந்த சாதனம் சந்தைக்கு வந்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஃபாஸ்ட் டிராக்கர்ஸ் நிறுவன இயக்குநர் அமித் கல்ரா, சரக்குப் போக்குவரத்தில் நிலவும் சவால்களை எதிர்கொள்ளவும், உரிய நேரத்தில் அவற்றைக் கொண்டு சேர்க்கவும் வசதியாக இந்த சாதனைத்தை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம் என்றார்.

அளவில் மிகச் சிறியதாக இருப்பதால் எஃப்டி 007 சாதனத்தைக் கையாளுவது சுலபம் என்கிறார் அவர். அதற்கான விலையும் நியாயமாகவே நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார் அமித் கல்ரா. சந்தையில் இதுபோன்ற சாதனங்கள் ஏற்கெனவே பல அறிமுகமாகியுள்ள நிலையில், எஃப்டி 007 கருவியின் மீது வாடிக்கையாளர்களின் பார்வையை விழ வைப்பது அதன் செயல்பாட்டில்தான் உள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #o
English summary
Worried About Tracking Your Commercial Vehicle? Then Here Is A Solution.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X