எமன் சாலையான யமுனா எக்ஸ்பிரஸ் சாலை... அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!

By Saravana Rajan

நாட்டிலேயே அதிக உயிரிழப்புகளை சந்திக்கும் சாலைகளில் ஒன்றாக, யமுனா எக்ஸ்பிரஸ் சாலை மாறியிருக்கிறது. கடந்த ஆண்டு இந்த சாலையில் நடந்த விபத்துக்களில் 1,585 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருக்கிறது.

விரைவான போக்குவரத்து, எரிபொருள் சேமிப்பு, விபத்து தவிர்ப்பு உள்ளிட்ட அம்சங்களுடன்தான் இதுபோன்ற விரைவு சாலைகள் அமைக்கப்படுகின்றன. ஆனால், அதன் நோக்கம் தற்போது வேறு விதத்தில் சென்று கொண்டிருக்கிறது.

டெல்லி- ஆக்ராவை சாலை மார்க்கத்தில் விரைவாக இணைக்கும் வகையில், 165 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட்டிருக்கும் இந்த சாலையில் தற்போது விபத்துக்கள் என்பது தினசரி நிகழ்வாகவே மாறிவிட்டது. கடந்த 2014ம் ஆண்டில் இந்த சாலையில் நடந்த விபத்துக்களில் 801 பேர் உயிரிழந்தனர்.

ஆனால், கடந்த ஆண்டில் உயிரிழப்பு கிட்டத்தட்ட 100 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆம், கடந்த ஆண்டு இந்த சாலையில் நடந்த விபத்துக்களில் மட்டும் 1,585 பேர் உயிரிழந்துள்ளதாக உத்தரபிரதேச போலீசார் வெளியிட்டிருக்கும் புள்ளிவிபர குறிப்பு தெரிவிக்கிறது. அதாவது, வாரத்திற்கு சராசரியாக 30 பேர் வரை உயிரிழக்கின்றனர்.

இந்த சாலையில் நடைபெறும் விபத்துக்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் ஒரே காரணம், வேகம், வேகம், வேகம் மட்டுமே என்று போலீசார் தெரிவிக்கின்றனர். அதிவேகத்தில் செல்லும்போது வாகனங்களின் டயர் சூடாகி வெடிப்பதும் அதிக விபத்துக்களுக்கு காரணமாகி இருக்கிறது.

இந்த சாலையில் கனரக வாகனங்கள் மணிக்கு 60 கிமீ வேகம் வரையிலும், கார் உள்ளிட்ட இதர வாகனங்களுக்கு மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த சாலையில் வேக வரம்பை மீறிச் செல்வதும் வழக்கமாகியுள்ளது.

யமுனா எக்ஸ்பிரஸ் சாலை என்றில்லை. தற்போது பல நெடுஞ்சாலைகளில் கார் உள்ளிட்ட வாகனங்கள் கண்மூடித்தனமாக அதிவேகத்தில் செல்வது நெடுஞ்சாலையில் பயணிப்போரின் உயிருக்கு ஆபத்தாக அமைந்து வருகிறது.

சாலை பாதுகாப்பு குறித்து போதிய விழிப்புணர்வும், அனுபமின்மையும் விபத்துக்களுக்கு காரணம். தவிரவும், நெடுஞ்சாலைகளில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, பாதுகாப்பு வசதிகளையும் மேம்படுத்தப்படுத்துவதும் அவசியம். ஆனால், வாகன ஓட்டுனர்கள் சுயக் கட்டுப்பாடுடன் இருப்பதே விபத்துக்களை குறைக்கவும், தவிர்ப்பதற்குமான ஒரே வழியாக இருக்கும்.

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

இனி ஆதார் எண் இல்லாமல் வாகனங்களை பதிவு செய்ய முடியாது!

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

ஃபோர்ஸின் ஃபார்முலா 1 பந்தயத்திற்கான கார் அறிமுகம்

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

விஜய் மல்லையாவின் ஃபார்முலா-1 காரை காய்ச்சி எடுக்கும் நெட்டிசன்கள்!

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்கை கலங்கடித்த கார் பந்தய வீரர்

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

கார் மீது மோதி சுக்குநூறான கவாஸாகி சூப்பர் பைக்...!!

More from DriveSpark

Article Published On: Wednesday, June 15, 2016, 11:50 [IST]
English summary
Yamuna Expressway becoming deadliest Road In India?
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+