10 ஆண்டுகளாக மக்கள் விரும்பும் காராக மாருதி ஸ்விஃப்ட் திகழ்வதன் பின்னணி..!!

Written By:

மாருதிசுசுகியின் ஸ்விப்ஃட் காருக்கு அறிமுகமே தேவையில்லை. இந்தியாவின் மிகவும் பிரபலமான ஹேட்ச்பேக் காராக பல ஆண்டுகளாக வலம்வந்து கொண்டிருக்கிறது.

மாருதி ஸ்விப்ஃட் கார் நம்பர்-1 ஆக வலம் வர காரணம் என்ன?

மாருதி ஸ்விப்ஃட் கார் இந்தியாவில் கடந்த 2005ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

12 ஆண்டுகளாக இந்தியாவின் முன்னணி கார் மாடலாக மாருதி சுசுகி ஸ்விப்ஃட் கார் திகழ காரணங்கள் என்ன என்பது குறித்து விரிவாக காணலாம்.

பிராண்ட் பெயர்

பிராண்ட் பெயர்

பெயரில் என்ன இருக்கிறது என தோனலாம். ஆனால் இந்தக் காரை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய முக்கிய காரணமே இந்த பிராண்டின் பெயர் தான். கடந்த 12 ஆண்டுகளில் நம்பகத்தன்மைமிக்க பிராண்டாக மாருதிசுசுகி ஸ்விப்ஃட் உருவெடுத்திருக்கிறது. இதற்கு பின்னாள் பல காரணங்கள் இருக்கிறது.

ஓட்டுவதற்கு எளிதானது

ஓட்டுவதற்கு எளிதானது

ஸ்விப்ஃட் கார் டிரைவ் செய்ய அருமையாகவும், ஹேண்லிங் செய்ய எளிமையாகவும் இருக்கிறது. இதன் டிரைவிங் அனுபவம் சிறப்பானது என்பதாலும் இந்த காரை அதிகம் பேர் தேர்வு செய்கின்றனர்.

ஓட்டுவதற்கு எளிதானது

ஓட்டுவதற்கு எளிதானது

எளிதான ஹேண்ட்லிங் என்பதால் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பாரபட்சமின்றி இந்தக் காரை விரும்புகின்றனர்.

சர்வீஸ் மற்றும் உதிரி பாகங்கள்

சர்வீஸ் மற்றும் உதிரி பாகங்கள்

எந்த ஒரு காரையும் வாங்கும் போது அதன் சர்வீஸ் நிலையங்கள் எண்ணிக்கையை மனதில் கொண்டு தான் வாடிக்கையாளர்கள் கார் நிறுவனங்களை தெரிவு செய்கின்றனர்.

சர்வீஸ் மற்றும் உதிரி பாகங்கள்

சர்வீஸ் மற்றும் உதிரி பாகங்கள்

அந்த வகையில் இந்தியாவிலேயே அதிகமான சர்வீஸ் நிலையங்கள் கொண்ட நிறுவனம் மாருதி தான். இந்தியாவின் எந்த மூலையிலும் மாருதி ஸ்விப்ஃட் காரை சர்வீஸ் செய்யலாம், மற்றும் உதிரி பாகங்களும் எளிதாக கிடைக்கும்.

மாருதி நிறுவனத்திற்கு நாட்டில் மொத்தம் 1566 நகரங்களில் 3215 சர்வீஸ் நிலையங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சிகரமான தோற்றம்

கவர்ச்சிகரமான தோற்றம்

மாருதி ஸ்விப்ஃட் கார் கவர்ச்சிகரமான தோற்றம் மற்றும் டிசைன் கொண்டிருப்பதால் இந்தக் கார் அதிக வாடிக்கையாளர்களால் தேர்வு செய்யப்பட மற்றொரு முக்கிய காரணம் ஆகும்.

குறைந்த பராமரிப்பு செலவு

குறைந்த பராமரிப்பு செலவு

ஸ்விப்ஃட் கார்களை வாடிக்கையாளர்கள் அதிகம் தேர்வு செய்வதற்கு மேலும் ஒரு முக்கிய காரணம் அது குறைந்த பராமரிப்பு செலவு கொண்டிருப்பது என்பதாலேயே.

ஃபியட் எஞ்சின்

ஃபியட் எஞ்சின்

2007 ஆம் ஆண்டில் ஸ்விப்ஃட் டீசல் கார் அறிமுகமான போது, அதுவரையிலும் இருந்த கார்களில் இதுவே சமீபத்திய தொழில்நுட்பம் கொண்ட டீசல் இஞ்சின் ஆக இருந்தது. இதில் சிஆர்டிஐ டீசல் இஞ்சின் இருக்கிறது.

இதன் 1.3 லிட்டர் டீசல் இஞ்சின் அதிகபட்சமாக 74 பிஹச்பி ஆற்றலையும், 190 என்எம் டார்க்கையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மறுவிற்பனை

மறுவிற்பனை

ஸ்விஃப்ட் காரை கண்ணை மூடிக்கொண்டு வாங்கலாம் என்று ஆட்டோமோடிவ் துறையைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் கூறுவதுண்டு.

மறுவிற்பனை

மறுவிற்பனை

காரை பயன்படுத்திவிட்டு மறுவிற்பனை செய்ய நினைக்கும் போது நல்ல விலை கிடைப்பதில்லை. ஆனால் ஸ்விப்ஃட் கார் மட்டுமே ரீசேல் வகையிலும் அதிக டிமாண்ட் கொண்டிருக்கிறது.

இந்தியாவிலேயே மறுவிற்பனையில் ஸ்விப்ஃட் கார் டிமாண்ட் மற்றும் அதிக ரீசேல் வேல்யூ கொண்டிருப்பதில் முதல் இடத்தை பெறுகிறது.

மாடிஃபை

மாடிஃபை

மறுவிற்பனையை போல இந்தியாவிலேயே அதிகம் மாடிஃபை செய்யப்படும் கார்களில் ஸ்விப்ஃட் தான் முதல் இடத்தை பெறுகிறது.

மாடிஃபை

மாடிஃபை

பாடி கிட், ரீமேப், எக்ஸாஸ்ட், லைட்கள், ஆடியோ சிஸ்டம், சஸ்பென்ஷன், ரிம், டயர்கள் என எந்த அம்சத்திலும் கச்சிதமாக மாடிஃபை செய்ய ஏற்ற மாடலாக ஸ்விப்ஃட் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கார் வாங்கும் பலரும் தற்போது மாடிஃபை கலாச்சாரத்தை பின்பற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக மாடிஃபை செய்ய ஏற்ற காராக இருப்பதால் ஸ்விப்ஃட் கார் அதிக டிமாண்டை பெருகிறது.

நம்பகத்தன்மை

நம்பகத்தன்மை

ஹைவே மற்றும் நகரச் சாலைகளில் பயன்படுத்த சிறந்த மாடல் என்ற நம்பகத்தன்மையை மக்கள் மனதில் ஸ்விப்ஃட் கார்கள் பெறிருக்கின்றன.

பாதுகாப்பு

பாதுகாப்பு

இந்தியர்கள் பொதுவாக பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் தற்போது இந்த சூழல் மாறி வருகிறது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

ஸ்விட்ப்ஃட் காரின் குறிப்பிட்ட வேரியண்ட்களில் 2 ஏர்பேக்குகள், ஏபிடி தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் ஆகியவை தரப்படுகின்றன.

மாருதி ஸ்விப்ஃட் கார் நம்பர்-1 ஆக வலம் வர காரணம் என்ன?

ஏர்பேக்குகள் ஸ்டேண்டர்ட் அம்சமாக ஸ்விப்ஃட் கார்களில் தரப்படாத காரணத்தினால் 2016ல் நடந்த உலகலாவிய சோதனை தர மதிப்பீட்டில் இவை 0 ஸ்டார்களே பெற்றது குறிப்பிடத்தக்கது.

English summary
Read in Tamil about why maruti suzuki swift still at no.1 car in india.
Story first published: Saturday, June 3, 2017, 12:21 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark