புதிய மாருதி டிசையர் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்!

அடுத்த மாதம் விற்பனைக்கு வர இருக்கும் புதிய மாருதி டிசையர் காரில் இடம்பெற்றிருக்கும் 10 முக்கிய விஷயங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

By Saravana Rajan

இந்தியாவின் மிக அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றான மாருதி டிசையர் கார் புதிய தலைமுறை மாடலாக விரைவில் விற்பனைக்கு வருகிறது. இந்த நிலையில், இந்த காரில் இடம்பெற்றிருக்கும் 10 முக்கிய சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய மாருதி டிசையர் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்!

மாருதி நிறுவனத்தின் வெற்றிகரமான மாடலாக வலம் வரும் ஸ்விஃப்ட் காரின் அடிப்படையிலான செடான் மாடலாக 2008ம் ஆண்டு வெளியிடப்பட்டது. 2012-ம் ஆண்டில் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட காம்பேக்ட் செடான் கார் மாடலாக இரண்டாம் தலைமுறை கண்டது. 2015ல் சிறிய மாற்றங்களுடன் அறிமுகமானது. இந்த நிலையில், தற்போது மூன்றாம் தலைமுறை மாடலாக வெளிவருகிறது.

புதிய மாருதி டிசையர் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்!

மூன்றாம் தலைமுறை மாருதி டிசையர் கார் வடிவமைப்பிலும், வசதிகளிலும் மிகவும் பிரிமியம் மாடலாக வெளிவர இருக்கிறது. முன்புற அமைப்பு முற்றிலும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. முகப்பு க்ரில், ஹெட்லைட், பானட், பம்பர் என அனைத்தும் புதிய வடிவமைப்பை பெற்றுள்ளது. டெயில் லைட்டின் வடிவமைப்பும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய மாருதி டிசையர் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்!

இன்டீரியர் மிகவும் பிரிமியமாக இருக்கும் என்பது இதுவரை வெளியான ஸ்பை படங்கள் மூலமாக உறுதியாகி உள்ளது. ஃபாக்ஸ் வுட் பேனல்கள் மற்றும் க்ரோம் பீடிங்குகளுடன் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. டேஷ்போர்டு அமைப்பும் முற்றிலும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய மாருதி டிசையர் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்!

மாருதி பலேனோ, சியாஸ் கார்களில் இருப்பது போலவே, டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும். இந்த டச்ஸ்கிரீன் சிஸ்டமானது ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும். இதுதவிர, வழக்கமான புளூடூத், யுஎஸ்பி போர்ட், ஆக்ஸ் போர்ட் வசதிகளும் இடம்பெற்றிருக்கும்.

புதிய மாருதி டிசையர் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்!

டாப் வேரியண்ட்டில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், பகல்நேர விளக்குகள், புதிய அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டு இருக்கும்.

புதிய மாருதி டிசையர் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்!

தற்போதைய மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள்தான் புதிய மாடலிலும் பயன்படுத்தப்படும். அதேநேரத்தில், டீசல் மாடலில் எஸ்விஎச்எஸ் எனப்படும் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் இடம்பெறும் என தெரிகிறது. இதனால், சிறப்பான மைலேஜ் மற்றும் அதிக டார்க் கொண்டதாக இருக்கும்.

புதிய மாருதி டிசையர் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்!

புதிய மாருதி டிசையர் காரின் பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். டீசல் மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் தவிர்த்து, ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படும்.

புதிய மாருதி டிசையர் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்!

புதிய மாருதி டிசையர் கார் பல புதிய வண்ணங்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதுவரை வந்த ஸ்பை படங்களின்படி, சிவப்பு, நீலம், பழுப்பு ஆகிய வண்ணங்களில் மாருதி டிசையர் வருவது உறுதியாகி உள்ளது.

புதிய மாருதி டிசையர் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்!

ஹூண்டாய் எக்ஸென்ட், டாடா டீகோர், ஃபோக்ஸ்வேகன் அமியோ, ஃபோர்டு ஆஸ்பயர், ஹோண்டா அமேஸ் உள்ளிட்ட கார்களுடன் வழக்கம்போல் போட்டியிடும். மிகவும் பிரிமியம் வசதிகளுடன் வருவதால், வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து இழுக்கும் என நம்பலாம்.

புதிய மாருதி டிசையர் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்!

தற்போது மாருதி டீலர்களில் ரூ.5,000 முன்பணத்துடன் இந்த புதிய டிசையர் காருக்கு முன்பதிவு துவங்கி இருக்கிறது. அதிக எண்ணிக்கையில் முன்பதிவு இருக்கும் என்பதால், வாடிக்கையாளர்கள் இப்போதே முன்பதிவு செய்து வருகின்றனர். தற்போதைய மாடலைவிட சற்றே கூடுதல் விலையில் புதிய மாருதி டிசையர் கார் வருகிறது.

Most Read Articles
English summary
10 Things You Need To Know About New-Generation Maruti Suzuki Dzire.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X