ரூ.26,000 முதல் ரூ.1 லட்சம் வரை கார்களுக்கு தள்ளுபடி அறிவித்த டாடா மோட்டார்ஸ்... காரணம் இதுதான்..!!

Written By:

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் குறிப்பிட்ட சில மாடல் கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை தளுப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ரூ. 1 லட்சம் வரை கார்களுக்கு தள்ளுபடி வழங்கும் டாடா..!!

2017ம் ஆண்டு விரைவில் விடைபெறவுள்ளது. அதற்கு சிறப்பான குட்-பை சொல்லும் விதமாக டாடா மோட்டார்ஸ் சில குறிப்பிட்ட கார் மாடல்களுக்கு தள்ளுபடி விலைகளை அறிவித்துள்ளது.

ரூ. 1 லட்சம் வரை கார்களுக்கு தள்ளுபடி வழங்கும் டாடா..!!

அதன்படி இம்மாதம் டாடா கார்கள் வாங்குவோருக்கு வேண்டி, சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடி ஆகியவை வழங்கப்படவுள்ளன.

கடந்த நவம்பர் மாத விற்பனை டாடாவிற்கு 35% வளர்ச்சியை தந்துள்ளது. இதை டிசம்பரிலும் தொடர டாடா நினைக்கிறது.

ரூ. 1 லட்சம் வரை கார்களுக்கு தள்ளுபடி வழங்கும் டாடா..!!

மொத்த 2016ம் ஆண்டு விற்பனையை விட கடந்த நவம்பர் விற்பனை டாடா மோட்டார்ஸிற்கு பெரியளவிலான வளர்ச்சியை இந்திய சந்தையில் பெற்று தந்துள்ளது.

ரூ. 1 லட்சம் வரை கார்களுக்கு தள்ளுபடி வழங்கும் டாடா..!!

அதை மேலும் தொடர நினைக்கும் டாடா, 2017ம் ஆண்டின் இறுதி சலுகையாக தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு ரூ.26,000 முதல் ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி வழங்குகிறது.

Recommended Video - Watch Now!
[Tamil] 2018 Hyundai Verna Indian Model Unveiled - DriveSpark
ரூ. 1 லட்சம் வரை கார்களுக்கு தள்ளுபடி வழங்கும் டாடா..!!

பல்வேறு நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வரும் டாடா மோட்டார்ஸ், அது தயாரிக்கும் கார்களை வாங்க விரும்புவோருக்கு வேண்டி 100 சதவீத நிதியுதவிகளை வழங்குகிறது.

ரூ. 1 லட்சம் வரை கார்களுக்கு தள்ளுபடி வழங்கும் டாடா..!!

இப்படி ஒரு வசதியிருக்கும் பட்சத்தில் ரூ.1 மட்டும் முன்பணமாக செலுத்தி, டாடாவின் கார்களை வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்ல முடியும்.

ரூ. 1 லட்சம் வரை கார்களுக்கு தள்ளுபடி வழங்கும் டாடா..!!

இதனடிப்படையில், இந்தியாவில் 2017 ஆண்டின் இறுதி விற்பனை சலுகை டாடாவின் ஹெக்ஸா, டியாகோ, டிகோர், செஸ்ட் மற்றும் ஸ்டார்ம் உள்ளிட்ட கார் மாடல்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 1 லட்சம் வரை கார்களுக்கு தள்ளுபடி வழங்கும் டாடா..!!

அந்தந்த மாநிலங்களில் விற்பனையாகும் விலையில் இருந்து, டியோகா கார் ரூ.26,000, டிகோர் கார் ரூ.32,000,

செஸ்ட் ரூ.68,000, ஹெக்ஸா ரூ.78,000 மற்றும் ஸ்டார்ம் காருக்கு ரூ.1 லட்சம் என தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன.

ரூ. 1 லட்சம் வரை கார்களுக்கு தள்ளுபடி வழங்கும் டாடா..!!

இந்தியாவில் பண்டிகை கால விற்பனை அக்டோபரில் தொடங்கி நவம்பர் வரை நீடித்தது. இதில் டாடாவின் தயாரிப்புகள் பெரியளவில் விற்பனை திறனை எட்டின.

ரூ. 1 லட்சம் வரை கார்களுக்கு தள்ளுபடி வழங்கும் டாடா..!!

அதை 2017 இறுதி வரை தக்கவைத்துக்கொள்ளும் விதமாக, புதிய சலுகைகள் மற்றும் தள்ளுபடி வழங்கப்பட்டு வருவதாக டாடா மோட்டார்ஸின் விளம்பரம் மற்றும் வியாபார பிரிவு தலைவர் தெரிவித்தார்.

ரூ. 1 லட்சம் வரை கார்களுக்கு தள்ளுபடி வழங்கும் டாடா..!!

இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் தொடர்ந்து பல புதிய கார்கள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது.

ரூ. 1 லட்சம் வரை கார்களுக்கு தள்ளுபடி வழங்கும் டாடா..!!

அதற்கு சான்றாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வெளியான நெக்ஸான் எஸ்யூவி கார், டாடாவிற்கு பெரிய ஹிட்டாக அமைந்து உள்ளது.

ரூ. 1 லட்சம் வரை கார்களுக்கு தள்ளுபடி வழங்கும் டாடா..!!

ஆட்டோதுறை எதிர்காலத்தில் மின்சார பயன்பாட்டிற்கு மாற முயன்று வரும் சூழ்நிலையில், மின்சார ஆற்றல் பெற்ற நெக்ஸான் எஸ்யூவி காரை தயாரிக்க டாடா மோட்டார்ஸ் முதற்கட்ட பணிகளை தொடங்கியுள்ளது.

English summary
Read in Tamil: 2017 End Sales Hot Offers On Tata Cars This December. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark