பிஎஸ்4 எஞ்சின் கொண்ட 2017 ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

Written By:

இந்திய அரசின் உத்தரவை ஏற்று பிஎஸ்4 பொருத்தப்பட்ட எஞ்சின் கொண்ட குர்கா எஸ்.யூ.வி ரக மாடலை ஃபோர்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

2017 பிஎஸ்4 குர்கா எஸ்யூவி காரை வெளியிட்டது ஃபோர்ஸ்!

இந்தியாவை சேர்ந்த ஃபோர்ஸ்று நிறுவனத்தின் புகழ்பெற்ற மாடல் கார் குர்கா எஸ்.யூ.வி. இந்தியாவில் மட்டுமில்லாமல் இது உலகளவில் பல்வேறு நாடுகளில் பிரபலமான ஒரு மாடலாக உள்ளது.

2017 பிஎஸ்4 குர்கா எஸ்யூவி காரை வெளியிட்டது ஃபோர்ஸ்!

கடந்த ஏப்ரல் முதல் பிஎஸ்4 பொருத்தப்பட்ட வாகனங்களை மட்டுமே வாங்க, விற்க மற்றும் பதிவு செய்யவேண்டும் என்ற உத்தரவை நடைமுறைப்படுத்தியது மத்திய அரசு.

2017 பிஎஸ்4 குர்கா எஸ்யூவி காரை வெளியிட்டது ஃபோர்ஸ்!

இதை ஏற்று தற்போது ஃபோர்ஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற குர்கா எஸ்யூவி கார் பாரத் ஸ்டேஜ் 4 எஞ்சின் கொண்டு மாசு விதிகளுக்கு கட்டுப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

Recommended Video - Watch Now!
Jeep Compass Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
2017 பிஎஸ்4 குர்கா எஸ்யூவி காரை வெளியிட்டது ஃபோர்ஸ்!

குர்கா எஸ்யூவி காரில் உள்ள ஆல் வீல் டிரைவிங் மற்றும் 2 வீல் டிரைவிங் என இரண்டு மாடல்களும் பிஎஸ் 4 விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளன.

2017 பிஎஸ்4 குர்கா எஸ்யூவி காரை வெளியிட்டது ஃபோர்ஸ்!

குர்கா எஸ்யூவி காரில் உயர் ரக சி.இன்.சி ரக எஃகு பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மல்டி லிங்க் காயில் ஸ்பிரிங் பெற்ற இந்தியாவில் முதல் ஆஃப்-ரோடு காரும் குர்கா எஸ்யூவி தான்.

2017 பிஎஸ்4 குர்கா எஸ்யூவி காரை வெளியிட்டது ஃபோர்ஸ்!

3 மற்றும் 5 கதவுகளுடன், 5 முதல் 8 இருக்கைகள் வசதியை ஃபோர்ஸின் குர்கா எஸ்யூவி கார் பெற்றுள்ளது. மேலும் இதில் எக்ஸ்பிடியேசன் மற்றும் எக்ஸ்புளோரர் என இருவகை மாடல்கள் வருகிறது.

2017 பிஎஸ்4 குர்கா எஸ்யூவி காரை வெளியிட்டது ஃபோர்ஸ்!

2.6 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட குர்கா எஸ்யூவி கார் 85 பிஎச்பி பவர் மற்றும் 230 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

2017 பிஎஸ்4 குர்கா எஸ்யூவி காரை வெளியிட்டது ஃபோர்ஸ்!

மெர்சிடிஸ் ஜி வேகன் எஸ்யூவி காரை பின்பற்றி வடிவமைக்கப்பட்ட இந்த காரில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

2017 பிஎஸ்4 குர்கா எஸ்யூவி காரை வெளியிட்டது ஃபோர்ஸ்!

ஆன் -ரோடு, ஆஃப்-ரோடு தேர்வுகளுடன் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப கருப்பு, சில்வர், வெள்ளை மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது 2017 ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி கார்.

English summary
Read in Tamil: 2017 Force Gurkhas BS4 Model Launched in India for Sale. Click for Details...
Story first published: Tuesday, September 12, 2017, 8:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark