மீண்டும் ஒரு வரலாற்று விற்பனை சாதனையை படைத்தது மாருதி டிசையர் கார்!

மாருதி டிசையர் கார் விற்பனையில் கலக்கி வருகிறது. மீண்டும இந்தியாவின் நம்பர்-1 இடத்தை பிடித்து அசத்தி உள்ளது.

By Saravana Rajan

மாருதி டிசையர் கார் விற்பனையில் மாதாமாதம் புதிய சாதனையை படைத்து வருகிறது. கடந்த மாதம் அந்த காரின் விற்பனை புதிய உச்சத்தை தொட்டு வியக்க வைத்திருக்கிறது.

புதிய மாருதி டிசையர் கார் விற்பனையில் சாதனை!

மாருதி நிறுவனத்தின் விற்பனையில் மிக முக்கிய பங்களிப்பை மாருதி டிசையர் கார் வழங்கி வருகிறது. கடந்த மே மாதம் மூன்றாம் தலைமுறை மாருதி டிசையர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய மாருதி டிசையர் கார் விற்பனையில் சாதனை!

இந்த நிலையில், துவக்கத்தில் சராசரி விற்பனையை பதிவு செய்த, அந்த கார் கடந்த இரு மாதங்களாக விற்பனையில் இமாலய சாதனையை படைத்து வருகிறது. ஆம், கடந்த ஆகஸ்ட் மாதம் 31,000 டிசையர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

Recommended Video

Datsun rediGO Gold 1.0-Litre Launched In India | In Tamil- DriveSpark தமிழ்
புதிய மாருதி டிசையர் கார் விற்பனையில் சாதனை!

இதன்மூலமாக, ஒரு மாதத்தில் மிக அதிக அளவு விற்பனை எண்ணிக்கையை தொட்ட மாடல் என்ற பெருமையை பெற்றது. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் மாருதி டிசையர் காரின் விற்பனை மேலும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது.

புதிய மாருதி டிசையர் கார் விற்பனையில் சாதனை!

கடந்த மாதத்தில் 34,000 மாருதி டிசையர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும், கிட்டத்தட்ட 40,000 வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து விட்டு இந்த காரை டெலிவிரி பெற காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மாருதி டிசையர் கார் விற்பனையில் சாதனை!

மூன்றாம் தலைமுறையாக வந்திருக்கும் புதிய மாருதி டிசையர் காரில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, வடிவமைப்பில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு இப்போது முழுமையான செடான் கார் போன்ற தோற்றத்தை பெற்றிருக்கிறது.

புதிய மாருதி டிசையர் கார் விற்பனையில் சாதனை!

அத்துடன், இன்டீரியரிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிய தொழில்நுட்ப வசதிகள் சேர்க்கப்பட்டன. இதனால், தற்போது மாருதி டிசையர் காரின் விற்பனை கிராஃப் சர்ரென்று எகிறி வருகிறது.

புதிய மாருதி டிசையர் கார் விற்பனையில் சாதனை!

புதிய மாருதி டிசையர் காரின் பெட்ரோல், டீசல் மாடல்கள் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைப்பதும் வரவேற்பு வெகுவாக உயர்ந்ததற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

புதிய மாருதி டிசையர் கார் விற்பனையில் சாதனை!

நம்பகமான 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுள்ளன. அதிக மைலேஜ், சிறப்பான விலை போன்றவையும் இந்த காரின் விற்பனையை அதிகரிக்க செய்ய காரணங்கள்.

Most Read Articles
English summary
2017 Maruti Dzire Becomes India’s Best Selling Car Again.
Story first published: Wednesday, October 11, 2017, 20:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X