மாருதி ராலி பந்தயம்: கனமழையிலும் அனல் பரப்பிய போட்டியாளர்கள்!

Written By:

மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயத்தின் மூன்றாம் நாளான நேற்று கனமழைக்கு நடுவிலும் போட்டியாளர்கள் சவால்களை கடந்து துடிப்புடன் பந்தயத்தை எதிர்கொண்டனர். நேற்றைய தின முடிவில் சுரேஷ் ராணா மற்றும் அஷ்வின் நாயக் இணை முன்னிலை பெற்றது.

மாருதி ராலி கார் பந்தயம்: கனமழையிலும் அனல் பரப்பிய போட்டியாளர்கள்!

மாருதி தக்ஷின் டேர் ராலி பெங்களுரிலிருந்து சித்ரதுர்காவை கடந்து நேற்று பெல்காம் நோக்கி நகர்ந்தது. நேற்றைய தினம் கனமழைக்கு நடுவே போட்டியாளர்கள் சவால்களை கடந்து முன்னிலை பெறுவதற்காக துடிப்புடன் செயல்பட்டனர்.

Recommended Video - Watch Now!
Kawasaki Ninja Z1000 Launched InTamil - DriveSpark தமிழ்
மாருதி ராலி கார் பந்தயம்: கனமழையிலும் அனல் பரப்பிய போட்டியாளர்கள்!

மொத்தம் 495 கிமீ தூரத்துக்கு நேற்றைய போட்டி நடந்தது. இதில், 106 கிமீ தூரம் பல்வேறு சவாலான நிலைகளை கடந்து செல்லும் வகையில் வழித்தடம் கொடுக்கப்பட்டு இருந்தது.

மாருதி ராலி கார் பந்தயம்: கனமழையிலும் அனல் பரப்பிய போட்டியாளர்கள்!

போட்டியின் முதல் இரண்டு தினங்களில் சாம்ராட் யாதவ் மற்றும் எஸ்என் நிஸாமி இணை முன்னிலை வகித்தது. மூன்றாம் நாள் முடிவில் சுரேஷ் ராணா மற்றும் அஷ்வின் நாயக் இணை முன்னிலை பெற்றது.

மாருதி ராலி கார் பந்தயம்: கனமழையிலும் அனல் பரப்பிய போட்டியாளர்கள்!

மாருதி கிராண்ட் விட்டாரா கார் பயன்படுத்திய இந்த இணை பந்தய தூரத்தை 6 மணி 59 நிமிடங்கள் 2 நொடிகளில் கடந்தனர். முதல் இரண்டு நாட்கள் போட்டியில் முன்னிலை வகித்த சாம்ராட் யாதவ் மற்றும் எஸ்எல் நிஸாமி ஜோடி சிறிய வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தை பிடித்தனர்.

மாருதி ராலி கார் பந்தயம்: கனமழையிலும் அனல் பரப்பிய போட்டியாளர்கள்!

அல்டிமேட் கார்ஸ் பிரிவில் மூன்றாவது இடத்தை சந்தீப் ஷர்மா மற்றும் அவரது கோ டிரைவர் கரண் ஆர்யா ஜோடி பிடித்தது. இவர்கள் பந்தய தூரத்தை 7 மணி 5 நிமிடங்கள் 46 நொடிகளில் கடந்தனர்.

மாருதி ராலி கார் பந்தயம்: கனமழையிலும் அனல் பரப்பிய போட்டியாளர்கள்!

அல்டிமேட் பைக்ஸ் பிரிவில் ஆர்.நட்ராஜ் முன்னிலை பெற்றார். பந்தய தூரத்தை 4 மணி 29 நிமிடங்கள் 30 நொடிகளில் அவர் கடந்தார். இரண்டாவது இடத்தை அப்துல் வாலீத் பிடித்தார். இவர் 4 மணி 35 நிமிடங்கள் 26 நொடிகளில் கடந்தார். மூன்றாவது இடத்தை சஞ்சய் குமார் பிடித்தார். இவர் பந்தய தூரத்தை 24 மணி 35 நிமிடங்கள் 57 நொடிகளில் கடந்தார்.

மாருதி ராலி கார் பந்தயம்: கனமழையிலும் அனல் பரப்பிய போட்டியாளர்கள்!

இன்று நான்காவது நாள் பந்தயம் தென் இந்தியாவிலிருந்து நகர்ந்து மேற்கு இந்தியாவின் கோல்ஹாப்பூரில் நிறைவடைய இருக்கிறது. இந்த போட்டியின் நிகழ்வுகளை தொடர்ந்து படிக்க டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் தொடர்பில் இருங்கள்.

English summary
Suresh Rana and Ashwin Naik took the lead at the end of Day 3 of the 2017 Maruti Suzuki Dakshin Dare. Driving their Maruti Suzuki Grand Vitara, the duo from Team Maruti Suzuki covered the distance of 495 kms of which 106 kms were on stages, in 06:59:02.
Story first published: Thursday, July 20, 2017, 14:27 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more