மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தயத்தில் வெற்றி பெற்றவர்கள் விபரம்!

Written By:

மினி டக்கார் என்று இந்தியர்களால் குறிப்பிடப்படும் சவால்கள் நிறைந்த மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தயம் டெல்லியில் துவங்கி ஜோத்பூரில் நிறைவு பெற்றது. கடந்த வாரம் 5 நாட்கள் விறுவிறுப்புடன் நடந்தது.

 மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தயத்தில் வெற்றி பெற்றவர்கள் விபரம்!

ராஜஸ்தான் பாலைவனத்தில் பந்தயத்தின் பெரும் பகுதி நடந்தது. கடும் சவால்கள் நிறைந்த புதை மணல் நிறைந்த பாலைவனப் பகுதியில், கடுமையான சீதோஷ்ண நிலைகளை கடந்து போட்டியாளர்கள் தங்களது இந்த ராலி பந்தயத்தை நிறைவு செய்தனர்.

 மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தயத்தில் வெற்றி பெற்றவர்கள் விபரம்!

இந்த போட்டியில் இரவு நேரத்தில் 150 கிமீ தூரத்தை கடப்பதற்கான போட்டி மிகவும் சவால் நிறைந்ததாக இருந்ததாக, போட்டியாளர்கள் தெரிவித்தனர். கடும் குளிர் மற்றும் வழியை கண்டறிந்து அவர்கள் பந்தய வழித்தடத்தை கடந்தனர்.

 மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தயத்தில் வெற்றி பெற்றவர்கள் விபரம்!

இந்த போட்டியின் நிறைவில் எக்ஸ்ட்ரீம் பிரிவில் டீம் மாருதி அணியை சேர்ந்த வீரர் சுரேஷ் ராணா அவருக்கு வழிகாட்டியாக செயல்பட்ட அஷ்வின் நாயக் இணை வெற்றி பெற்றது. ஹிமன்சு அரோரா மற்றும் சிரக் தாகூர் இரண்டாவது இடத்தை பிடித்தனர். சாஜீத் சின்ஹா மூன்றாவது இடத்தை பிடித்தார்.

 மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தயத்தில் வெற்றி பெற்றவர்கள் விபரம்!

மோட்டோ பிரிவில் டிவிஎஸ் ரேஸிங் அணி வீரர் ஆர்.நட்ராஜ் வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தை மற்றொரு டிவிஎஸ் ரேஸிங் அணி வீரர் அப்துல் வாஹீத் தன்வீர் பெற்றார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் அணி வீரர் சி.எஸ்.சந்தோஷ் இறுதி சுற்றில் செக் பாயிண்ட்டை தொட தவறியதால், 35 நிமிடங்கள் குறைக்கப்பட்டது. இதனால், மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

 மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தயத்தில் வெற்றி பெற்றவர்கள் விபரம்!

என்டியூரன்ஸ் பிரிவில் நிகுன்ஜ் தோஷினிவால் மற்றும் சுவ்ரஜீத் தத்தா இணை முதலிடத்தை பெற்றது. எக்ஸ்ப்ளோர் பிரிவில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காரை பயன்படுத்திய கார்த்திக் மாருதி மற்றும் சங்கர் ஆனந்த் இணை முதலிடத்தை பெற்றது.

 மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தயத்தில் வெற்றி பெற்றவர்கள் விபரம்!

இந்த போட்டிக்கான ஸ்பான்சராக மொபில் ஆயில் நிறுவனம் செயல்பட்டது. போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கான எரிபொருள் மற்றும் ஆயிலை இந்த நிறுவனம் ஸ்பான்சர் செய்தது.

புதிய யமஹா எஃப்இசட்250 பைக்கின் படங்கள்!

இளைஞர்களை கவர்ந்து வரும் புதிய யமஹா எஃப்இசட்250 பைக்கின் படங்களை இந்த செய்தியில் காணலாம்.

English summary
Suresh Rana and R Nataraj has won the 2017 Maruti Suzuki Desert Storm after five days of competition in the grueling desert.
Story first published: Monday, February 6, 2017, 12:20 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos