மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி: சுரேஷ் ராணா, சிஎஸ்.சந்தோஷ் முன்னிலை!

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தயத்தின் முதலாவது ஸ்டேஜ் முடிவில் முன்னிலை வகிப்பவர்களின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

இந்தியாவின் டக்கார் என்ற பெருமையுடன் அழைக்கப்படும் மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தயம் கடந்த இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த ராலி பந்தயத்தின் நிகழ்வுகளை டிரைவ்ஸ்பார்க் தளம் உடனுக்குடன் வழங்கி வருகிறது. தற்போது முதலாவது ஸ்டேஜ் நிறைவு பெற்றிருக்கும் நிலையில் முன்னிலை வகிப்பவர்களின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

 மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி: சுரேஷ் ராணா, சிஎஸ்.சந்தோஷ் முன்னிலை!

டெல்லியில் துவங்கிய இந்த மோட்டார் பந்தயம் பல்வேறு பிரிவுகளின் கீழ் நடந்து வருகிறது. இந்த பல முன்னணி வீரர்கள் கற்ற வித்தையை காட்டி இந்த போட்டியில் முன்னிலை பெற துடித்து வருகின்றனர்.

 மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி: சுரேஷ் ராணா, சிஎஸ்.சந்தோஷ் முன்னிலை!

இந்த நிலையில், ஹனுமன்கரிலிருந்து பிகானேர் இடையிலான முதலாவது ஸ்டேஜ் நேற்று முடிந்தது. மொத்தம் 250 கிமீ தூரத்திற்கு ஹர்தஸ்வாலி மற்றும் அர்ஜன்சர் ஆகிய பாலைவனப் பகுதி வழியாக இந்த போட்டி நடந்தது. கடும் சவால்களை எதிர்கொண்டு வீரர்கள் இந்த முதல் ஸ்டேஜை கடந்தனர்.

 மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி: சுரேஷ் ராணா, சிஎஸ்.சந்தோஷ் முன்னிலை!

முதலாவது ஸ்டேஜ் முடிவில் எக்ஸ்ட்ரீம் பிரிவில் மாருதி அணியின் சுரேஷ் ராணாவும் அவருக்கு வழிகாட்டுனராக செயல்பட்ட அஷ்வின் நாயக் ஆகியோர் முன்னிலை பெற்றனர். கவுரவ் சிரிபல் மற்றும் ஸ்ரீ காந்த் ஆகியோர் இணை இரண்டாவது இடத்தையும், சஞ்சய் அகர்வால் மற்றும் சிவபிரகாஷ் இணை மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

 மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி: சுரேஷ் ராணா, சிஎஸ்.சந்தோஷ் முன்னிலை!

அதேபோன்று, மோட்டோ பிரிவில் இரண்டு முறை டக்கார் ராலி பந்தயத்தில் அசத்திய ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் அணி வீரர் சி.எஸ்.சந்தோஷ் முன்னிலை வகிக்கிறார். தன்வீர் அப்துல் இரண்டாவது இடத்திலும், நாகராஜ் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

 மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி: சுரேஷ் ராணா, சிஎஸ்.சந்தோஷ் முன்னிலை!

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தயத்தை மாருதி சுஸுகி மோட்டார்ஸ்போர்ட் பிரிவு நடத்தி வருகிறது. இந்த ராலி பந்தயத்திற்கு எக்ஸான்மொபில் ஆயில் நிறுவனம் எரிபொருள் மற்றும் ஆயில் வழங்கும் ஸ்பான்சராக செயல்பட்டு வருகிறது.

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தய நிகழ்வுகள்!

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தய நிகழ்வுகளின் பிரத்யேக படங்களை கீழே உள்ள படத் தொகுப்பில் காணலாம்.

Most Read Articles
English summary
The leg 1 of the 2017 Maruti Suzuki Desert Storm has concluded. Suresh Rana and CS Santosh lead the Extreme and Moto category respectively.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X