மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி: 4-வது ஸ்டேஜ் முடிவுகள்!
மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தயத்தின் நான்காவது ஸ்டேஜில் முன்னிலை பெற்றவர்கள் விபரங்களை காணலாம்.
மாருதி சுஸுகி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தயம் இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. நேற்று விறுவிறுப்பாக நடந்த 4வது ஸ்டேஜ் முடிவில் யார் யார் முன்னிலை பெற்றார்கள் என்பதை இந்த செய்தியில் காணலாம்.

நேற்று நடந்த நான்காவது ஸ்டேஜ் போட்டியில் 300 கிமீ தூரத்தை போட்டியில் பங்கேற்ற வீரர்கள் கடந்தனர். டுர்கான் கி பஸ்தி, சியாம்பர் மற்றும் மங்கலியவாஸ் ஆகிய பகுதிகள் வழியாக இந்த சுற்று நடந்தது.

எக்ஸ்ட்ரீம் பிரிவில் மாருதி கிராண்ட் விட்டார காரை பயன்படுத்திய சுரேஷ் ராணா மற்றும் வழிகாட்டுனர் அஷ்வின் நாயக் இணை முன்னிலை பெற்றது. நீஜு பாடியா மற்றும் வழிகாட்டுனர் நீரவ் மேத்தா இணை இரண்டாவது இடத்தை பெற்றது. சந்தீப் ஷர்மா மற்றும் கரண் ஆர்யா இணை மூன்றாவது இடத்தை பெற்றது.

மோட்டோ பிரிவில் ஹீரோ மோட்டோ அணி வீரர் சி.எஸ்.சந்தோஷ் முன்னிலை பெற்றார். அடுத்தடுத்த இடங்களை நட்ராஜ் மற்றும் தன்வீர் அப்துல் வாஹீத் பெற்றனர்.

என்ட்யூர் பிரிவில் நிகுன்ஜ் தோஷினிவாலா மற்றும் சுவ்ரஜித் தத்தா முதல் இடத்தையும், அர்பித் குப்தா மற்றும் நாகராஜன் இணை இரண்டாவது இடத்தையும், சுரேஷ் குமார் டுடி மற்றும் ராஜீத் புருஷோத்தமன் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

எக்ஸ்ப்ளோர் பி பிரிவில் கார்த்திக் மாருதி மற்றும் சங்கர் ஆனந்த் இணை முன்னிலை பெற்றது. ராஜேஷ் சலனா மற்றும் சதீஷ் கோபால்கிருஷ்ணன் இணை இரண்டாவதாகவும், அலி அஜ்கர் மற்றும் முகம்மது முஸ்தபா இணை மூன்றாவது இடத்தையும் பெற்றது.
டிவிஎஸ் ஒன்மேக் சாம்பியன்ஷிப் பைக் பந்தய படங்கள்!
டிவிஎஸ் ஒன்மேக் சாம்பியன்ஷிப் பைக் பந்தயத்தில் டிரைவ்ஸ்பார்க் டீம் நான்காவது இடம் பிடித்தது. இந்த போட்டியின் நிகழ்வுகளை கீழே உள்ள ஆல்பத்தில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








