விறுவிறுப்பாக நடந்து வரும் மாருதி சுஸுகி ரெய்டு டி ஹிமாலாயா ராலி பந்தயம்!

மாருதி சுஸுகி ரெய்டு டி ஹிமாலயமா ராலி பந்தயம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த பந்தயத்தின் முக்கிய நிகழ்வுகளை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

உலகின் மிக சவாலான ராலி பந்தயங்களில் ஒன்றாக கருதப்படும் மாருதி சுஸுகி ரெய்டு டி ஹிமாலாயா பந்தயம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 19வது ஆண்டாக நடக்கும் இந்த போட்டியின் முதல் மற்றும் இரண்டாவது ஸ்டேஜ் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், இந்த பந்தயத்தின் ஹைலைட்டான விஷயங்களை இந்த செய்தியில் காணலாம்.

விறுவிறுப்பாக நடந்து வரும் மாருதி சுஸுகி ரெய்டு டி ஹிமாலாயா ராலி பந்தயம்!

கடந்த 6 மற்றும் 7 தேதிகளில் மணாலியில் துவக்க நிகழ்வுகள் நடந்தன. இதைத்தொடர்ந்து, 7ந் தேதி இந்த பந்தயம் முறைப்படி துவங்கி வைக்கப்பட்டது. முதல் சுற்றில் மணாலி மற்றும் காஸா இடையிலான 203 கிமீ தூரம் நடந்தது. கிராம்பூ மற்றும் லோசர் வழியாக இந்த பந்தயம் நடந்தது.

விறுவிறுப்பாக நடந்து வரும் மாருதி சுஸுகி ரெய்டு டி ஹிமாலாயா ராலி பந்தயம்!

இரண்டாவது சுற்றில் இதே வழித்தடத்தில் காஸாவிலிருந்து லோசர் மற்றும் கிாரம்பூவை வீரர்கள் தங்களது வாகனங்களில் கடந்தனர். பின்னர், பாங் என்ற இடத்தை அடைந்தனர்.

Recommended Video

2017 Maruti Suzuki Baleno Alpha Automatic Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
விறுவிறுப்பாக நடந்து வரும் மாருதி சுஸுகி ரெய்டு டி ஹிமாலாயா ராலி பந்தயம்!

மிக அபாயகரமான மலைச்சாலைகள் வழியாக இந்த பந்தயம் நடந்து வருகிறது. மிக மோசமான சாலை நிலைகளால் இந்த ஆண்டு பந்தயம் சற்று மெதுவாகவே நடந்து வருவதாக அங்கிருந்து தகவல்களையும், படங்களையும் வழங்கி வரும் எமது புகைப்பட நிபுணர் அபிஜீத் விளங்கில் தெரிவித்துள்ளார்.

விறுவிறுப்பாக நடந்து வரும் மாருதி சுஸுகி ரெய்டு டி ஹிமாலாயா ராலி பந்தயம்!

மேலும், தொலை தொடர்பு மற்றும் இதர நடைமுறை சிக்கல்களால் உடனடியாக படங்கள், தகவல்களை பெறுவதிலும் சிரமங்கள் இருக்கின்றன. இதனால், முதல் இரண்டு சுற்றுகள் பற்றிய விபரங்கள் அதிகம் இணையதளங்களில் வெளியாகவில்லை.

விறுவிறுப்பாக நடந்து வரும் மாருதி சுஸுகி ரெய்டு டி ஹிமாலாயா ராலி பந்தயம்!

இந்த பந்தயத்தில் பல வீரர்கள் பந்தய தூரத்தை முழுமையாக கடக்கவில்லை. விபத்து மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக பலர் விலகி உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

விறுவிறுப்பாக நடந்து வரும் மாருதி சுஸுகி ரெய்டு டி ஹிமாலாயா ராலி பந்தயம்!

எக்ஸ்ட்ரீம் பைக் க்ளாஸ் பிரிவில் ஆர். நட்ராஜ், அப்துல் வாஹீத் தன்வீர் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். சுரேஷ் ராணா, ஹர்ப்ரீத் சிங் பாவா மற்றும் சஞ்சய் ரஸ்தன் ஆகியோர் எக்ஸ்ட்ரீம் கார்ஸ் பிரிவில் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

விறுவிறுப்பாக நடந்து வரும் மாருதி சுஸுகி ரெய்டு டி ஹிமாலாயா ராலி பந்தயம்!

அடுத்து மீதமுள்ள 4 சுற்று பந்தயங்களும் வரும் 13ந் தேதி நிறைவடைகிறது. கடல் மட்டத்திலிருந்து 17,500 அடி உயரத்தில் இமய மலைச் சாலைகளில் மைனஸ் 15 டிகிரிக்கும் குறைவான வெப்ப நிலையில் வரும் நாட்களில் இந்த ராலி பந்தயம் நடைபெற இருப்பதால், வீரர்களுக்கு பெரும் சவால் காத்திருக்கிறது.

விறுவிறுப்பாக நடந்து வரும் மாருதி சுஸுகி ரெய்டு டி ஹிமாலாயா ராலி பந்தயம்!

இன்று மூன்றாவது சுற்று பாங் என்ற இடத்திலிருந்து தாத் வழியாக லே நகருக்கு செல்கிறது. லே பகுதியில் சிறப்பான தொலைதொடர்பு வசதிகள் இருக்கும் என்பதால், இந்த ராலி பந்தயம் பற்றிய கூடுதல் தகவல்கள், படங்களை டிரைவ்ஸ்பார்க் தளத்தில் படிக்கலாம்.

முக்கிய குறிப்பு: கடந்த ஆண்டு மாருதி சுஸுகி ரெய்டு டி ஹிமாலயமா ராலி பந்தயத்தின் படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
The 19th edition of the Maruti Suzuki Raid De Himalaya powered by Mobil1 has officially kicked off and stage 1 and 2 of the rally has been completed. The Raid De Himalaya is one of the few race events in the country which has gained a legendary status and a cult following over nearly two decades of its existence.
Story first published: Tuesday, October 10, 2017, 14:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X