டிவி விளம்பரத்திற்காக மும்பை படப்பிடிப்பில் கலந்துகொண்ட புதிய தலைமுறை 2018 மாருதி ஸ்விஃப்ட் கார்..!!

டிவி விளம்பரத்திற்காக மும்பை படப்பிடிப்பில் கலந்துகொண்ட புதிய தலைமுறை 2018 மாருதி ஸ்விஃப்ட் கார்..!!

By Azhagar

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி முற்றிலும் புதிய 2018 ஸ்விஃப்ட் மாடல் காரை விரைவில் வெளியிட தீவிரமாக வருகிறது.

மும்பை படப்பிடிப்பில் கலந்துகொண்ட 2018 ஸ்விஃப்ட் கார்..!!

தற்போது இந்த புதிய தலைமுறை காருக்கான படப்பிடிப்பு மும்பையின் லோனவாலா பகுதியில் நடைபெற்று வருகிறது.

இதற்காக கொண்டுவரப்பட்ட புதிய ஸ்விஃப்ட் கார் மிகவும் அசத்தலாகவும் மற்றும் எந்தவித பேட்ஜிங் பணிகளும் செய்யப்படாமல் இருந்தது.

மும்பை படப்பிடிப்பில் கலந்துகொண்ட 2018 ஸ்விஃப்ட் கார்..!!

புதிய ஸ்விஃப்ட் கார் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்னர் காருக்கான பிரோமஷன் பணிகள் சில முன்னதாக நடைபெறவுள்ளன. அதற்குதான் இந்த ஷூட்டிங்க்.

மும்பை படப்பிடிப்பில் கலந்துகொண்ட 2018 ஸ்விஃப்ட் கார்..!!

வரும் ஜனவரி முதல் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, 2018 பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் கார் வெளியிடப்படவுள்ளது.

Trending On Drivespark:

மும்பை படப்பிடிப்பில் கலந்துகொண்ட 2018 ஸ்விஃப்ட் கார்..!!

சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படும் சில பல அம்சங்களுடன் இந்திய சந்தைக்கான புதிய ஸ்விஃப்ட் கார் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

High Mileage Cars In India - DriveSpark
மும்பை படப்பிடிப்பில் கலந்துகொண்ட 2018 ஸ்விஃப்ட் கார்..!!

இந்த படப்பிடிப்பில் இடம்பெற்றுள்ள ஸ்விஃப்ட் கார், சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. டூயல்-டோன் அலாய் சக்கரங்களை பெற்றுள்ள இந்த கார் டாப்-ஸிபெக் வேரியன்டிலும் வெளிவரும்.

மும்பை படப்பிடிப்பில் கலந்துகொண்ட 2018 ஸ்விஃப்ட் கார்..!!

மிதக்கும் கூரை வடிவமைப்பு, பிளாக்அவுட் பில்லர்கள் என புதிய ஸ்விஃப்ட் காரில் இடம்பெற்றுள்ள வேலைபாடுகள் அனைத்தும் ஸ்போர்ட்டி தரத்தில் இருக்கின்றன.

மும்பை படப்பிடிப்பில் கலந்துகொண்ட 2018 ஸ்விஃப்ட் கார்..!!

2018 ஸ்விஃப்ட் கார் ஹார்டெக்ட் பிளாட்பாரமின் கீழ் தயாராகியுள்ளது. இதன் கீழ் தான் முன்னர் மாருதி சுஸுகி பலேனோ மற்றும் புதிய டிசையர் கார்களை தயாரித்திருந்தது.

மும்பை படப்பிடிப்பில் கலந்துகொண்ட 2018 ஸ்விஃப்ட் கார்..!!

தற்போதைய மாடலை விட மிகவும் குறைந்த எடையில் தயாராகியுள்ள இந்த கார், கையாள்வதில் எளிமையாக இருக்க பல்வேறு அதற்குரிய கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

மும்பை படப்பிடிப்பில் கலந்துகொண்ட 2018 ஸ்விஃப்ட் கார்..!!

1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என இருவேறு தேவைகளில் வெளிவரும் புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் கார், எஞ்சின் தேர்வுகளுக்கு ஏற்றவாறு 82 பிஎச்பி மற்றும் 74 பிஎச்பி பவர் ஆற்றலை வழங்கும்.

மும்பை படப்பிடிப்பில் கலந்துகொண்ட 2018 ஸ்விஃப்ட் கார்..!!

அதேபோல வேரியன்டுகளுக்கு ஏற்றவாறு 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேவைகளில் புதிய ஸ்விஃப்ட் கார் வெளிவருகிறது.

இதுதவிர புதிய ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் கார் பிரொஜெக்டர் முகப்பு விளக்குகள், எல்.இ.டி பகல் நேர விளக்குகள், எல்.இ.டி டெயில் விளக்குகள் மற்றும்

மும்பை படப்பிடிப்பில் கலந்துகொண்ட 2018 ஸ்விஃப்ட் கார்..!!

ஃபிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீல் மற்றும் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் 7-இஞ்ச் தொடுதிரைக் கொண்ட இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற தேவைகள் காருக்கான உள்கட்டமைப்பில் உள்ளன.

மும்பை படப்பிடிப்பில் கலந்துகொண்ட 2018 ஸ்விஃப்ட் கார்..!!

2018 ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி சுஸுகி நிறுவனம் புதிய ஸ்விஃப்ட் காரை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து ஸ்போர்ட் மற்றும் ஹைஃபிரிட் வேரியன்டுகளிலும் புதிய ஸ்விஃப்ட் கார் அடுத்தடுத்து வெளிவருகின்றன.

மும்பை படப்பிடிப்பில் கலந்துகொண்ட 2018 ஸ்விஃப்ட் கார்..!!

செயல்திறன், வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகள் அனைத்திலும் புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் கார் ஃபோர்டு ஃபிகோ மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்களுக்கு போட்டியாக உள்ளது.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

More from DriveSpark

Article Published On: Thursday, December 28, 2017, 15:38 [IST]
English summary
Read in Tamil: 2018 Maruti Swift Spotted During TVC Shoot In India. Click for Details....
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+