இந்தியாவில் ரூ.2.7 கோடி மதிப்பில் 2018 மஸராட்டி குவார்த்தோபோர்த்தோ ஜிடிஎஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்
இந்தியாவில் ரூ.2.7 கோடி மதிப்பில் 2018 மஸராட்டி குவார்த்தோபோர்த்தோ ஜிடிஎஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!
இந்தியாவில் 2018 மஸராட்டி குவார்ட்டோபோர்ட்தோ ஜிடிஎஸ் கார் ரூ. 2.7 கோடி (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

2018ம் ஆண்டின் புதிய வரவாக தோற்றமளிக்க இந்த மாடலில் ஸ்டைலிங் மற்றும் அம்சங்கள் மேலும் மெருக்கேற்றும்படியாக அமைந்துள்ளன.
Recommended Video


2018 மஸராட்டி குவார்ட்டோபோர்ட்தோ ஜிடிஎஸ் காரில் கிரான்லூஸோ மற்றும் கிரான்ஸ்போர்ட் என இருவேறு வேரியண்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன.

முற்றிலும் புதிய முன்பக்க மற்றும் ரியர் பகுதி பம்பர் இந்த காரில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக ஒளி அளவை பாய்ச்சும் அடேப்டிவ் எல்.இ.டி முகப்பு விளக்குகள் புதியதாக இடம்பெற்றுள்ளன.

முன்பக்க ஸ்பாய்லர், கிரோம் பம்பர் மற்றும் சைடு ஸ்கெர்டுகள் போன்ற அம்சங்களுடன் குவார்ட்டோபோர்ட்தோ ஜிடிஎஸ் காரின் கிரான்லூசோ வேரியண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மாடலில் கிரான்லூசோ பேட்ஜில் விங்க்ஸ் மற்றும் புதிய 20-இஞ்ச் மெர்கியுரி கருப்பு நிறத்திலான பிரேக் கேலிபர்களுடன் கூடிய அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மஸராட்டியின் குவார்த்தோபோர்த்தோ ஜிடிஎஸ் கிரான்ஸ்போர்ட் வேரியண்ட், கூர்மையான பகுதிகளுடன், ஏரோடைனமிக் ஸ்பிளிட்டர்கள் மற்றும் மத்திய பகுதியில் ஸ்பாய்லர்களை பெற்றுள்ளது.

மேலும் இந்த காரில் இடம்பெற்றுள்ள ஓ.ஆர்.வி.எம், பி-பில்லர் கவர் மற்றும் ஃபிரென்டு பம்பர்கள் ஆகியவை கார்பன் பேக்கஜூடன் கூடிய தேவைகளில் இருக்கிறது.

காரின் உள்கட்டமைப்பில் உயர்தர லெதர்களால் வேயப்பட்ட இருக்கைகள், 8.4 இஞ்ச் மஸராட்டி டச் கன்ட்ரோல் பிளஸ் (எம்.டி.சி+) சிஸ்டம் பெற்ற டாஷ்போர்டு ஆகியவை உள்ளன.

இந்த யூனிட் மல்டி டச் ஸ்கிரீனுடன் இயங்கக்கூடியது. மேலும் இதில் ரோட்டரி கன்ட்ரோல், சென்ட்ரல் கன்சோல் மற்றும் வாய்ஸ் கமேண்டுகள் ஆகியவை உள்ளது.
மஸ்ராட்டி வழங்கியுள்ள இந்த சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஃபோன் மிரர்ரிங் தேவைகளை ஏற்றுக்கொள்ளும் திறன்பெற்றது.

900 -வாட். 10-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் ப்ரீமியர் சவுண்டு சிஸ்டத்துடன் வருகிறது. இதுதவிர சமீபத்திய ஒலி அமைப்புகளை விரும்புபவர்கள் பவர்ஸ் & வில்கின்ஸ் சரவுண்டு சிஸ்டத்தை பெற்றுக்கொள்ளலாம். அதில் 1280 வாட் ஏப்ளிஃபையர் உள்ளது.

2018 மஸராட்டி குவார்த்தோபோர்தோ ஜிடிஎஸ் காரின் 6 ஏர்பேகுகள், ஆக்டிவ் ஹெட்ரெஸ்ட்ஸ், லேன் கீப்பிங் அசிஸ்ட், ஆக்டிவ் பிளைண்டு ஸ்பாட் அசிஸ்ட், டிராஃபிக்கை உணரும் தொழில்நுட்பம் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

3.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 எஞ்சினை பெற்றுள்ள மஸராட்டி குவார்த்தோபோர்த்தோ ஜிடிஎஸ் கார் அதிகப்பட்சமாக 522 பிஎச்பி பவர் மற்றும் 710 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

பின் சக்கரங்களுக்கான தேர்வுகளுடன் இயங்கும் 8-ஸ்பீடு இசட்.எஃப் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இந்த காரில் உள்ளது.
துவக்க நிலையில் இருந்து 100கி.மீ வேகத்தை 4.7 விநாடிகளில் எட்டும் இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 310 கி.மீ.

மஸராட்டியின் இந்த செடான் காருக்கான புக்கிங்ஸ் தற்போது தொடங்கிவிட்டது. காரை வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கும் நாள், சர்வதேசளவில் ஒரே நாளாக அமையும்.

போர்ஷேவின் பானமேரா மற்றும் ஆஸ்டன் மார்டின் ரேபிட் ஆகிய கார்களோடு 2018 மஸ்ராட்டி குவார்த்தோபோர்த்தோ ஜிடிஎஸ் கார் செயல்திறன் மற்றும் வடிவமைப்பில் போட்டியிட உள்ளது.

2018 மஸராட்டி குவார்த்தோபோர்த்தோ கார் ஆடம்பர விரும்பிகளுக்கு சரியான தேர்வாக இருக்கும். அதிலும் ஸ்போர்ட்ஸ் தரத்தில் இது வெளிவந்திருப்பது, காரின் ஆடம்பரத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications








