புதிய தலைமுறை ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் ஆடம்பர கார்... சிறப்பு கண்ணோட்டம்

Written By:

பெரும் கோடீஸ்வரர்களின் அந்தஸ்தை ஒருபடி மேலே கொண்டு செல்லும் பெருமை ரோல்ஸ்ராய்ஸ் கார்களுக்கு உண்டு. குறிப்பாக, ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் கார்தான் பெரும் கோடீஸ்வரர்களின் ஆடம்பரத்தை பரைசாற்றும் விஷயங்களில் முக்கியமானது. கிட்டத்தட்ட 90 ஆண்டுகளாக ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் கார் பிராண்டுக்கு உலக அளவில் தனி மதிப்பு இருந்து வருகிறது.

புதிய தலைமுறை ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் ஆடம்பர கார்... சிறப்பு பார்வை!

இந்த நிலையில், தனது 90 ஆண்டு கால பாரம்பரியம் மிக்க ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் கார் தற்போது 8வது தலைமுறை மாடலாக அண்மையில் வெளியிடப்பட்டு இருக்கிறது. தற்போது விற்பனையில் உள்ள ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் கார் 2003ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய தலைமுறை ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் ஆடம்பர கார்... சிறப்பு பார்வை!

அதன் பின்னர், 14 ஆண்டுகள் கழித்து புதிய தலைமுறை ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது பெரும் கோடீஸ்வர்களின் ஆவலை எகிற செய்துள்ளது. இந்த நிலையில், இந்த காரின் முக்கிய சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய தலைமுறை ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் ஆடம்பர கார்... சிறப்பு பார்வை!

ஆடம்பர கார் என்றாலே ரோல்ஸ்ராய்ஸ் எனும் அளவுக்கு வாடிக்கையாளர் மனதில் பதிந்து போய்விட்ட நிலையில், அதனை தக்க வைக்கும் விதத்தில் பாரம்பரிய டிசைனுக்கு பங்கம் இல்லாமல் புதிய மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. கிடைத்த இடத்தில் எல்லாம் பாரம்பரியம் மாறாமல் புதிய அம்சங்களும், நவீன தொழில்நுட்பங்களும் புகுத்தப்பட்டுள்ளன.

புதிய தலைமுறை ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் ஆடம்பர கார்... சிறப்பு பார்வை!

புதிய ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் கார் தற்போது விற்பனையில் உள்ள மாடலைவிட மிக வலுவான கட்டமைப்புக்கு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. அதாவது, காரின் வலுத்தன்மை 30 சதவீதம் அளவுக்கு கூடி இருக்கிறது. மேலும், மிக உறுதியான அலுமினிய பாகங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் 2.7 டன் எடை கொண்டதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய தலைமுறை ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் ஆடம்பர கார்... சிறப்பு பார்வை!

பயணிகளுக்கு மிகச் சிறந்த சொகுசு உணர்வையும், பாதுகாப்பையும் வழங்க வல்ல மிகச் சிறந்த புதிய சேஸீ கன்ட்ரோல் சிஸ்டமும், சஸ்பென்ஷன் அமைப்பும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆம், முன்புறத்தில் டபுள் விஷ்போன் சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் 5 லிங்க் ரியர் ஆக்சில் அஅமைப்பும் சிறந்த கையாளுமையையும், சொகுசையும் வழங்கும்.

புதிய தலைமுறை ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் ஆடம்பர கார்... சிறப்பு பார்வை!

புதிய ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் காரில் அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. காரின் வேகம் மற்றும் முன்னால் இருக்கும் மேடு பள்ளங்களை உணர்ந்து கொண்டு காரின் சஸ்பென்ஷன் அமைப்பு தானியங்கி முறையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும். இதனால், அதிர்வுகள் மிக மிக குறைவான, சொகுசான பயணத்தை அனுபவிக்க முடியும்.

புதிய தலைமுறை ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் ஆடம்பர கார்... சிறப்பு பார்வை!

இந்த காரில் மிகச் சிறப்பான சப்த தடுப்பு அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 6 மிமீ தடிமனுடைய இரண்டடுக்கு கண்ணாடிகளும், அதிர்வுகளை உள்வாங்கிக் கொள்ளும் உதிரிபாகங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. டபுள் ஸ்கின் அலாய் என்ற உலோகப் பொருட்கள் மூலமாக சாலையிலிருந்து காருக்குள் கிடைக்கும் அதிர்வுகள் முற்றிலுமாக தடுக்கப்படும்.

புதிய தலைமுறை ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் ஆடம்பர கார்... சிறப்பு பார்வை!

இதுபோன்று, சப்தம் இல்லாத விசேஷ டயர்களும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. டயர்கள் மூலமாக மட்டுமே 9 டெசிபல் அளவுக்கு சப்தம் குறைக்கப்படுகிறது. இதுதவிர, பாடி பேனல்களுக்கு இடையில் உயர்தர பஞ்சு மற்றும் விசேஷ பாகங்கள் மூலமாக சப்தம் குறைக்கப்படுகிறது. எனவே, உலகின் சப்தம் குறைவான கார் மாடலாக புதிய ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் குறிப்பிடப்படுகிறது.

புதிய தலைமுறை ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் ஆடம்பர கார்... சிறப்பு பார்வை!

புதிய ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் காரில் இரட்டை டர்போசார்ஜர்கள் துணையுடன் இயங்கும் 6.75 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 563 பிஎச்பி பவரையும், 663 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்.

புதிய தலைமுறை ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் ஆடம்பர கார்... சிறப்பு பார்வை!

இந்த காரில் இசட்எஃப் நிறுவனத்தின் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. சேட்டிலைட் தொடர்புடன் இயங்கும் இந்த டிரான்மிஷன் சாலை நிலைக்கு தக்கவாறு முன்கூட்டியே கியரை மாற்றிக் கொள்ளும் வசதியை வழங்கும்.

2.7 டன் எடையுடைய இந்த கார் 0- 96 கிமீ வேகத்தை வெறும் 5.1 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருக்கிறது.

புதிய தலைமுறை ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் ஆடம்பர கார்... சிறப்பு பார்வை!

நாம் கார் ஓட்டும்போது இந்த வசதி இருந்தால் சிறப்பாக இருக்கும் என்ற கனவு காண்பது உண்டு. அதுபோன்ற பல வசதிகளை இந்த கார் வழங்குகிறது. டிரைவர் அயர்ந்து போவதை எச்சரிக்கும் வசதி, காரை சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்காக 4 கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இரவு நேரத்திலும் துல்லியமாக காட்டும் நைட் விஷன் அசிஸ்ட் வசதியும் இருக்கிறது.

புதிய தலைமுறை ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் ஆடம்பர கார்... சிறப்பு பார்வை!

முன்னால் பின்னால் வரும் வாகனங்களுக்கு ஏற்ப வேகத்தை கூட்டி குறைக்கும் வசதியை அளிக்கும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், மோதும் நிலை குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் வசதி, சாலை சந்திப்புகளில் போக்குவரத்து நிலை, தடம் மாறுதல் மற்றும் வைஃபை ஹாட்ஸ்பாட் உள்ளிட்ட பல வசதிகளை பெற முடியும். ஓட்டுனரின் கவனம் சிதறாமல் முன்புற விண்ட்ஷீல்டு கண்ணாடியிலேயே தகவல்களை தரும் ஹெட் அப் டிஸ்ப்ளே வசதியும் உள்ளது.

புதிய தலைமுறை ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் ஆடம்பர கார்... சிறப்பு பார்வை!

அடுத்த ஆண்டு இந்த கார் சர்வதேச அளவில் விற்பனைக்கு வர இருக்கிறது. அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.8 கோடி முதல் ரூ.10 கோடி விலையில் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சயம் ஆடம்பர பிரியர்களுக்கு அறுசுவை உண்ணும் உணர்வுக்கு இணையான பயண அனுபவத்தை இந்த கார் வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

English summary
2018 RollsRoyce Phantom Special Review.
Story first published: Tuesday, September 19, 2017, 14:21 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark