எதிர்பார்ப்புகளை கடந்து 2018 ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகமாகும் சுஸுகி ஜிம்னி கார்..!!
எதிர்பார்ப்புகளை கடந்து 2018 ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகமாகும் சுஸுகி ஜிம்னி கார்..!!
சுஸுகி நிறுவனத்தின் புதிய ஜிம்னி காருக்கான தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இந்நிலையில் தயாரிப்பு ஆலையில் எடுக்கப்பட்ட இந்த காரின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

உலகளவில் பல கார் ஆர்வலர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த காரின் டெஸ்ட் டிரைவ் விரைவில் தொடங்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

2017 டோக்கியோ மோட்டார் கண்காட்சியில் ஜிம்னி காரை சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அந்த திட்டம் தாமதமான நிலையில், 2018 ஜெனீவா மோட்டார் விழாவில் ஜிம்னி கார் உலக பார்வைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண சாலை போக்குவரத்து தேவையை மட்டும் மனதில் கொள்ளாமல், சுஸுகி ஜிம்னி காரை ஆஃப்-ரோடு தேவைகளுக்காகவும் வடிவமைத்துள்ளது.
Recommended Video


4 வீல் டிரைவ், லேடர் ஃபிரேம் சேசிஸ் என பல்வேறு புதிய அம்சங்கள் இந்த புதிய ஜிம்னி கார் மாடலில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போதைய ஜிம்னி காரை விட சிறிய ஃபூட்ப்ரின்ட் புதுவரவில் உள்ளதால் ஜிம்னி கார் அழகியல் தோற்றம் கொண்டதாக இருக்கும்.

இந்த புதிய மாடலின் டாப் வேரியன்ட் பதிப்பு மூன்று கதவுகள் கொண்டதாக இருக்கும் என்றும், மேலும் இதைவிட 5 கதவுகள் கொண்ட பெரிய ஜிம்னி மாடல் அடுத்ததாக வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்ப தேவைகளில் தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படவுள்ளன.

660சிசி திறன் பெற்ற டர்போ-பெட்ரோல், 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட்பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் ஆகிய எஞ்சின்கள் கொண்ட வேரியன்டில் ஜிம்னி காரை சுஸுகி வெளியிடலாம்.

இவற்றுடன் கார் வேரியண்டுகளின் மாடலுக்கு ஏற்றவாறு, ஆட்டோமேட்டிக் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் சுஸுகி ஜிம்னி காரில் இடம்பெறவுள்ளது.


Click it and Unblock the Notifications








