எஸ்யூவி உலகில் இன்றும் மெர்சல் காட்டும் மஹிந்திரா பொலெரோ... அதிமுக்கிய ஏழு காரணங்கள்..!!
எஸ்யூவி உலகில் இன்றும் மெர்சல் காட்டும் மஹிந்திரா பொலெரோ... அதிமுக்கிய ஏழு காரணங்கள்..!!
இந்திய சாலைகளை பல ஆண்டுகளாக அலங்கரித்து வரும் மஹிந்திராவின் பொலெரோ காருக்கு இன்றும் வாடிக்கையாளகர்கள் மத்தியில் மவுசு அதிகம்.

தற்போது மார்கெட்டில் இருக்கும் பல எஸ்யூவி மாடல்களின் என்ட்ரிக்கு முன்னர், இந்தியாவில் பல ஆண்டுகளாக ஆட்சிசெய்து வந்த ஒரே எஸ்யூவி-யாக இருந்தது பொலெரோ.

இந்தியாவில் தற்போதையை வாடிக்கையாளர்கள் மத்தியில் பொலெரோவிற்கான தேவை குறைந்துவிட்டாலும்,
எஸ்யூவி ரக வாகன விற்பனையில் முதல் 10 இடங்களை தொடர்ந்து பிடித்து வருகிறது மஹிந்திராவின் பொலெரோ கார்.
இதற்கான காரணங்கள் என்ன? பொலெரோவிற்கான விற்பனை மற்றும் செயல்திறனில் அப்படி தான் இருக்கிறது. தொடர்ந்து பார்க்கலாம்.

தோற்றம்
பொலெரோ கார் ’ரக்கடு’ என்று ஆங்கிலத்தில் சொல்லக்கூடிய தோற்றம் கொண்ட வாகனம். மேலும் அதனுடைய கட்டமைப்புகளும் கரடுமுரடாகத்தான் இருக்கும்.
இதன் காரணமாக இந்த காரை நாம் எங்கு வேண்டும் என்றாலும் ஓட்டிச்செல்லலாம். இதுவே ஊரகப்பகுதிகளில் இதன் விற்பனை அதிகரித்திருப்பதற்கு காரணம்.
Recommended Video


பரமாரிப்பு
கார்களை பற்றி தெரிந்திருக்கும் யாரு வேண்டுமானாலும் பொலெரோ காரை சர்வீஸ் செய்துவிட முடியும்.
இதன் துணைப்பொருட்கள் கிடைப்பதிலும் பெரியளவில் சிக்கல் இருப்பத்தில்லை. சர்வீஸை பொறுத்தவரை பொலெரோ மிகவும் எளிய வசதிக்கொண்டது.

நம்பகத்தன்மை
இந்தியாவை பொறுத்தவரை பெரும்பாலான பொலெரோ கார்கள் லட்சக்கணக்கான கி.மீ தொலைவு ஓடுவதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே எம்2டிஐசிஆர் மற்றும் டி.ஐ எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருந்த பொலெரோ கார்களில், அவற்றுடன் எம்ஹாக் டி70 எஞ்சின் கொண்டும் மஹிந்திரா இதை தயாரிக்கிறது.

கட்டுப்படி
ரூ.6.61 லட்சம் மதிப்பில் தொடங்கும் இதனுடைய விலை, அனைத்து விதமான தேவைகளுக்கும் கட்டுபடியுடன் இருப்பது தான் இதில் பராட்டப்பட வேண்டியது.

தகுதிகள்
ஆஃப்-ரோடு மற்றும் ஆன் -ரோடு என எந்த சாலை வழிகளிலும் பொலெரோ காரை நாம் இயக்க முடியும். காரில் பொருத்தப்பட்டுள்ள இலை நீருற்றுகள் (leaf springs) எந்த சூழ்நிலையிலும் இறுக்கமான இணைப்புகளை வாகனம் எடுக்க அனுமதிக்கின்றது.

பிராண்டு
ஊரகப் பகுதிகளை பொறுத்தவரை, பொலெரோவிற்கு தான் வரவேற்பு இன்னும் தொடர்கிறது. அதனாலே இதற்கு ஒரு பெரிய பிராண்டு வேல்யூ கூடி வருகிறது.

பல்துறை பயன்பாடு
இந்தியாவிற்கு பொலெரோ கார்களில் பல வித மாடல்களை மஹிந்திரா வழங்குகிறது. குறிப்பாக இதில் 4-மீட்டர் நீளம் கொண்ட 7 இருக்கைகள் கொண்ட மாடல் மிகப்பிரபலம்.

மேலும் இதில் பிக்-அப் ஸ்டைல் பொலெரோ கார்களும் வெளிவருகிறது. இதை மேக்ஸி டிரக் என்ற பெயரில் மஹிந்திரா விற்பனை செய்கிறது.

பல புதிய எஸ்யூவி மாடல்களின் வருகை அதிகரித்தாலும், பொலெரோ எப்போதும் மக்களுக்கான தேர்வுகளில் முன்னிலை வகிக்கிறது. இதனால் வாடிக்கையாளர்களும் இதற்கான வரவேற்பை தொடர்ந்து அளித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








