பான்கார்டுக்கு பிறகு ஓட்டுநர் உரிமத்தை ஆதாருடன் இணைக்க மத்திய அரசு திட்டம்..!!

பான்கார்டுக்கு பிறகு ஓட்டுநர் உரிமத்தை ஆதாருடன் இணைக்க மத்திய அரசு திட்டம்..!!

By Azhagar

ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமத்தை இணைப்பது தொடர்பான திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மத்தியரசு திட்டம்: ஆதாருடன் இணைக்கப்படும் ஓட்டுநர் உரிமம்!

மத்திய சட்டத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சரான ரவி ஷங்கர் பிரசாத் இதுகுறித்த சட்ட முன்வரவை உருவாக்க முயற்சித்து வருகிறார்.

மத்தியரசு திட்டம்: ஆதாருடன் இணைக்கப்படும் ஓட்டுநர் உரிமம்!

தற்போது அமலில் உள்ள ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான சட்டத்தில், ஒருவர் பல முறைகேடுகளை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஒருவர் பல பெயரில் ஓட்டுநர் உரிமங்களை வைத்திருக்கக்கூடிய வாய்ப்பும் உருவாகிறது.

மத்தியரசு திட்டம்: ஆதாருடன் இணைக்கப்படும் ஓட்டுநர் உரிமம்!

இதை தடுக்கும் வகையில் மத்திய அரசு ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமத்தை இணைப்பதற்கான சட்டத்தை கொண்டுவர தீர்மானித்துள்ளது.

மத்தியரசு திட்டம்: ஆதாருடன் இணைக்கப்படும் ஓட்டுநர் உரிமம்!

இந்தியாவில் நடைபெறும் டிஜிட்டல் முறையிலான செயல்பாடுகள் பற்றி விவாதிக்க சமீபத்தில் ஹரியானா மாநிலத்தில் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

மத்தியரசு திட்டம்: ஆதாருடன் இணைக்கப்படும் ஓட்டுநர் உரிமம்!

இதில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத், டிஜிட்டல் வடிவலான செயல்பாடுகளுக்கு தான் ஆதார் இந்தியாவில் பின்பற்றப்பட்டு வருவதாக கூறினார்.

மத்தியரசு திட்டம்: ஆதாருடன் இணைக்கப்படும் ஓட்டுநர் உரிமம்!

ஆதாரால் ஒருவருக்கு பிரச்சனைகளை உருவாக்கும் நோக்கில் அதற்கான எந்தவித செயல்பாடுகளும் இருக்காது என மேலும் அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் கூறினார்.

மத்தியரசு திட்டம்: ஆதாருடன் இணைக்கப்படும் ஓட்டுநர் உரிமம்!

பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்தின் மூலம் நாட்டில் நடைபெறும் பல பண மோசடிகள் தடுக்கப்படும் என மேலும் அவர் தெரிவித்தார்.

மத்தியரசு திட்டம்: ஆதாருடன் இணைக்கப்படும் ஓட்டுநர் உரிமம்!

ஒருவருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க, அவரது ஆதார் எண்னை கட்டாயம் ஆதாரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என மாநில அரசுக்கு ஏற்கனவே மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்தியரசு திட்டம்: ஆதாருடன் இணைக்கப்படும் ஓட்டுநர் உரிமம்!

இதன் மூலம் கிடைக்கபெற்ற அனைத்து தரவுகளையும் தேசிய தகவல் மையம் அதன் தரவுத்தளத்தில் பதிவேற்றும் செய்யும் பணியினை தீவிரப்படுத்தி உள்ளது.

மத்தியரசு திட்டம்: ஆதாருடன் இணைக்கப்படும் ஓட்டுநர் உரிமம்!

இதில் இருக்கும் தகவல்கள் மூலம் எந்தவொரு மாவட்ட வருவாய் அலுவலர்களும் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பித்தவர்களின் தகவல்களை பெற முடியும்.

மத்தியரசு திட்டம்: ஆதாருடன் இணைக்கப்படும் ஓட்டுநர் உரிமம்!

நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக நடைபெறும் இதுபோன்ற முயற்சிகளில் மத்திய அரசு காட்டும் தீவிரம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று தான்.

மத்தியரசு திட்டம்: ஆதாருடன் இணைக்கப்படும் ஓட்டுநர் உரிமம்!

ஆனால் ஆதார் என்ற ஒரு எண் மூலம் ஒரு தனிமனிதன் குறித்த எந்த தகவல்களும் முறைகேடாக சென்றுவிட அரசு அனுமதிகக்கூடாது என்பதே இதுதொடர்பான அரசின் செயல்பாடுகளில் பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Indian government has planned to link the Aadhaar card with driving licences in India
Story first published: Friday, September 15, 2017, 18:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X