ஓட்டுனர்களின் தலை எழுத்து மாறுகிறது... டிரக்குகளில் ஏசி வசதி கட்டாயமாகிறது!

Written By:

டிரக்குகளின் கேபினில் ஏசி வசதி கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும் என்கிற சட்டத்திற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

டிரக்குகளில் ஏசி வசதி கட்டாயமாகிறது!

நம் நாட்டில் நடைபெறும் சாலை விபத்துக்களில் டிரக்குகளால் ஏற்படும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. டிரக்குகளால் ஏற்படும் விபத்துக்களில் அதிக உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

டிரக்குகளில் ஏசி வசதி கட்டாயமாகிறது!

இதற்கு, டிரக் ஓட்டுனர்கள் சீக்கிரமாக அயர்ந்து போவதும் ஒரு காரணம் என்று ஆய்வுகளின் அடிப்படையில் கண்டறியப்பட்டு இருக்கிறது. சீதோஷ்ண நிலையால் அவர்களது உடல் நிலை பாதிக்கப்படுவதும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

டிரக்குகளில் ஏசி வசதி கட்டாயமாகிறது!

இந்த நிலையில், சீதோஷ்ண நிலையால் ஓட்டுனர்களின் உடல் நிலை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, டிரக்குகளின் கேபினில் ஏசி வசதி இருப்பதை மத்திய அரசு கட்டாயமாக்க உள்ளது.

Recommended Video - Watch Now!
Tata Nexon Review: Expert Review Of Tata Nexon - DriveSpark
டிரக்குகளில் ஏசி வசதி கட்டாயமாகிறது!

கடந்த ஏப்ரல் 1ந் தேதியுடன் இதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இதற்கான காலக்கெடுவை வரும் டிசம்பர் 31ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது.

டிரக்குகளில் ஏசி வசதி கட்டாயமாகிறது!

3.5 டன் முதல் 12 டன் வரையிலான என்-2 வகை டிரக்குகளிலும், 12 டன்களுக்கு மேலான என்-3 வகை டிரக்குகளிலும் கேபினில் ஏசி வசதியுடன் தயாரிப்பது கட்டாயமாக்கப்படுகிறது.

டிரக்குகளில் ஏசி வசதி கட்டாயமாகிறது!

நம் நாட்டில் நடைபெறும் சாலை விபத்துக்களில் ஆண்டுக்கு 1.5 லட்சம் பேர் வரை உயிரிழக்கின்றனர். இந்த உயிரிழப்புகளில் 11.4 சதவீதம் டிரக்குகளாலும், 7.4 சதவீதம் பஸ் போன்ற கனரக வாகனங்களாலும் ஏற்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

டிரக்குகளில் ஏசி வசதி கட்டாயமாகிறது!

இந்த நிலையில், டிரக்குகளில் ஏசி வசதி கட்டாயமாக்கப்படுவதன் மூலமாக, ஓட்டுனர்களின் உடல்நிலை பாதிக்கப்படும் வாய்ப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், விபத்துகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

English summary
The central government had issued a deadline of April 1, 2017, for air conditioned truck cabins. But now it has been extended to December 31, 2017.
Story first published: Tuesday, August 1, 2017, 11:45 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark