2018 கான்டினென்டல் ஜி.டி காரின் விவரங்களை வெளியிட்ட பென்ட்லீ... முழுத் தகவல்கள்..!!
2018 கான்டினென்டல் ஜி.டி காரின் விவரங்களை வெளியிட்ட பென்ட்லீ நிறுவனம்..!!
ஆடம்பர கார்கள் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமான பென்ட்லீ தனது மேம்படுத்தப்பட்ட கான்டினென்டல் ஜி.டி கூபே காரை வெளியிட்டுள்ளது.

3வது தலைமுறையாக வெளியாகும் இந்த காரில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இம்மாதம் ஃபிராங்க்பூர்ட் மோட்டார் கண்காட்சியில் வெளியிட இருந்த கான்டினென்டல் ஜி.டி காரை, பென்ட்லீ நிறுவனம் தற்போதே வெளியிட்டு இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video


புதிய கான்டினென்டல் ஜி.டி மாடலின், முன்பக்க்க தோற்றம் 10 ஸ்பீடு 6 ஸ்போர்ட் கார் கான்செப்ட் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதேசமயத்தில் பின்புறத்தில் உள்ள டெயில்லைட், ஹேட்ச் ஆகியவை புதிய மாறுப்பட்ட தோற்றத்தில் உள்ளன.

கூடுதலாக போர்ஷே பனமேரா காரில் இருந்த சில அம்சங்களையும் மேம்படுத்தப்பட்ட பென்ட்லீ கான்டினென்டல் ஜி.டி காரில் இடம்பெற்றிருப்பதை பார்க்க முடிகிறது.

இந்த மாடல் காரில் 6.0 லிட்டர் திறன் கொண்ட டபுள்யூ12 எஞ்சின் உள்ளது. இது 626 பிஎச்பி பவர் மற்றும் 900 டார்க் திறனை வெளிப்படுத்தும்.
மணிக்கு 333 கி.மீ பறக்கும் இந்த காரில், பென்ட்லீ நிறுவனம் டூயல் கிளட்ச், 8-ஸ்பீடு கியர்பாக்ஸை பொருத்தியுள்ளது.

துவக்க நிலையில் இருந்து 100 கிமீ வேகத்தை 3.7 விநாடிகளில் எட்டும் வல்லமை படைத்த புதிய கான்டினென்டல் ஜி.டி கார்,
தற்போது விற்பனையில் உள்ள மாடலை விட 0.8 விநாடிகள் வேகமாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபிராங்கபூர்ட் கண்காட்சியில் புதிய பென்ட்லீ கான்டினென்டல் ஜி.டி கார், டபுள்யூ 12 எஞ்சின் கொண்டு மட்டுமே வெளியிடப்படுகிறது.
இதில் ட்வின்-டர்போ 4.0 லிட்டர் வி8 எஞ்சின் கொண்ட மற்றொரு மாடல் பின்னர் வரும் காலங்களில் வெளிவர வாய்ப்பு உள்ளது.

தற்போதைய மாடல் மற்றும் புதிய மாடல் கான்டினென்டல் ஜி.டி-யை விட ட்வின்-டர்போ 4.0 லிட்டர் வி8 எஞ்சின் கொண்ட மாடல் கார் தொழில்நுட்ப வசதியில் மெருக்கேற்றப்பட்டதாக இருக்கும்.

குறிப்பாக, அதில் பின் மற்றும் முன் சக்கரங்களை சேர்ந்து இயக்கும் திறன் கொண்ட ஃபோர்-வீல் டிரைவ் அமைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கான்டினென்டல் ஜி.டி மாடலில் பெட்ரோல்-மின்சாரக் கூட்டணி கொண்ட புதிய மாடலையும் பென்ட்லீ நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்ட அமைப்பு போர்ஷே பனமேரா 4இ- ஹைஃபிர்ட் காரிலும் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
450 பிஎச்பி பவர் மற்றும் 700 டார்க் திறனை வழங்கும் இந்த கார், மின்சக்தி மூலம் 50 கி.மீ வரை செல்லும் திறன் கொண்டது.

தொழில்நுட்பத்திலும் கவனமீர்க்கும் இந்த புதிய மாடலில் ஓட்டுநருக்கு மிக எளிதான இயக்கத்திறனை வழங்க இன்டலிஜென்ட் டைனமிக் ரைடு சிஸ்டம் உள்ளது.

காரின் உள்கட்டமைப்பில் 12.3 இஞ்ச் கொண்ட ரெட்டினா தரத்திலான டிஸ்பிளே உள்ளது. மரத்தால் வடிவமைக்கப்பட்ட தோற்றம் கொண்ட வகையில் இதனுடைய டாஷ் ஃபோர்டு உள்ளது.

இந்தாண்டு இறுதியில் பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி காருக்கான தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு, 2018ல் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

தொழில்நுட்பம், கட்டமைப்பு என அனைத்திலும் புதிய செயல்பாடுகள் கொண்டுள்ளதால், பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி காரின் தற்போதைய மாடலை விட இந்த புதிய மேம்படுத்தப்பட்ட காரின் விலை சற்று அதிகமாக நிர்ணயம் செய்யப்படும்.
புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய திறனோடு தயாரிக்கப்பட்டுள்ள பென்ட்லீ கான்டினென்டல் ஜி.டி கார், நிச்சயமாக கூபே மாடல்களுக்கு உலகளவில் புதிய ஊன்றுகோளாக அமையும்.


Click it and Unblock the Notifications








