கோவை நிறுவனத்தின் கைவண்ணத்தில் ஜொலிக்கும் புதிய மாருதி டிசையர் கார்!

கோவை நிறுவனத்தின் கைவண்ணத்தில் அட்டகாசமாக மாறிப் போயிருக்கும் புதிய மாருதி டிசையர் காரின் படங்கள், தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

கடந்த மே மாதம் விற்பனைக்கு வந்த புதிய தலைமுறை மாருதி டிசையர் கார் விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறது. கடந்த மாதம் 31,000 என்ற விற்பனை எண்ணிக்கையை நெருங்கி வரலாற்று சாதனையை புரிந்திருக்கிறது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த புதிய மாருதி டிசையர் காருக்கு அழகு வேலைப்பாடுகளை செய்து அசர வைத்துள்ள கோவை சேர்ந்த கார் கஸ்டமைஸ் நிறுவனம். படங்கள், விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

 கோவை நிறுவனத்தின் கைவண்ணத்தில் ஜொலிக்கும் புதிய மாருதி டிசையர் கார்!

கோவையை சேர்ந்த KitUp Automotive என்ற நிறுவனம்தான் புதிய மாருதி டிசையர் காரில் பல கூடுதல் அலங்கார வேலைப்பாடுகளை செய்து அறிமுகம் செய்துள்ளது. இவர்கள் செய்த மாற்றங்கள் என்னென்ன என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

 கோவை நிறுவனத்தின் கைவண்ணத்தில் ஜொலிக்கும் புதிய மாருதி டிசையர் கார்!

புதிய மாருதி டிசையர் காருக்கு புதிய ஆரஞ்ச் வண்ணம் கொடுத்துள்ளனர். இதனை சன்செட் பீம் பியர்ல் என்று குறிப்பிட்டுள்ளனர். இது வழக்கமாக மாருதி நிறுவனம் வழங்கும் வண்ணம் இல்லை.

 கோவை நிறுவனத்தின் கைவண்ணத்தில் ஜொலிக்கும் புதிய மாருதி டிசையர் கார்!

பாடி கலர் ஆரஞ்ச் வண்ணத்தில் இருக்கும் நிலையில், கூரைக்கு பளபளப்பான பியானோ பிளாக் என்ற கருப்பு வண்ணம் கொடுக்கப்பட்டு இருககிறது. இந்த இரட்டை வண்ணக் கலவை காருக்கு படுகவர்ச்சியாக அமைந்துள்ளது.

 கோவை நிறுவனத்தின் கைவண்ணத்தில் ஜொலிக்கும் புதிய மாருதி டிசையர் கார்!

இந்த காரில் இரண்டு சன்ரூஃப் கண்ணாடிகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. டிசையர் போன்ற பட்ஜெட் கார்களில் இது மிக அரிதான விஷயமாக கூறலாம்.

 கோவை நிறுவனத்தின் கைவண்ணத்தில் ஜொலிக்கும் புதிய மாருதி டிசையர் கார்!

புதிய மாருதி டிசையர் காரில் எல்இடி ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், 17 அங்குல அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. அதிகம் கைவைக்காமல் மிக கவனமாகவும், சிறப்பாகவும் வெளிப்புறத் தோற்றத்தை கவர்ச்சியாக மாற்றி இருக்கின்றனர் கிட் அப் நிறுவனத்தார்.

 கோவை நிறுவனத்தின் கைவண்ணத்தில் ஜொலிக்கும் புதிய மாருதி டிசையர் கார்!

உட்புறத்தில் முழுவதும் பீஜ் வண்ண லெதர் இன்டீரியர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், காரின் இன்டீரியர் பிரிமியம் கார்களை போன்று தோற்றமளிக்கிறது.

 கோவை நிறுவனத்தின் கைவண்ணத்தில் ஜொலிக்கும் புதிய மாருதி டிசையர் கார்!

காரிலேயே வரும் இன்ஃபோடெயின்மென்ட் சாதனத்தை எடுத்துவிட்டு, புதிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும், காரில் இருந்த ஆடியோ சிஸ்டத்திற்கு பதிலாக புதிய உயர்தர ஆடியோ சிஸ்டமும் மாற்றப்பட்டுள்ளது.

 கோவை நிறுவனத்தின் கைவண்ணத்தில் ஜொலிக்கும் புதிய மாருதி டிசையர் கார்!

இருக்கைகளும் உயர்தர சீட்கவர்கள் மூலமாக சொகுசு தன்மை மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. மொதத்தில் காரின் உட்புறம் மிகவும் ரம்மியமான உணர்வை தருகிறது.

 கோவை நிறுவனத்தின் கைவண்ணத்தில் ஜொலிக்கும் புதிய மாருதி டிசையர் கார்!

புதிய மாருதி டிசையர் காரின் பெட்ரோல் மாடலில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதேநேரத்தில், எஞ்சினில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.

 கோவை நிறுவனத்தின் கைவண்ணத்தில் ஜொலிக்கும் புதிய மாருதி டிசையர் கார்!

இந்த அலங்கார வேலைப்பாடுகளுக்கு மொத்தமாக ரூ.2.5 லட்சம் வரை செலவாகும் என கிட் அப் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், தொடர்புக்கு 9500969005 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெறலாம்.

Source: KitUp Automotive

More from DriveSpark

Article Published On: Thursday, September 14, 2017, 17:22 [IST]
English summary
All New Maruti Dizre Modified — Scooped Inside Out!
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+