2047ம் ஆண்டிற்குள் இந்தியாவில் வாகன துறை அனைத்தும் மின்சார மயம்; அரசிற்கு சியாம் பரிந்துரை..!!

2047ம் ஆண்டிற்குள் இந்தியாவில் வாகன துறை அனைத்தும் மின்சார மயம்; அரசிற்கு சியாம் பரிந்துரை..!!

By Azhagar

2047ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களும் மின்சார ஆற்றல் கொண்டதாகவே இருக்கும் என இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது.

மின்சார வாகன உற்பத்தி: மத்திய அரசுடன் கைக்கோர்த்த சியாம்..!!

மத்திய அரசுடன் சியாம் அமைப்பினர் வெள்ளை தாள் சமர்பித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது மின்சார ஆற்றலுக்கு இந்தியா மாற தயராகி வருவது குறித்து விவாதிக்கப்பட்டது.

மின்சார வாகன உற்பத்தி: மத்திய அரசுடன் கைக்கோர்த்த சியாம்..!!

அதில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பொது போக்குவரத்து ஊர்திகள் 2030ம் ஆண்டிற்குள் மின்சார ஆற்றலுக்கு மாறும் என்று சியாம் குறிப்பிட்டுள்ளது.

மின்சார வாகன உற்பத்தி: மத்திய அரசுடன் கைக்கோர்த்த சியாம்..!!

2030ம் ஆண்டில் மின்சார வாகன விற்பனை இந்தியாவில் 40 சதவீத அளவு உயரும். அதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ள அரசிற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக சியாம் கூறியுள்ளது.

மின்சார வாகன உற்பத்தி: மத்திய அரசுடன் கைக்கோர்த்த சியாம்..!!

2047ல் இந்திய வாகனதுறை மின்சார ஆற்றலுக்கு மாறும் அதே ஆண்டில் தான் இந்திய நாடு 100ம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ளது.

Recommended Video

The Emflux Motors Model 1 – India’s First Electric Motorcycle
மின்சார வாகன உற்பத்தி: மத்திய அரசுடன் கைக்கோர்த்த சியாம்..!!

2030ம் ஆண்டு வாக்கில் இந்திய வாகன துறை 60% மின்சார ஆற்றலுக்கு மாறியிருக்கும். அப்போது, அதற்கேற்றவாறு சாலை மாதிரிகள் மற்றும் கட்டமைப்பு மாதிரிகளையும் சியாம் வலியுறுத்தியுள்ளது.

மின்சார வாகன உற்பத்தி: மத்திய அரசுடன் கைக்கோர்த்த சியாம்..!!

இந்தியாவில் மொத்த வாகன துறையையும் மின்சார ஆற்றலுக்கு மாற்ற ஆட்டோ துறை, அரசு, பங்குதாரர்கள் ஆகியோர் 100 சதவீத அர்பணிப்பை வழங்க வேண்டியுள்ளது.

மின்சார வாகன உற்பத்தி: மத்திய அரசுடன் கைக்கோர்த்த சியாம்..!!

மின்சார ஆற்றலுக்கு மாற்றாக மாற்று எரிவாயுவை உருவாக்கும் தொழில்நுட்பமும் மிகப்பெரிய படிக்கல்லாக அமையும் என்று கூறுகிறார் சியாமின் தலைவர் அபேய் ஃபிரோடியா.

மின்சார வாகன உற்பத்தி: மத்திய அரசுடன் கைக்கோர்த்த சியாம்..!!

ஏற்கனவே இந்திய அரசு மின்சார வாகன பயன்பாட்டிற்கு பல்வேறு ஊக்கங்களை அளித்து வருகிறது. சமீபத்தில் மின்சார வாகனங்களுக்கு குறைந்த சாலை வரியை நிர்ணயிக்கும் வகையில் பல்வேறு ஊக்கங்களை அளித்துள்ளது.

மின்சார வாகன உற்பத்தி: மத்திய அரசுடன் கைக்கோர்த்த சியாம்..!!

மேலும் 2030ம் ஆண்டிற்குள் இந்தியா வாகன துறை மின்சார ஆற்றலுக்கு முழுமையாக மாற்ற முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள், அரசுடன் இணைந்து பல்வேறு வளர்ச்சி பணிகளில் செயலாற்றி வருகின்றன.

மின்சார வாகன உற்பத்தி: மத்திய அரசுடன் கைக்கோர்த்த சியாம்..!!

தற்போது இந்தியாவில் மஹிந்திரா மட்டும் தான் மின்சார வாகன மாடல்களை விற்பனை செய்து வருகிறது. கடந்த சில வருடங்களில் இரு-சக்கர வாகன துறையையும் மின்சார ஆற்றலுக்கு மாற்ற அதிக வாய்ப்புள்ளது.

மின்சார வாகன உற்பத்தி: மத்திய அரசுடன் கைக்கோர்த்த சியாம்..!!

மஹிந்திரவிற்கு பிறகு டாடா நிறுவனம் டிகோர் காரை மின்சார ஆற்றலுக்கான கட்டமைப்புகளுடன் தயாரித்துள்ளது.

மத்திய அரசு மின்சார கார் பயன்பாட்டினை ஊக்குவிக்க 10,000 எண்ணிக்கையிலான மின்சார கார்கள் வாங்க டாடாவிற்கு ஆர்டர் கொடுத்துள்ளது.

மின்சார வாகன உற்பத்தி: மத்திய அரசுடன் கைக்கோர்த்த சியாம்..!!

இருசக்கர வாகன தேவைகளில் ஒகினாவா என்ற நிறுவனம் புதிய பிரைஸ் மாடல் மின்சார ஸ்கூட்டரை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

மிகவும் ஸ்டைலான அதே சமயத்தில் ஆற்றலுக்கான வலிமை பொருந்திய வகையில் ஹீரோ மின்சார ஸ்கூட்டருக்கு இணையாக அது உள்ளது.

மின்சார வாகன உற்பத்தி: மத்திய அரசுடன் கைக்கோர்த்த சியாம்..!!

இதற்கு பிறகு ஏத்தர் எனர்ஜி என்ற நிறுவனம் 2018ம் ஆண்டு வாக்கில் புதிய மின்சார ஸ்கூட்டரை வெளியிட ஆயத்தமாகி வருகிறது.

ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ மற்றும் டிவிஎஸ் போன்ற நிறுவனங்களும் அடுத்தாண்டில் மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்கவுள்ளன.

மின்சார வாகன உற்பத்தி: மத்திய அரசுடன் கைக்கோர்த்த சியாம்..!!

2030ம் ஆண்டிற்குள் மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாற இந்தியா ஆயத்தமாகி வருவது அனைவரும் அறிந்தது தான். இதில் சியாம் அமைப்பும் தன்னுடைய பங்கை செயல்படுத்தியுள்ளது.

மின்சார வாகன உற்பத்தி: மத்திய அரசுடன் கைக்கோர்த்த சியாம்..!!

மின்சார வாகனங்களுக்கான விற்பனை திறனை நம் நாட்டில் அதிகரிக்க வேண்டும் என்றால், அதற்குரிய கட்டமைப்புகளை முதலில் நிலைப்படுத்த வேண்டும். அது தான் தலையாய பணி.

மின்சார வாகன உற்பத்தி: மத்திய அரசுடன் கைக்கோர்த்த சியாம்..!!

மின்சார கார் மற்றும் ஸ்கூட்டர் போன்ற தேவைகளுக்கு நாடு முழுவதும் சார்ஜிங் நிலையங்களை அமைத்தால் மட்டுமே பொதுமக்களும் மின்சார வாகன பயன்பாட்டை வரவேற்பர்.

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

More from DriveSpark

Article Published On: Thursday, December 21, 2017, 8:30 [IST]
English summary
Read in Tamil: All New Vehicles Sold In India To Be Electric By 2047 SIAM. Click for Details...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+