மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களில் அல்பினா B3 S மற்றும் B4 S கார்கள்

Written By: Azhagar

ஜெர்மனியின் புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான அல்பினா, பை-டர்போ சார்ஜர் எஞ்சின் பொருத்தப்பட்ட B3 S மற்றும் B4 S மாடல் கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார்களில் உள்ள 3.0 லிட்டர் எஞ்சின் 434 பிஎச்பி பவரையும், மற்றும் 600 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

பி.எம்.டபுள்விற்கு சவால் விடும் அல்பினாவின் புதிய சீரிஸ் கார்கள்

அல்பினாவின் இந்த புதிய B3 S மற்றும் B4 S கார்களில் டர்போசார்ஜர்கள், சிறந்த முறையில் ட்யூன் செய்யப்பட்ட சஸ்பென்ஷன், மேம்படுத்தப்பட்ட குளிர்ச்சியான அமைப்பு, கியர்பாக்ஸிற்கான மென்பொருள் போன்றவை மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

பி.எம்.டபுள்விற்கு சவால் விடும் அல்பினாவின் புதிய சீரிஸ் கார்கள்

இப்படியான ஒரு புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த் கார்களில் நாம் பயணிக்கும் போது, சராசரியாக கிடைக்கும் சக்தி அளவை விட ஏழு சதவீதம் அதிகமாகவும், வேகத்தை பொருத்தவரை 10 சதவீதம் அதிகமாகவும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.0 லிட்டர் எஞ்சினில் இயங்கக்கூடிய ட்விண்டர்போ இன்லைன் சிக்ஸ் இன்ஜின்கள் பி.எம்.டபுள்யூவின் M3, M4 மாடல்களின் செயல்பாடோடு ஒப்பிடுவது போன்று தெரியலாம், ஆனால் அவற்றை விட இந்த அல்பினாவின் புதிய அறிமுகம் கார் பிரியர்களை ஈர்க்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

பி.எம்.டபுள்விற்கு சவால் விடும் அல்பினாவின் புதிய சீரிஸ் கார்கள்

அல்பினாவின் B3/ B4 S மாடல்களில் எஞ்சின் சக்தி அனைத்து சக்கரங்களுக்கும் செல்லும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாடல்களில் B4 S, கூபே பாடி ஸ்டைல் போன்ற வசதிகளை விருப்புபவர்களுக்காக கூடுதலான வழிமுறையோடு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

பி.எம்.டபுள்விற்கு சவால் விடும் அல்பினாவின் புதிய சீரிஸ் கார்கள்

ஆட்டோமொபைல் உலகத்தை திரும்பிபார்க்க வைத்துள்ள அல்பினாவின் B3 S, B4 S கார்கள் எப்போது விற்பனைக்கு வரும் என்பதை குறித்த அறிவிப்புகள் இல்லை, அதேபோல் தற்போது வரை இந்த மாடல் கார்களின் விலையையும் நிறுவனம் நிர்ணயிக்கவில்லை.

பி.எம்.டபுள்யூவின் புதிய M சீரிஸ் கார்கள் ஜெர்மனி நாட்டின் பெருமைமிகு படைப்பாக உள்ளது, தற்போது பி.எம்.டபுள்யூவின் M4 கார்களின் புகைப்படங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பில் பார்க்கலாம்.

English summary
Alpina's B3/ B4 S variants also produce 600Nm of torque and can reach 305km/ h.
Story first published: Tuesday, March 7, 2017, 13:15 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark