முதல்முறையாக ஆப்பிள் தானியங்கி காரின் தரிசனம்!

Written By:

ஆப்பிள் நிறுவனம் டிரைவரில்லா கார்களுக்கான அதிநவீன தொழில்நுட்பத்தை தயாரித்து வருவதாக அவ்வப்போது செய்திகள் வருவதும், அது யூகம்தான் என்பதுபோல் அடுத்தடுத்து செய்திகள் வருவதும் தொடர்கதையாக இருந்தது. இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் டிரைவர்லெஸ் கார் தயாரித்து வருவது குறித்து இப்போது உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளது.

 முதல்முறையாக ஆப்பிள் தானியங்கி காரின் தரிசனம்!

ஆம், அண்மையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் கார்களை சோதனை ஓட்டம் நடத்த அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா மாகாண நிர்வாகம் அனுமதி அளித்தது. இதுதொடர்பான செய்திகள் மூலமாக ஆப்பிள் கார் குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

 முதல்முறையாக ஆப்பிள் தானியங்கி காரின் தரிசனம்!

இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் தானியங்கி கார் சோதனை ஓட்டம் துவங்கப்பட்டு இருப்பது குறித்து புளும்பெர்க் தளம் ஸ்பை படங்களை வெளியிட்டு இருக்கிறது. டிரைவர்லெஸ் காருக்கான தானியங்கி தொழில்நுட்பத்தை ஆப்பிள் கார் நிறுவனம் மிக ரகசியமாக தயாரித்துவிட்டது. அதனை தற்போது லெக்சஸ் காரில் பொருத்தி சோதனை ஓட்டத்தை நடத்தி வருகிறது.

 முதல்முறையாக ஆப்பிள் தானியங்கி காரின் தரிசனம்!

லெக்சஸ் ஆர்எக்ஸ் 450எச் க்ராஸ்ஓவர் ரக காரில் ஆப்பிள் நிறுவனம் உருவாக்கியுள்ள தானியங்கி கார் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டு சோதனைகள் செய்யப்படுகின்றன. அந்த காரில் ரேடார்கள், சென்சார்கள் மற்றும் கேமராக்கள் போன்றவை பொருத்தப்பட்டு இருப்பதை காண முடிகிறது.

 முதல்முறையாக ஆப்பிள் தானியங்கி காரின் தரிசனம்!

தான் வடிவமைத்திருக்கும் தொழில்நுட்பம் பொது போக்குவரத்து சாலைகளில் எந்தளவு சிறப்பாக செயல்படுகிறது. அதில் இருக்கும் குறைகள் என்னென்ன என்பது குறித்து கண்டவறிவதற்கான முதல்கட்ட சோதனையாகவே இது கருதப்படுகிறது.

 முதல்முறையாக ஆப்பிள் தானியங்கி காரின் தரிசனம்!

ஸ்மார்ட்போன் உலகில் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் உயர் உன்னதமானதாக போற்றப்படுகிறது. அதேபோன்று, எதிர்காலத்தில் ஆப்பிள் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த தானியங்கி கார் சாஃப்ட்வேரும் சிறப்பான வரவேற்பை பெறும்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Apple’s Self-Driving Lexus Spotted Testing.
Story first published: Saturday, April 29, 2017, 13:21 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos