ரூ. 1.63 கோடி மதிப்புப்பெற்ற மஸராட்டி லெவன்டா காரை வாங்கிய முதல் இந்திய நடிகர்... யார் தெரியுமா..??

ரூ. 1.63 கோடி மதிப்புப்பெற்ற மஸராட்டி லெவன்டா காரை வாங்கிய முதல் இந்திய நடிகர்... யார் தெரியுமா..??

By Azhagar

திரை உலகில் நடிகர்களின் படங்கள் வெற்றி அடைகிறதோ இல்லையோ, ஒரு திரை நட்சத்திரம் என்று ஆகிவிட்டால் அவரிடம் செம மாஸான கெத்தான ஒரு கார் இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி.

மஸராட்டி லெவன்டா காரை வாங்கிய முதல் இந்திய நடிகர்..!!

அப்போது தான் திரையுலகில் சோபிக்க முடியும் என்பது ஒரு நிலை. இதில் பிரிவினை என்பதெல்லாம் இல்லை. இந்தியாவில் இயங்கும் அனைத்து திரையுலகும் இப்படி தான்.

மஸராட்டி லெவன்டா காரை வாங்கிய முதல் இந்திய நடிகர்..!!

நமது தமிழ்நாட்டில் சமீபத்தில் வெளியான பிஎம்டபுள்யூ 7-சிரீஸ் காரை விஜய்சேதுபதி வாங்கினார். அவரை தொடர்ந்து இளம் நடிகர் ஒருவர் மஸராட்டி லிவென்டே காரை வாங்கியுள்ளார்.

Recommended Video

Jeep Compass Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
மஸராட்டி லெவன்டா காரை வாங்கிய முதல் இந்திய நடிகர்..!!

ஆனால் அந்த இளம் நடிகர் தமிழ் நாட்டை சேர்ந்தவர் அல்ல. அவர் பாலிவுட்டில் வளர்ந்து வரும் வாரிசு நடிகராவர்.

பிரபல பாலிவுட் சினிமா தயாரிப்பாளரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூரின் மகன் அர்ஜூன்கபூர் தான் அந்த இளம் நடிகர்.

மஸராட்டி லெவன்டா காரை வாங்கிய முதல் இந்திய நடிகர்..!!

அர்ஜூன்கபூரின் நெருங்கிய நண்பர் ரன்வீர் சிங். அவர் சமீபத்தில் மிக பெரிய பிராண்ட் காரை வாங்கியதாக சொல்லப்படுகிறது.

மஸராட்டி லெவன்டா காரை வாங்கிய முதல் இந்திய நடிகர்..!!

இதற்கு பிறகு தற்போது அர்ஜூன்கபூர் மஸராட்டி நிறுவனத்தின் லெவன்டே காரை வாங்கியுள்ளார். ப்ளூ பேஷேனேட் மைக்கா நிறத்திலான இந்த கார் பார்க்க மிகவும் வசீகரமாக உள்ளது.

மஸராட்டி லெவன்டா காரை வாங்கிய முதல் இந்திய நடிகர்..!!

அர்ஜூன் தனது ’முபாரகான்’ படத்திற்கான விளம்பர பணிகளில் ஆர்வமாக பங்கேற்று வந்தார். அப்போது தான் இந்த புதிய காரை அவர் பயன்படுத்தி வருவது தெரியவந்தது.

மஸராட்டி லெவன்டா காரை வாங்கிய முதல் இந்திய நடிகர்..!!

மஸராட்டி லெவன்டே கார் எஸ்.யூ.வி மாடலாகும். மும்பையில் இதனுடைய விலை சுமார் ரூ.1.63 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் லெவன் டே கார் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேவைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

மஸராட்டி லெவன்டா காரை வாங்கிய முதல் இந்திய நடிகர்..!!

3.0 லிட்டர் திறன் கொண்ட பெட்ரோல் எஞ்சின் மஸராட்டி லெவன்டே கார் 2 வேரியண்டுகளில் வருகின்றன. அதில் ஒன்று 350 பிஎச்பி பவர் மற்றும் 500 என். எம் டார்க் திறனை வழங்கும்.

மஸராட்டி லெவன்டா காரை வாங்கிய முதல் இந்திய நடிகர்..!!

மற்றொன்று 430 பிஎச்பி பவர் மற்றும் 580 டார் திறனை வழங்கும். துவக்க நிலையில் இருந்து 100 கிலோ மீட்டர் 5.2 நொடிகளில் இந்த மாடல் கார் அடையும்.

அதேபோல டீசல் மாடல் கொண்ட கார் 3.0 லிட்டர் திறன் பெற்றது. இது 275 பிஎச்பி பவர்ம் மற்றும் 600 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

மஸராட்டி லெவன்டா காரை வாங்கிய முதல் இந்திய நடிகர்..!!

காரின் உள்கட்டமைப்புகளில் 8.4 அங்குல தொடுதிரை கொண்ட இன்ஃபோடெய்ன்மெண்ட் அமைப்பு உள்ளது. இதனுடைய ரூஃப்லைன் பனாரோமிக் பார்வை வழியை பெற்றது.

சுழல் கேமரா, பவர் டெயில் கேட், கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் அடேப்டிவ்ல் க்ரூஸ் கண்ட்ரோல் என ஆடம்பர தேவைக்கான அனைத்து வசதிகளும் மஸராட்டி லெவன்டா காரில் உள்ளது.

மஸராட்டி லெவன்டா காரை வாங்கிய முதல் இந்திய நடிகர்..!!

பாதுகாப்புக்கான கட்டமைப்புகளில் ப்ளைண்ட் ஸ்பாட் அலெர்ட், லேன் டாபார்ச்சர் வார்னிங், ஃபார்வேர்டு கொலிசன் வார்னிங், ஹில் டெஸெண்ட் கண்ட்ரோ என பல தேவைகள் உள்ளன.

காரின் முகப்பில் செங்குத்தாக மஸராட்டின் முத்திரை நிலைநிறுத்தப்பட்டுள்ள க்ரில் முகப்பு பகுதிக்கு வலு சேர்க்கிறது.

மஸராட்டி லெவன்டா காரை வாங்கிய முதல் இந்திய நடிகர்..!!

எல்.இ.டி கொண்ட ப்ரோஜக்டெர் ஹெட்லேம்ப்ஸ், கிரோம் டோர் ஹேண்டில்ஸ், சி-பில்லருடன் கூடிய மஸராட்டி முத்திரை போன்ற அழகிய வேலைபாடுகளுடன் காரின் முகப்பு வசீகரிக்குறது.

மஸராட்டி லெவன்டா காரை வாங்கிய முதல் இந்திய நடிகர்..!!

காருக்கான பின்பகுதியில் கிஃபிலியால் உருவாக்கப்பட்ட டெயில் லேம்ப்ஸ், பாடி கலர்டு ரூஃப் ஸ்பாய்லர் மற்றும் இரண்டு புகை போக்கி குழாய்கள் ஆகியவை லெவன்டா காரின் பின்பகுதிக்கு கெத்தாக இருக்கின்றன.

மஸராட்டி லெவன்டா காரை வாங்கிய முதல் இந்திய நடிகர்..!!

மஸராட்டி நிறுவனத்தின் குவாட்ரோபோர்தோ மாடல் கார்களை தொழிலதிபர் ரத்தன் டாடா, நடிகர் அஜய்தேவகன் மற்றும் நடிகை சன்னி லியோன் ஆகியோர் பயன்படுத்தி வருகின்றனர்.

மஸராட்டி லெவன்டா காரை வாங்கிய முதல் இந்திய நடிகர்..!!

இவர்களுக்கு பிறகு தான் அர்ஜூன் கபூர் தற்போது மஸராட்டியின் தயாரிப்பை வாங்கியுள்ளார். இருந்தாலும் இந்திய திரை நட்சத்திரங்களில் மஸராட்டியின் லெவன்டா காரை வாங்கிய முதல் பிரபலம் அர்ஜூன்கபூர் தான் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, August 7, 2017, 14:54 [IST]
English summary
Read in Tamil: Arjun Kapoor, Bollywood Actor Gets Himself a Maserati Levante Car. Click for Details...
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+