ஆடி நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள இரண்டு புதிய கார்கள்!

இந்தியாவில் இரண்டு புதிய கார்களை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது ஆடி நிறுவனம். அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

சொகுசு கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஆடி மற்றும் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனங்களுக்கு இடையில் யார் பெரியவர் என்ற போட்டி நிலவி வருகிறது. இந்த போட்டியில் தற்போது மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின் கை தான் சற்று ஓங்கி உள்ளது. பென்ஸ் நிறுவனத்தின் போட்டியை சமாளிக்க இரண்டு புதிய கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது ஆடி நிறுவனம்.

ஆடி அறிமுகப்படுத்த உள்ள இரண்டு புதிய கார்கள்!

ஆடி க்யு2 மினி எஸ்யுவி மற்றும் ஏ5 காப்ரியோலட் ஆகிய மாடல் கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது ஆடி, எனினும் எப்போது இந்த கார்கள் அறிமுகப்படுத்தப்படும் என்பதனை இன்னும் அந்நிறுவனம் அறிவிக்கவில்லை.

ஆடி அறிமுகப்படுத்த உள்ள இரண்டு புதிய கார்கள்!

இந்த இரண்டு கார்கள் மட்டுமல்லாது, ஒரு ஹேட்ச்பேக் மாடலையும் ஆடி நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடி க்யு-2 அறிமுகப்படுத்தப்பட்டால் அவை மெர்சிடஸ் பென்ஸ் ஜிஎல்ஏ மாடலுக்கு போட்டியாக விளங்கும்.

ஆடி அறிமுகப்படுத்த உள்ள இரண்டு புதிய கார்கள்!

அதேபோல ஏ5 காப்ரியோலட் காரின் அறிமுகம் பென்ஸ் இ-400 கார்களுக்கு இந்தியாவில் போட்டியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடி அறிமுகப்படுத்த உள்ள இரண்டு புதிய கார்கள்!

ஏ5 காப்ரியோலட் கார்கள் ஆடியின் புதிய தயாரிப்பாகும். மேற்கூரையை மடித்துக்கொள்ளும் வகையிலான இது ஒரு கன்வெர்டிபிள் கார் ஆகும். இதில் 2.0 லிட்டர் டர்போசாட்ஜ்டு இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 252 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகும். இதில் டூயல் கிளட்ச் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது.

ஆடி அறிமுகப்படுத்த உள்ள இரண்டு புதிய கார்கள்!

இது குறித்து, ஆடி நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர், ரஹில் அன்சாரி கூறுகையில், புதிய மாடல் கார்களின் அறிமுகம் அதிகபட்ச வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்கும்" என்றார்.

ஆடி அறிமுகப்படுத்த உள்ள இரண்டு புதிய கார்கள்!

இந்தியாவில் சொகுசு கார் விற்பனையில் முன்னோடியாக திகழ்ந்து வந்த ஆடி நிறுவனம், கடந்த 2015ஆம் ஆண்டில், தனது இடத்தை மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்திடம் இழந்தது. தான் இழந்த இடத்தை மீண்டும் கைப்பற்ற தற்போது முனைப்பு காட்டி வருகிறது ஆடி நிறுவனம்.

ஆடியின் புதிய ஏ5 மற்றும் எஸ்5 காப்ரியோலட் கார்களின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்:

More from DriveSpark

Article Published On: Saturday, March 4, 2017, 17:16 [IST]
English summary
Audi will be launching the Q2 SUV and the A5 Cabriolet in India, to reclaim the top luxury carmaker crown.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+