ஆடி ஆர்எஸ் க்யூ8 எஸ்யூவி கான்செப்ட் படங்கள், தகவல்கள்!
மிகவும் சக்திவாய்ந்த புதிய சொகுசு எஸ்யூவியின் கான்செப்ட் மாடலை ஆடி கார் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய எஸ்யூவி மாடலில் இடம்பெற இருக்கும் சிறப்பம்சங்கள் மற்றும் படங்களை இந்த செய்தியில்
அடுத்த மாதம் ஜெனிவா மோட்டார் ஷோவில் புத்தம் புதிய சொகுசு எஸ்யூவியின் கான்செப்ட் மாடலை ஆடி கார் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய மாடலின் சிறப்பம்சங்கள், படங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஆடி க்யூ8 எஸ்யூவியின் அதிக சக்திவாய்ந்த மாடலாக ஆர்எஸ் க்யூ8 என்ற மாடலை ஆடி கார் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. பிஎம்டபிள்யூ எக்ஸ்6 மற்றும் மெர்சிடிஸ் - ஏஎம்ஜி ஜிஎல்இ63 கூபே ஆகிய கார் மாடல்களுக்கு இது நேரடி போட்டியாக இருக்கும்.

இந்த புதிய கான்செப்ட் எஸ்யூவியை ஆடி கார் நிறுவனத்தின் பெர்ஃபார்மென்ஸ் கார் தயாரிப்பு பிரிவான ஆடி ஸ்போர்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிறுவனம் முன்னர் க்வாட்ரோ ஜிஎம்பிஎச் என்ற பெயரில் அழைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

இந்த புதிய எஸ்யூவி கான்செப்ட் மாடலில் இரட்டை டர்போசார்ஜர்கள் கொண்ட 4.0 லிட்டர் வி8 எஞ்சின் இடம்பெற்று இருக்கிறது. ஆடி எஸ்8 ப்ளஸ் காரில் பயன்படுத்தப்படும் அதே வி8 எஞ்சின்தான் இந்த புதிய எஸ்யூவியிலும் இடம்பெற இருக்கிறது.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 605 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். இந்த எஞ்சினுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் இருக்கும்.

ஆடி ஸ்போர்ட் நிறுவனத்தின் வட்டாரத் தகவல்களின்படி, இந்த எஸ்யூவியானது 0-100 கிமீ வேகத்தை வெறு் 4 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை பெற்றிருக்கும். அதிகபட்சமாக மணிக்கு 300 கிமீ வேகம் வரை செல்லும் திறனும் இருக்கும்.

டிசைனை பொறுத்தவரையில் வழக்கமான ஆடி கார் நிறுவனத்தின் டிசைன் தாத்பரியங்களை பிரதிபலிக்கும் விதத்திலும், மிகவும் முரட்டுத் தனமான தோற்றத்தையும் பெற்றிருக்கிறது. குறிப்பாக, க்ரில் அமைப்பும், ஹெட்லைட்டும் மிக கவர்ச்சிகரமாக இருக்கிறது.

ஆடி க்யூ8 கான்செப்ட் எஸ்யூவியில் இடம்பெற்றிருக்கும் அதே இன்டீரியர் அமைப்புதான் இந்த ஆர்எஸ் க்யூ8 எஸ்யூவியிலும் கொடுக்கப்பட்டு இருக்கும். ஆனால், ஸ்டீயரிங் வீல் உள்ளிட்டவற்றில் மாற்றங்கள் இருக்கும்.

மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்களின் சக்திவாய்ந்த எஸ்யூவி மாடல்களைவிட இது மிகவும் சிறந்த ஆக்சிலரேசஷன் கொண்ட எஸ்யூவியாக இருக்கும்.
புதிய ஆடி க்யூ8 எஸ்யூவி கான்செப்ட் படங்கள்!
புதிய ஆடி க்யூ8 எஸ்யூவி கான்செப்ட் காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








