பெங்களூர் வழியாக மின்சார கார் பயன்பாட்டினை தென்னிந்தியா கொண்டு வர மத்திய அரசு முயற்சி..!!

பெங்களூர் வழியாக மின்சார கார் பயன்பாட்டினை தென்னிந்தியா கொண்டு வர மத்திய அரசு முயற்சி..!!

By Azhagar

இந்தியாவில் மின்சார கார் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள மத்திய அரசு முதற்கட்டமாக கார்களுக்கான பேட்டரி சார்ஜிங் நிலையங்களை பெங்களூரில் அமைக்கறிது.

மின்சார கார் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க பெங்களூர் தேர்வு..!

2030ம் ஆண்டிற்குள் இந்தியாவில் மின்சார ஆற்றலில் இயங்கும் கார்களுக்கே அனுமதி வழங்கப்படும் என இந்திய அரசு தெரிவித்திருந்தது.

மின்சார கார் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க பெங்களூர் தேர்வு..!

அதற்கான திட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதில் சோதனை முயற்சியாக கார்களுக்கான மின்சார ஆற்றலை வழங்கும் பேட்டரி சார்ஜிங் நிலையங்கள் 25 என்ற எண்ணிக்கையில் பெங்களூரில் அமைக்கப்படவுள்ளனது.

இதை FAME என்று சொல்லக்கூடிய மின்சாரம் மற்றும் ஹைஃபிர்ட் கார்களுக்கான அமைப்பு நிறுவ உள்ளது.

மின்சார கார் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க பெங்களூர் தேர்வு..!

அரசின் கட்டுபாட்டில் இயங்கும் FAME மூலமாக மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் அமைப்பு, மின்சார கார்களை உற்பத்தி செய்யும் மஹிந்தராவின் தனிப்பட்ட கிளையுடன் கூட்டணி அமைத்து சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் என மின்சாரம் நிலக்கரி மற்றும் புதிய ஆற்றல் துறைக்கான அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

மின்சார கார் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க பெங்களூர் தேர்வு..!

மஹிந்திராவின் மின்சார கார்களை உற்பத்தி செய்யும் மற்றொரு நிறுவனம் பெங்களூரில் மொத்தம் 6 இடங்களில் மின்சார கார்களை சார்ஜ் செய்து கொள்ளும் நிலையங்களை நிறுவ உள்ளது.

மின்சார கார் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க பெங்களூர் தேர்வு..!

ஃபேம் அமைப்பின் வழிமுறையை ஏற்று, இந்தியாவின் சில குறிப்பிட்ட நகரங்களில் மின்சார வாகனங்களுக்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாக கனரக தொழில்துறையின் துறை மத்திய அமைச்சர்கள் ஆனந்த் கீத்தே மற்றும் பாபுல் சுப்ரீயோ தெரிவித்துள்ளனர்.

மின்சார கார் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க பெங்களூர் தேர்வு..!

பெங்களூரை தவிர மற்ற நகரங்களில் கார்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைக்க திட்ட அமலாக்கம் மற்றும் ஒப்புதல் குழு அனுமதி அளித்துள்ளது.

மின்சார கார் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க பெங்களூர் தேர்வு..!

அதன்படி மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் பாரத் ஹெவி எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் ராஜஸ்தான் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

மின்சார கார் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க பெங்களூர் தேர்வு..!

இதை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் ஜெய்பூர் மற்றும் சண்டிகர் நகரங்களில் மின்சார கார்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்.

மின்சார கார் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க பெங்களூர் தேர்வு..!

டெல்லியில் இதற்கான பணிகளை அமைக்க மஹிந்திரா ரெவா, ஆசிய எலெக்ட்ரிக், ஓலா மற்றும் லித்தியம் அர்பன் டெக்னாலிஜிஸ் போன்ற நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன.

மின்சார கார் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க பெங்களூர் தேர்வு..!

ஃபேம் அமைப்புடன் இந்திய அரசு கைக்கோர்த்து முன்னெடுத்து செல்லும் சார்ஜிங் நிலையங்களால் மின்சார கார்களின் பயன்படுத்தும் விழிப்புணர்வு மக்களிடம் அதிகரிக்கும் என நாமும் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Read in Tamil: Bengaluru Receives Electric Charging Stations Under Government's Pilot Program. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X