புதிய மாருதி ஸ்விஃப்ட் வருகையில் தாமதம்... இப்ப என்னங்க பண்றது?

புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் காரின் அறிமுகம் தாமதமாகி வரும் நிலையில், அதற்கு மாற்றாக வாங்குவதற்கு ஏதுவான சில கார் மாடல்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

துள்ளலான டிசைன், நம்பகமான எஞ்சின்கள், அதிக மைலேஜ், சிறந்த கையாளுமை, சரியான விலை என அனைத்திலும் வாடிக்கையாளர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற கார் மாடல் மாருதி ஸ்விஃப்ட். விற்பனையிலும் தொடர்ந்து கலக்கி வரும் இந்த மாடலுக்கு அவ்வப்போது புதுப்பொலிவு கொடுத்து மாருதி நிறுவனம் தக்க வைத்து வருகிறது.

மாருதி ஸ்விஃப்ட்டுக்கு மாற்றான சிறந் தார் மாடல்கள்!

இந்த நிலையில், அனைத்துவிதத்திலும் முற்றிலும் புதிய மாடலாக மேம்படுத்தப்பட்ட ஸ்விஃப்ட் காரை மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி அறிமுகம் செய்தது. ஆனால், இந்த புதிய ஸ்விஃப்ட் அடுத்த ஆண்டு பிற்பாதியில்தான் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்ற தகவல் ஸ்விஃப்ட் பிரியர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

மாருதி ஸ்விஃப்ட்டுக்கு மாற்றான சிறந் தார் மாடல்கள்!

ஸ்விஃப்ட் மாதிரியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புதிய மாருதி டிசையர் கார் கடந்த ஏப்ரல் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனையில் பல புதிய மைல்கற்களை தொட்டு வருகிறது. இந்த நிலையில், ஸ்விஃப்ட் காரின் விற்பனை தொடர்ந்து குறைந்து வருகிறது.

மாருதி ஸ்விஃப்ட்டுக்கு மாற்றான சிறந் தார் மாடல்கள்!

கடந்த மாதம் விற்பனையில் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார் ஸ்விஃப்ட் காரை பின்னுக்குத் தள்ளி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. ஸ்விஃப்ட் காரின் புதிய மாடல் வருகை தள்ளிப்போவதுதே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

மாருதி ஸ்விஃப்ட்டுக்கு மாற்றான சிறந் தார் மாடல்கள்!

அடுத்த ஆண்டு பிற்பாதியில் அறிமுகம் செய்யப்பட்டாலும், நிச்சயமாக காத்திருப்பு காலம் பல மாதங்கள் நீளும் வாய்ப்பு இருப்பதால், இன்னும் ஓர் ஆண்டு வரை காத்திருக்க வேண்டிய வாய்ப்பு இருக்கிறது. அதற்குள் கார் வாங்கும் ஆசையே பலருக்கு நீர்த்துப் போக்கும் வாய்ப்புள்ளது.

மாருதி ஸ்விஃப்ட்டுக்கு மாற்றான சிறந் தார் மாடல்கள்!

இந்த நிலையில், ஸ்விஃப்ட் கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களை வேறு கார்களால் அவ்வளவு எளிதில் திருப்தி படுத்த முடியாது. இருப்பினும், ஸ்விஃப்ட் கார் வரும் வரை என்னால் காத்திருக்க முடியாது என்று நினைப்பவர்களுக்காக, அதற்கு மாற்றான சில சிறந்த கார் மாடல்களை இந்த செய்தியில் கொடுத்துள்ளோம்.

Recommended Video

[Malayalam] Datsun rediGO Gold 1.0-Litre Launched In India - DriveSpark
மாருதி பலேனோ

மாருதி பலேனோ

சற்று பட்ஜெட் கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை என்பவர்களுக்கு சிறந்த மாற்று சாய்ஸ் மாருதி பலேனோ. ஸ்விஃப்ட் காரில் பயன்படுத்தப்படும் அதே எஞ்சின் ஆப்ஷன்கள்தான் இந்த காரிலும் பயன்படுத்துவது நம்பகமான விஷயம்.

மாருதி ஸ்விஃப்ட்டுக்கு மாற்றான சிறந் தார் மாடல்கள்!

தவிர, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அதிக இடவசதி, கவர்ச்சியான டிசைன் இதற்கு வலு சேர்க்கும் அம்சங்கள். அடிப்படை பாதுகாப்பு அம்சங்களிலும் நிறைவை தருகிறது. ரூ. 6.23 லட்சம் ஆன்ரோடு விலையில் இருந்து கிடைக்கிறது.

 ஹூண்டாய் க்ராண்ட் ஐ10

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10

மாருதி ஸ்விஃப்ட் காரைவிட சற்றே பட்ஜெட் குறைவான மாடலாக இருந்தாலும், பிரிமியம் வசதிகள், டிசைன், பட்ஜெட் விலை என வாடிக்கையாளர்களின் சிறந்த தேர்வாக இருக்கிறது.

மாருதி ஸ்விஃப்ட்டுக்கு மாற்றான சிறந் தார் மாடல்கள்!

அண்மையில் இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் வந்துள்ளதால், ஸ்விஃப்ட் காருக்கு மாற்று தேடுவோர் தங்களது தேர்வு பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம். மறுவிற்பனை மதிப்பிலும் சிறந்த கார் மாடல். ரூ.5.30 லட்சம் ஆன்ரோடு விலையில் இருந்து கிடைக்கிறது.

புதிய மாருதி டிசையர்

புதிய மாருதி டிசையர்

இது செடான் ரகமாக இருந்தாலும், விலையில் ஹேட்ச்பேக் கார்களுடன் போட்டி போடுகிறது. அத்துடன் புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் முக சாயலை ஒத்திருக்கும் புதிய மாருதி டிசையர் கார் விலையில் சற்று கூடுதலாக இருந்தாலும், அதிக மதிப்பை வழங்குகிறது.

மாருதி ஸ்விஃப்ட்டுக்கு மாற்றான சிறந் தார் மாடல்கள்!

அதிக பூட்ரூம் இடவசதி, சவுகரியமான இருக்கைகள், கூடுதல் வசதிகளுடன், ஸ்விஃப்ட்டில் பயன்படுத்தப்படும் அதே எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைப்பதும் ஸ்விஃப்ட் பிரியர்களுக்கு நிறைவை தரலாம். ரூ.6.35 லட்சம் ஆன்ரோடு விலையில் இரு்நது கிடைக்கிறது.

ஹூண்டாய் எலைட் ஐ20

ஹூண்டாய் எலைட் ஐ20

மாருதி ஸ்விஃப்ட் காருடன் நேரடியாக ஒப்பிட முடியாவிட்டாலும், வேறு கார் மாடல் வாங்கிய பின் மனக்குறை ஏற்பட்டுவிடக்கூடாது என்பவர்களுக்கு ஹூண்டாய் எலைட் ஐ20 கார் சிறந்த சாய்ஸாக இருக்கும். அசத்தலான டிசைன், பிரிமியம் வசதிகள் இந்த காரை தேர்வு செய்வதற்கு வலு சேர்க்கும் அம்சங்கள்.

ஃபோர்டு ஃபிகோ

ஃபோர்டு ஃபிகோ

மாருதி ஸ்விஃப்ட் காருக்கு சரிக்கு நிகர் சமமான மாடலாக புதிய ஃபோர்டு ஃபிகோ காரை கூற முடியும். பழைய மாடலைவிட பல்வேறு அம்சங்களிலும் மேம்படுத்தப்பட்டு இருக்கும் புதிய ஃபோர்டு ஃபிகோ கார் பாதுகாப்பு அம்சங்களில் முதன்மையான மாடலாக இருக்கிறது. ஆனால், மாருதி பிரியர்களுக்கு ஃபோர்டு தயாரிப்பு ஒத்துவருமா என்பது சந்தேகமான விஷயம்.

ஃபோக்ஸ்வேகன் போலோ

ஃபோக்ஸ்வேகன் போலோ

ஸ்விஃப்ட் போல வெகுஜன வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் சர்வீஸ் நெட்வொர்க், வாடிக்கையாளர் சேவை போன்ற விஷயங்களில் நிறைவை தராவிட்டாலும், டிசைன், சிறந்த கட்டுமானத் தரம் போன்றவை இந்த காரின் ப்ளஸ் பாயிண்ட்டுகளாக கூற முடியும். இதேபோன்றுதான், ஹோண்டா ஜாஸ் காரும் மற்றொரு சாய்ஸ். இவை பிரிமியம் ஹேட்ச்பேக் ரகத்தில் வருவதால், விலையில் சற்றே கூடுதலான பட்ஜெட் உள்ளவர்களுக்கு மட்டுமே தேர்வு பட்டியலில் எடுத்துக் கொள்ளலாம்.

மாருதி ஸ்விஃப்ட்டுக்கு மாற்றான சிறந் தார் மாடல்கள்!

எது எப்படியிருந்தாலும், ஸ்விஃப்ட்டை மனதில் வைத்து கசிந்து உருகி காதலித்து வருபவர்களுக்கு வேறு மாடல் என்பது நினைத்து பார்க்க முடியாத விஷயமாகவே இருக்கும். இதனை உணர்ந்து மாருதி நிறுவனம் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரை கூடிய சீக்கிரமாகவே இந்தியாவில் அறிமுகம் செய்தால், ஸ்விஃப்ட் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விஷயமாக அமையும்.

Most Read Articles
English summary
Best Alternative Car Models To Maruti Swift.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X