பி.எம்.டபுள்யூ-வின் மேம்படுத்தப்பட்ட எம்5 கார்: விரைவில் இந்தியாவில் அறிமுகம்

Written By:

ஆடம்பர கார்கள் தயாரிப்பில் உலகளவில் அரசனாக கருதப்படும் பி.எம்.டபுள்யூ, புதிய எம்5 காம்படீஷன் எடிசன் காரை விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது. அதிக பவர்ஃபுல்லான வெர்ஷனாக வெளிவர இருக்கும் இந்த காரில் வியக்கவைக்கக் கூடிய தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன.

பி.எம்.டபுள்யூ எம்5 காம்படீஷன் எடிசன் விரைவில் அறிமுகம்

உலக ஆட்டோமொபைல் சந்தையில் பெரிதும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும், எம்5 காம்படீஷன் மாடல் காரை விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது பி.எம்.டபுள்யூ. செடான் மாடலான இதில் இதுவரை இல்லாத கூடுதலான தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

பி.எம்.டபுள்யூ எம்5 காம்படீஷன் எடிசன் விரைவில் அறிமுகம்

எம்5 காம்படீஷன் எடிசன் மாடலை பார்க்க சாதரண கார் போல தெரிந்தாலும், பவர்ஃபுல்லான வெர்ஷனோடு இது உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான அம்சங்களுடன் காரின் செயல்திறனை கூட ஸ்போர்ட்ஸ் கார்களுக்கான தொழில்நுட்பமும் எம்5 காம்படீஷன் எடிசன் மாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பி.எம்.டபுள்யூ எம்5 காம்படீஷன் எடிசன் விரைவில் அறிமுகம்

எம்5 காம்படீஷன் எடிசன் மாடலை பார்க்க சாதரண கார் போல தெரிந்தாலும், பவர்ஃபுல்லான வெர்ஷனோடு இது உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான அம்சங்களுடன் காரின் செயல்திறனை கூட்ட ஸ்போர்ட்ஸ் கார்களுக்கான தொழில்நுட்பமும் எம்5 காம்படீஷன் எடிசன் மாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பி.எம்.டபுள்யூ எம்5 காம்படீஷன் எடிசன் விரைவில் அறிமுகம்

பி.எம்.டபுள்யூ வெளியிட்ட சாதரண எம்5 கார்களுடன் இந்த காம்படீஷன் எடிசன் மாடலை ஒப்பிடுகையில் செயல்திறன், ஆற்றல், வேகம் என அனைத்திலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. 4.4 லிட்டர் ட்வின்-டர்போ பெட்ரோல் எஞ்சின் கொண்டுள்ள இந்த கார், 592 பி.எச்.பி பவர் மற்றும் 700 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

பி.எம்.டபுள்யூ எம்5 காம்படீஷன் எடிசன் விரைவில் அறிமுகம்

சரெலென சீற்ப் பாயும் வேகத்தை உறுதிப்படுத்தும் வகையில், பி.எம்.டபுள்யூ எம் 5 காம்படீஷன் எடிசன் காரின் அதிகப்பட்ச வேகமான 100 கிலோ மீட்டரை வெறும் 3.9 நொடிகளில் அடையும். எஞ்சின் வேகத்தை காரின் அனைத்து சக்கரங்களுக்கும் கடத்த எம் செயல்திறன் கொண்ட டிசிடி கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

பி.எம்.டபுள்யூ எம்5 காம்படீஷன் எடிசன் விரைவில் அறிமுகம்

தொழில்நுட்ப ரீதியாக இந்த காரில் சில அமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. சாலைக்கு தகுந்தவாறு கிடைக்கூடிய சஸ்பென்ஷன், எம் சிரீஸ் கார்களுக்கே உரித்தான செர்வோட்ரானிக் முறையில் இயங்கக்கூடிய ஸ்டீயரிங், ஸ்போர்ட்ஸ் கார்களின் துல்லியமான மோட்டார் சத்தத்தை வழங்கக்கூடிய புகைப்போக்கு குழாய் என தொழில்நுட்பத்திலும் பி.எம்.டபுள்யூ எம்5 காம்படீஷன் எடிசன் கார் கலக்கலாக உள்ளது.

பி.எம்.டபுள்யூ எம்5 காம்படீஷன் எடிசன் விரைவில் அறிமுகம்

குறிப்பிட்ட எண்ணிக்கையில் அதாவது 200 கார்கள் மட்டுமே இந்த மாடலில் பி.எம்.டபுள்யூ தயாரிக்க உள்ளது. அதுவும் ஆர்டர் முறையில் தான் கார்கள் தயாரிக்கப்படுகிறது. 200 எண்ணிக்கையிலான பி.எம்.டபுள்யூ எம்5 காம்படீஷன் எடிசன் கார்களில் 100 கார்கள் வெள்ளை நிறங்களிலும் மீதி 100 கார்கள் கருப்பு நிறங்களிலும் வடிவமைக்கப்படும்.

பி.எம்.டபுள்யூ எம்5 காம்படீஷன் எடிசன் விரைவில் அறிமுகம்

ஆட்டோமொபைல் உலகில் பலத்த எதிர்பார்ப்பை இந்த கார் பெற்றிருந்தாலும், இந்தியாவில் எப்போது அது வெளிவருகிறது, ரூபாய் மதிப்பில் அதற்கான விலை என்ன? என்பன போன்ற தகவலை பி.எம்.டபுள்யூ நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. அனாலும் விரைவில் இந்தியாவில் கால்பதிக்கவுள்ளது பி.எம்.டபுள்யூ

எம்5 காம்படீஷன் எடிசன் மாடல் கார்.

English summary
BMW M5 Competition Edition is all set to enter India. Only 200 units of the M5 Competition Edition will ever be sold across the world.
Story first published: Friday, April 7, 2017, 13:12 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark