ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காருக்கு சிறப்பு கடன் திட்டம்... முதல் ஓர் ஆண்டுக்கு இஎம்ஐ கட்ட வேண்டாம்!

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காருக்கு சிறப்பு கடன் திட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முதல் ஓர் ஆண்டுக்கு மாதத் தவணையிலிருந்து விடுதலை தரும் இந்த திட்டம் குறித்து விரிவானத் தகவல்களை காணலாம்.

By Saravana Rajan

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காருக்கு சிறப்பு அதிரடி ஆஃபர் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முதல் ஓர் ஆண்டுக்கு மாதத் தவணை கட்டுவதிலிருந்து விடுதலை அளிக்கும் இந்த திட்டம் குறித்து விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காருக்கு சிறப்பு கடன் திட்டம்... முதல் ஓர் ஆண்டுக்கு இஎம்ஐ கட்ட வேண்டாம்!

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காருக்கு Own now. Pay in 2019 என்ற பெயரில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து டீலரை தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்த திட்டம் தற்போது அமலில் இருப்பதாக உறுதியானது.

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காருக்கு சிறப்பு கடன் திட்டம்... முதல் ஓர் ஆண்டுக்கு இஎம்ஐ கட்ட வேண்டாம்!

இந்த திட்டத்தின்படி, காரின் எக்ஸ்ஷோரூம் விலையில் 20 சதவீதத்தையும், ஆர்டிஓ பதிவுக்கான கட்டணம் மற்றும் இன்ஸ்யூரன்ஸ் ஆகியவற்றை சேர்த்து வாடிகக்கையாளர்கள் கட்ட வேண்டும்.

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காருக்கு சிறப்பு கடன் திட்டம்... முதல் ஓர் ஆண்டுக்கு இஎம்ஐ கட்ட வேண்டாம்!

இதன் பின்னர் காரின் எக்ஸ்ஷோரூம் விலையில் 80 சதவீதம் கடனாக வழங்கப்படும். இந்த திட்டத்தின்படி, விண்ணப்பதாரரின் சிபில் ஸ்கோர் மற்றும் வங்கி எதிர்பார்க்கும் திருப்பி செலுத்தும் திறனின் அடிப்படையில் கடன் வழங்கப்படும்.

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காருக்கு சிறப்பு கடன் திட்டம்... முதல் ஓர் ஆண்டுக்கு இஎம்ஐ கட்ட வேண்டாம்!

முதல் ஓர் ஆண்டுக்கு இஎம்ஐ கட்ட தேவையில்லை. வரும் 2019ம் ஆண்டிலிருந்து இஎம்ஐ கட்ட வேண்டும். இந்த திட்டம் மிகச் சிறப்பானதாக இருக்கும். முதல் ஓர் ஆண்டுக்கு மாதத் தவணையிலிருந்து விடுதலை கிடைப்பதால், பொருளாதார ரீதியில் வாடிக்கையாளர்கள் நிம்மதி பெற முடியும்.

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காருக்கு சிறப்பு கடன் திட்டம்... முதல் ஓர் ஆண்டுக்கு இஎம்ஐ கட்ட வேண்டாம்!

அதாவது, டவுண் பேமண்ட் மட்டும் இருந்தால் உடனடியாக வென்ட்டோ காரை வாங்கி விடும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், ஓர் ஆண்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதையும் சில வாடிக்கையாளர்கள் தவிர்த்துக் கொள்ளலாம்.

Recommended Video

[Tamil] 2017 Skoda Octavia RS Launched In India - DriveSpark
ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காருக்கு சிறப்பு கடன் திட்டம்... முதல் ஓர் ஆண்டுக்கு இஎம்ஐ கட்ட வேண்டாம்!

மிட்சைஸ் செடான் கார் செக்மென்ட்டில் சிறந்த கட்டுமானத் தரம் கொண்ட மாடல் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார். இந்த காரின் டிசைனும் சிறப்பாக இருப்பதுடன், சிறந்த வசதிகளை அளிக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காருக்கு சிறப்பு கடன் திட்டம்... முதல் ஓர் ஆண்டுக்கு இஎம்ஐ கட்ட வேண்டாம்!

இந்த காரின் பெட்ரோல் மாடல் 1.2 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 174 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 153 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காருக்கு சிறப்பு கடன் திட்டம்... முதல் ஓர் ஆண்டுக்கு இஎம்ஐ கட்ட வேண்டாம்!

1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காருக்கு சிறப்பு கடன் திட்டம்... முதல் ஓர் ஆண்டுக்கு இஎம்ஐ கட்ட வேண்டாம்!

டீசல் மாடலில் 1.5 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 109 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் தேர்வு செய்து கொள்ளலாம்.

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காருக்கு சிறப்பு கடன் திட்டம்... முதல் ஓர் ஆண்டுக்கு இஎம்ஐ கட்ட வேண்டாம்!

இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்வதற்கு அருகாமையிலுள்ள ஃபோக்ஸ்வேகன் டீலரை அணுகி தெரிந்து கொள்ளவும். வங்கி நிபந்தனைகளை தெரிந்து கொண்டு இந்த திட்டம் தொடர்பான தகவல்களை கேட்டு முடிவு செய்து கொள்ளலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, December 9, 2017, 10:56 [IST]
English summary
Volkswagen India has announced an offer on its website that you probably cannot refuse. The ad says 'Own now. Pay in 2019'.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+