க்ராஷ் கார்டுகள் பொருத்தப்பட்ட கார்களுக்கு மத்திய அரசு அறிவித்திருக்கும் அபராதத்தொகை- விபரம்..!!
க்ராஷ் கார்டுகள் பொருத்தப்பட்ட கார்களுக்கு மத்திய அரசு அறிவித்திருக்கும் அபராதத்தொகை- விபரம்..!!
மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சகம் கார்களில் இனி க்ராஷ் கார்டுகளை பயன்படுத்துவதற்கு சமீபத்தில் தடை உத்தரவு பிறப்பித்தது.

வாகன ஓட்டிகள் மற்றும் சாலை பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறக்கப்பட்டதாக அமைச்சக அதிகாரிகள் காரணம் கூறினர்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்த தடை உத்தரவு ஒருமனதாக பின்பற்றப்பட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுக்குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், மாநில அரசுகள் சாலை பாதுகாப்பை உறுதிசெய்ய கடுமையான நடவடிக்கைகளில் இறங்குவது அவசியம் என கூறியுள்ளது.

க்ராஷ் கார்டுகள் பொருத்தப்பட்ட, மோட்டார் வாகன சட்டம் 1988-யை மீறக்கூடிய வாகனங்களுக்கு ரூ.1000 அபராதமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது முதல் தடவையாக தவறு செய்யும் வாகனங்களுக்கு மட்டுமே, தொடர்ந்து அதே வாகன இரண்டாவது முறையாக பிடிப்பட்டால், அபராதத்தொகை ரூ. 2000-மாக வசூலிக்கப்படும்.
Recommended Video


வாகன ஓட்டிகளுக்கு மட்டுமில்லாமல், க்ராஷ் கார்டுகளை விற்பனை செய்யும் அல்லது விநியோகம் செய்பவர்களுக்கும் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும்.

க்ராஷ் கார்டு பயன்படுத்துவது குறித்து மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எஸ்யூவி போன்ற கார்களுக்கு கம்பீர தோற்றம் தரும் க்ராஷ் கார்டுகள் பொருத்தப்படுவது மோட்டார் வாகன சட்டம் 1998, பிரிவு 25-ன் கீழ் குற்றம்.

பிரிவு 190 மற்றும் 19-ன் கீழ் இந்த குற்றம் செய்பவர்கள் அரசிற்கு அபராதம் செலுத்த வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் உத்தரவுப்படி, க்ராஷ் கார்டுகள் தடை என்ற விதியை அமல்படுத்திடவும், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்திடவும் மாநில அரசுகளுக்கு அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன சட்டம் 1988, பிரிவு 190-ன் கீழ் க்ராஷ் கார்டுகள் பொருத்தப்பட்ட கார்களை இனி பொதுவெளியில் எடுத்துவர முடியாது.

மோட்டார் வாகன சட்டத்தை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் சாலை பாதுகாப்பில் மெத்தனமாக செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்பதே மத்திய அரசின் உத்தரவின் சாராம்சம்.

முன்பகுதிகளில் க்ராஷ் கார்டுகள் இருப்பதால், விபத்து ஏற்படும் நிலையில் அது சாலை பயணிகளுக்கு பெரிய ஆபத்தை தரும்.

பாதசாரிகளின் பாதுகாப்பை கருதியும் அதற்குரிய அம்சங்களுடன் தற்போதைய கார்கள் வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யபடுகின்றன.

காருக்கான தோற்ற மேம்பாடு, கம்பீர காட்சியமைப்பு என்று க்ராஷ் கார்டுகளுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தாலும், அது ஒரு சாதரண சந்தைகளில் விற்கப்படுபவை.

நேரடியாக கார் நிறுவனங்களால் உருவாக்கப்படுபவை அல்ல. அதனால் அதனுடைய திறனுக்கு நாம் எந்த உத்திரவாதமும் தர இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








