இனி எஸ்யூவி கார்களில் க்ராஷ் கார்டுகளை பொருத்தக்கூடாது மத்திய அரசு எச்சரிக்கை..!!
இனி எஸ்யூவி கார்களில் க்ராஷ் கார்டுகளை பொருத்தக்கூடாது மத்திய அரசு எச்சரிக்கை..!!
இந்தியாவில் ஓடும் கார்களில் இனி க்ராஷ் கார்டு மற்றும் பம்பர் க்ரில் கார்டுகளை பயன்படுத்த மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு பிற்பத்துள்ளது.

கார்களுக்கான தோற்றத்தை வலிமையாக காட்ட பல்வேறு உரிமையாளர்கள், காரின் முன்பகுதியில் க்ராஷ் கார்டுகளை பொருத்துவது அதிகமாகி வருகிறது.

மோட்டார் வாகன சட்டம் பிரிவு 52 விதியின் கீழ், முறைகேடாக க்ராஷ் கார்டு அல்லது பம்பர் க்ரில் கார்டுகள் காரில் பொருத்துவது போக்குவரத்து விதிகளை மீறிய செயல்.

இதன்காரணமாக மோட்டார் வாகன சட்டப்படி 190 மற்றும் 191 ஆகிய பிரிவுகளில் முறைகேடான பம்பர் க்ரில் கார்டுகளை பயன்படுத்துபவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய முடியும்.

பெரும்பாலான கார் உரிமையாளர்கள், ஆபத்து காலத்தில் காரின் முன்பகுதிகளை காப்பாற்றவே க்ராஷ் கார்டுகளை அதிகம் பயன்படுத்திகிறார்கள்.
மேலும் இதனுடைய தோற்றப் பொலிவு காருக்கான கம்பீரத்தை மேலும் மேம்படுத்திக்காட்டும். குறிப்பாக மற்ற கார்களிலிருந்து தனித்து தெரியும்.

குறிப்பிட்ட சில காரணங்களுக்காவே, பெரும்பாலானவர்கள் தங்கள் கார்களில் முறைகேடாக க்ராஷ் கார்டுகளை பொருத்துகின்றனர் என்பது சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் கருத்து.

இருந்தாலும் பல எஸ்யூவி மற்றும் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களில் க்ராஷ் கார்டுகள் அல்லது பம்பர் க்ரில் கார்டுகளை பொருத்தும் மனநிலை தொடர்ந்து மக்களிடம் அதிகரித்து வருகிறது.

சாலை போக்குவரத்து அமைச்சகம் திடீரென இந்த உத்தரவை பிறப்பிக்க காரணம் என்ன? மக்களுக்கு ஏன் க்ராஷ் கார்டுகள் மீது பெரிய ஈர்ப்பு உள்ளது..?? தொடர்ந்து பார்க்கலாம்.
Recommended Video


பம்பர் க்ராஷ் கார்டு மற்றும் ஏர்பேகுகள்
க்ராஷ் கார்டுகளை கார்களில் பொருத்துவதால் ஆபத்து காலங்களில், அது ஏர்பேகுகள் விரிவடைவதை தடுக்கும். இதனால் கார் பயணிகள் விபத்துகளின் போது சிறிய காயங்கள் அல்லது பெரிய ஆபத்து ஏற்பட வழிவகுக்கும்.

பாதிக்கப்படும் காரின் கீழ்பகுதிகள்
காரின் சேஸிஸ்-ல் அமைக்கப்படும் க்ராஷ் கார்டுகளால், காரின் கீழ் பகுதிகள் பெரிய பாதிப்புகளை சந்திக்காது.
மேலும் ஆபத்து காலத்தில் அதிர்வுகளை அது உள்ளிழுத்துக்கொண்டு, காரின் உள்ளே இருக்கும் பயணிகளை காக்கும்.

சாலை பயணிகளுக்கான பாதுகாப்பு
முன்பகுதிகளில் க்ராஷ் கார்டுகள் இருப்பதால், விபத்து ஏற்படும் நிலையில் அது சாலை பயணிகளுக்கு பெரிய ஆபத்தை தரும்.
பாதசாரிகளின் பாதுகாப்பை கருதியும் அதற்குரிய அம்சங்களுடன் தற்போதைய கார்கள் வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யபடுகின்றன.

கார்களின் அழகிற்கு வேண்டி பொருத்தப்பட்டு, விபத்து ஏற்படும் நேரங்களில் காரின் தோற்றத்தையே மாற்றி அமைத்துவிடலாம்.

குறையும் மைலேஜ்
கார் க்ராஷ் கார்டுகள் அல்லது புல் பார்கள் எஃகுகளால் உருவாக்கப்படுகின்றன. அதனால் காரின் எடை கூடும். இது காரின் செயல்திறனுக்கும் மற்றும் மைலேஜிற்கும் பாதிப்பை தரும்.
காருக்கான தோற்ற மேம்பாடு, கம்பீர காட்சியமைப்பு என்று க்ராஷ் கார்டுகளுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தாலும், அது ஒரு சாதரண சந்தைகளில் விற்கப்படுபவை.

நேரடியாக கார் நிறுவனங்களால் உருவாக்கப்படுபவை அல்ல. அதனால் அதனுடைய திறனுக்கு நாம் எந்த உத்திரவாதமும் தர இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்டுகள் அல்லது பம்பர் க்ரில் கார்டுகளை உங்கள் கார்களில் பயன்படுத்துபவராக நீங்கள் இருந்தால், அதை உடனே அகற்றுங்கள்.

தேவையை உணர்ந்து, ஆபத்தை உணர்ந்து பாதிப்புகளை தடுக்க மற்றும் ஆர்.டி.ஓ-வின் அபராதங்களுக்கு உள்ளாக இருக்கலாம்.
Trending Drivespark YouTube Videos
Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here


Click it and Unblock the Notifications








