கார் நிறுவனங்கள் அள்ளித்தரும் அதிரடி சலுகைகளின் தொகுப்பு

Written By:

ஒவ்வொரு நிதி ஆண்டும் மார்ச் முதல் அடுத்த மார்ச் மாதம் வரையில் கணக்கிடப்படுகிறது. இது நிறுவனங்களின் வரி மற்றும் கணக்கிடும் வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட முறையாகும். பல நிறுவனங்களும் ஆண்டுக்கணக்கை முடிப்பதற்காக இந்த காலகட்டத்தில் சலுகைகளை வாரிவழங்கும். இதையொட்டி கார் நிறுவனங்கள் என்னென்ன சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கின்றன என்பதனை காணலாம்.

கார் நிறுவனங்கள் அளிக்கும் அதிரடி சலுகைகள்!

இந்த தொகுப்பில் மாருதிசுசுகி, ஹுண்டாய், ஹோண்டா மற்றும் டாடா நிறுவனங்கள் அளிக்கும் சலுகைகளை விரிவாக பார்க்கலாம். இந்த சலுகைகள் டீலர்களை பொருத்து மாறுபடலாம். புதிதாக கார் வாங்க தீர்மானித்துள்ளவர்கள் இந்த சலுகைகளை பயன்படுத்திக்கொள்ளலாம். இது மார்ச் மாத இறுதி வரை மட்டுமே என்பதனை நினைவில் கொள்ளவேண்டும்.

மாருதிசுசுகி

மாருதிசுசுகி

இந்தியாவின் நம்பகத்தன்மை நிறைந்த கார் நிறுவனமாக மாருதிசுசுகி நிறுவனம் விளங்குகிறது. தற்போது இதன் ஆல்டோ 800, ஆல்டோ கே10, வேகன் ஆர், செலிரியோ, ஸ்விப்ட், எர்டிகா மற்றும் டிசைர் கார்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது மாருதி.

ஆல்டோ 800

ஆல்டோ 800

மார்ச்20 ஆம் தேதி வரை ஆல்டோ 800 கார் வாங்குபவர்களுக்கு ரூ.15000 ரொக்க சலுகை தரப்படுகிறது.

எக்ஸ்சேஞ்ச் அடிப்படையில் ஆல்டோ 800 வாங்க எண்ணுபவர்கள், உங்களின் பழைய கார் 7 வருடத்திற்குள் இருக்கும் பட்சத்தில் ரூ.20,000 தள்ளுபடியும், 7 வருடத்திற்கு மேற்பட்ட கார்களை எக்ஸ்சேஞ்ஜ் செய்தால் ரூ.10,000 சலுகையும் தரப்படுகிறது.

ஆல்டோ கே10

ஆல்டோ கே10

மார்ச்20 ஆம் தேதி வரை ஆல்டோ கே10 கார் வாங்குபவர்களுக்கு ரூ.12,000 ரொக்க சலுகை தரப்படுகிறது.

7 வருடத்திற்குள்ளான மாடல் கார்களை எக்ஸ்சேஞ்ச் செய்தால்,

ரூ.20,000 தள்ளுபடியும், 7 வருடத்திற்கு மேற்பட்ட கார்களை எக்ஸ்சேஞ்ஜ் செய்தால் ரூ.10,000 சலுகையும் தரப்படுகிறது.

வேகன் ஆர்

வேகன் ஆர்

மார்ச்20 ஆம் தேதி வரை வேகன் ஆர் கார் வாங்குபவர்களுக்கு ரூ.15,000 ரொக்க சலுகை தரப்படுகிறது.

7 வருடத்திற்குள்ளான மாடல் கார்களை எக்ஸ்சேஞ்ச் செய்தால்,

ரூ.30,000 தள்ளுபடியும், 7 வருடத்திற்கு மேற்பட்ட கார்களை எக்ஸ்சேஞ்ஜ் செய்தால் ரூ.15,000 சலுகையும் தரப்படுகிறது.

செலிரியோ

செலிரியோ

செலிரியோ பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வேரியண்ட் கார்கள் வாங்குபவர்களுக்கு ரூ.15,000 ரொக்க சலுகை தரப்படுகிறது.

ஸ்விப்ட்

ஸ்விப்ட்

ஸ்விப்ட் கார்கள் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் வேரியண்டில் கிடைக்கிறது. இதன் எல்எக்ஸ் பெட்ரோல் வேரியண்ட் வாங்குபவர்களுக்கு ரூ.18,000 சலுகையும், விஎக்ஸ்ஐ மற்றும் இசட்எக்ஸ்ஐ பெட்ரோல் மாடல்களுக்கு ரூ.10,000, மற்றும் எல்டிஐ, விடிஐ மற்றும் இசட்டிஐ ஆகிய டீசல் வேரியண்டுகளுக்கு ரூ. 20,000 ரொக்க சலுகை அளிக்கிறது மாருதி நிறுவனம்.

டிசைர்

டிசைர்

டிசைர் பெட்ரோல் கார்களுக்கு ரூ.10,000 மற்றும் டீசல் கார்களுக்கு ரூ.15,000 தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

எர்டிகா

எர்டிகா

மல்டி பர்பஸ் வெஹிகிளான எர்டிகா பெட்ரோல் மற்றும் டீசல் வெரியண்டுகளுக்கு ரூ.10,000மும், ஸ்மார்ட் ஹைபிரிட் வேரியண்டுக்கு ரூ.13,000 தள்ளுபடி தருகிறது மாருதி.

சியாஸ்

சியாஸ்

செடன் வகை காரான சியாஸ் பெட்ரோல் வேரியண்டுக்கு ரூ. 20,000, டீசல் வேரியண்ட் ரூ.33,000 மற்றும் எக்ஸ்சேஞ்ச் கார்களுக்கு ரூ.40,000 தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

மாருதியின் மற்ற மாடல்களான இக்னிஸ், பலினோ மற்றும் விட்டாரா பிரஸ்ஸா மாடல்களுக்கு எந்தவித சலுகையும் அளிக்கப்படவில்லை.

ஹோண்டா

ஹோண்டா

ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா தனது பிரியோ, அமேஸ், ஜாஸ், பிஆர்-வி மற்றும் சிஆர்-வி கார்களுக்கு சலுகை அறிவித்துள்ளது.

அதன்படி, பிரியோ, அமேஸ், ஜாஸ் மற்றும் பிஆர்-வி மாடல்களுக்கு இலவச இன்ஸூரன்ஸ் அளிக்கப்படுகிறது.

அமேஸ் காருக்கு எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.10,000 மற்றும் ஆக்ஸஸரிகளுக்கு ரூ.5,500 சலுகை தரப்படுகிறது.

ஹோண்டா

ஹோண்டா

இதேபோல, ஜாஸ் கார்களுக்கு எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ. 20,000 தரப்படுகிறது.

ஹோண்டா சிஆர்-வி மாடல் விலையில் அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய் தள்ளுபடியும், பிஆர்-வி கார் ஆக்ஸஸரிகளுக்கு ரூ.14,000 சலுகை தரப்படுகிறது.

ஹுண்டாய்

ஹுண்டாய்

ஹுண்டாய் நிறுவனம் அதன் இயான், ஐ10, கிராண்ட் ஐ10, எக்ஸ்செண்ட் மற்றும் வெர்னா கார்களுக்கு சலுகை அளிக்கிறது.

இதன்படி, இயானுக்கு இலவச இன்சூரன்ஸ், ரூ.10,000 விலையில் தள்ளுபடி மற்றும் கார்ப்பரேட் சலுகையாக ரூ.5,000 தரப்படுகிறது.

ஐ10: ரொக்க சலுகை - ரூ.35,000, எக்ஸ்சேஞ்ச் சலுகை - ரூ.10,000

2017 கிராண்ட் ஐ10: இலவச இன்சூரன்ஸ், ரூ.5,000க்கு பெட்ரோல் - டீசல், எக்ஸ்சேஞ்ச் போனஸ் - ரூ.20,000

எக்ஸ்செண்ட்: பெட்ரோல் வேரியண்ட் - ரூ. 30,000 விலையில் சலுகை. டீசல் வேரியண்ட் - ரூ. 15,000 விலையில் சலுகை தரப்படுகிறது.

ஹுண்டாய்

ஹுண்டாய்

எலைட் ஐ10 மற்றும் ஆக்டிவ் ஐ10 கார்களுக்கு ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ்.

வெர்னா: ரூ.50,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.10,000 கார்பரேட் தள்ளுபடி மற்றும் ரூ.30,000 கேஷ் பேக் சலுகை.

டாடா

டாடா

டாடா நிறுவனங்கள் அளிக்கும் சலுகைகள் கீழ்கண்டவாறு:

செஸ்ட் : ரூ.15,000 விலையில் சலுகை, ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ்.

போல்ட்: ரூ.10,000 விலையில் சலுகை, ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ்.

நானோ: பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு ரூ. 10,000 விலை சலுகையும் அளிக்கப்படுகிறது.

டியாகோ கார்களுக்கு எந்த சலுகையையும் டாடா நிறுவனம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மெர்சிடஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் காரின் படங்கள்: 

English summary
As the financial year comes to an end, India's top most car manufacturers, Maruti Suzuki, Hyundai and TATA are offering discounts on their products
Story first published: Wednesday, March 8, 2017, 15:56 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark