கார் டேஷ்போர்டில் இருக்கும் எச்சரிக்கை விளக்குகளும் அதன் பயன்களும்..!!

காரின் டேஷ்போர்டில் இருக்கும் எச்சரிக்கை விளக்குகள் மற்றும் அவற்றின் பயன்கள் குறித்த தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

By Arun

கார் டேஷ்போர்டின் மையப் புள்ளியாக இருப்பது இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர். காரின் அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைக்கும் பகுதி என்று இதனை கூறலாம்.

கார் டேஷ்போர்ட்டில் உள்ள எச்சரிக்கை விளக்குகள்:முழு தகவல்கள்!!

கார் டேஷ்போர்டின் மையப் புள்ளியாக இருப்பது இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர். காரின் அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைக்கும் பகுதி என்று இதனை கூறலாம்.

கார் டேஷ்போர்ட்டில் உள்ள எச்சரிக்கை விளக்குகள்:முழு தகவல்கள்!!

ஆனால் ஒவ்வொரு எச்சரிக்கை விளக்கும் காரின் இயக்கம் குறித்து ஓட்டுநருக்கு எச்சரிக்கை செய்யவே கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எச்சரிக்கை விளக்குகள் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் விரிவாக காணலாம்.

லோ ஃபியூயல் இண்டிகேட்டர்

லோ ஃபியூயல் இண்டிகேட்டர்

காரில் உள்ள எரிபொருள் அளவைக் காட்டும் கருவி இது. எரிபொருளின் அளவு ரிசர்வ்-ஐ அடையும் போது இந்த விளக்கு எரியும்.

இந்த விளக்கை சரியாக கண்காணித்தால் எரிபொருள் தீர்ந்து போய் நடுவழியில் நிற்கவேண்டிய நிலை ஏற்படாது.

ஓபிடி (OBD) இண்டிகேட்டர்

ஓபிடி (OBD) இண்டிகேட்டர்

ஆன் போர்ட் டையக்னோஸ்டிக் இண்டிகேட்டர் என்பதன் சுறுக்கமே ஓபிடி (OBD) இண்டிகேட்டர் எனப்படுகிறது.

கார் இஞ்சின் இயக்கத்தில் கோளாறு ஏற்படும் போது இந்த விளக்கு எரியும். அப்போது காரின் இஞ்சினில் கோளாறு ஏற்பட்டுள்ளது என அர்த்தம் கொண்டு சர்வீஸ் நிலையத்திர்கு காரை எடுத்துச் செல்லவேண்டும்.

ஏபிஎஸ் இண்டிகேட்டர்

ஏபிஎஸ் இண்டிகேட்டர்

ஆண்டி-லாக் பிரேக்கிங் அல்லது ஏபிஎஸ் சிஸ்டத்தில் கோளாறு கண்டறியப்பட்டால் இந்த எச்சரிக்கை விளக்கு எரியும்.

கார் இஞ்சினை ஆன் செய்யும் போது இந்த விளக்கு எரிந்து பிறகு அணைந்துவிடும், இது எப்போதும் எரியும் நிலையிலேயே இருந்தால் ஏபிஎஸ் சிஸ்டத்தில் கோளாறு என்பது பொருள்.

பேட்டரி & சார்ஜிங் இண்டிகேட்டர்

பேட்டரி & சார்ஜிங் இண்டிகேட்டர்

பேட்டரி சரியான முறையில் சார்ஜ் ஆகாமல் இருந்தால் இந்த இண்டிகேட்டர் நமக்கு எச்சரிக்கை செய்யும். இதன் மூலம் பேட்டரி பழுதாகியுள்ளது என்பதனை கண்டறியலாம்.

இஞ்சின் வெப்பநிலை

இஞ்சின் வெப்பநிலை

இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டரில் தெர்மோமீட்டர் போன்ற ஒரு ஐகான் சிவப்பு நிறத்தில் எரிவதை காணலாம். இந்த விளக்கு எரிந்தால் கார் இஞ்சின் அதிக வெப்பமாகியுள்ளது என்பது பொருள்.

இஞ்சினின் கூலண்ட் காலியாகியிருக்கலாம் அல்லது ஏதேனும் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்பதால் இந்த விளக்கு எரிந்தால் உடனடியாக சர்வீஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லுதல் நல்லது.

ஆயில் பிரஷர்

ஆயில் பிரஷர்

இது இஞ்சின் ஆயில் டெலிவரி சிஸ்டத்தில் ஏற்படும் கோளாரை சுட்டிக்காட்டுகிறது. இஞ்சின் ஆயில் அளவு குறையும் போது இது நம்மை எச்சரிக்கிறது.

ஃபாக் லைட் இண்டிலேட்டர்

ஃபாக் லைட் இண்டிலேட்டர்

காரின் முகப்பு விளக்குகளுக்கு துணையாக உள்ள ஃபாக் லைட்டுகள் எரிவதை இது காட்டுகிறது.

ஹை பீம் இண்டிகேட்டர்

ஹை பீம் இண்டிகேட்டர்

காரின் முகப்பு விளக்கு ஹை பீம் நிலையில் எரிவதை இந்த எச்சரிக்கை விளக்கு உணர்த்துகிறது.

ஏர் பேக் இண்டிகேட்டர்

ஏர் பேக் இண்டிகேட்டர்

காரின் முக்கிய பாதுகாப்பு அம்சமான ஏர் பேக் தொழில்நுட்பத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் இந்த எச்சரிக்கை விளக்கு எரியும். இதனை சரிசெய்யாவிட்டால் ஆபத்து காலத்தில் ஏர் பேக் செயல்படாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

டயர் பிரெஷர் இண்டிகேட்டர்

டயர் பிரெஷர் இண்டிகேட்டர்

குறிப்பிட்ட அளவைக்காட்டிலும் காற்றின் பிரெஷர் அளவு குறைந்துள்ளது என்பதை இந்த எச்சரிக்கை விளக்கு உணர்த்தும்.

டோர் இண்டிகேட்டர்

டோர் இண்டிகேட்டர்

காரின் கதவுகள் சரியாக அடைக்கப்படாததை இது காட்டுகிறது.

சீட் பெல்ட் இண்டிகேட்டர்

சீட் பெல்ட் இண்டிகேட்டர்

சீட் பெல்ட் அணியாமல் இருப்பதை இது காட்டுகிறது. சீட் பெல்ட் அணியும் வரை இந்த விளக்கு எரிந்து கொண்டேதான் இருக்கும்.

பிரேக் அலர்ட் இண்டிகேட்டர்

பிரேக் அலர்ட் இண்டிகேட்டர்

காரின் முக்கிய அம்சமான பிரேக்குகளில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் இந்த இண்டிகேட்டர் காட்டிக்கொடுத்துவிடும்

எச்சரிக்கை விளக்கு

எச்சரிக்கை விளக்கு

கண்டறிய இயலாத பிற கோளாறுகள் ஏற்பட்டுள்ளதை இந்த எச்சரிக்கை விளக்கு உணர்த்துகிறது. இந்த விளக்கு எரியுமாயின் உடனடியாக சர்வீஸ் நிலையத்திற்கு காரை எடுத்துச் செல்வதே நல்லது.

ஹசார்ட் லைட்

ஹசார்ட் லைட்

காரில் உள்ள எமெர்ஜென்ஸி விளக்கு ஆன் செய்யப்பட்டிருப்பதை இந்த எச்சரிக்கை விளக்கு உணர்த்துகிறது.

விண்ட்ஷீல்ட் டீஃப்ராஸ்ட்

விண்ட்ஷீல்ட் டீஃப்ராஸ்ட்

காரின் கண்ணாடியில் ஏற்படும் அதீத குளிர்ச்சியை சரிசெய்ய டீஃப்ராஸ்ட் பயன்படுகிறது. இது இயக்கத்தில் இருந்தால் இந்த எச்சரிக்கை விளக்கு அதை உணர்த்தும்.

குளோ பிளக் வார்னிங்

குளோ பிளக் வார்னிங்

இது பொதுவாக டீசல் கார்களில் மட்டுமே இருக்கும். காரின் இஞ்சின் மேலான்மை தொழில்நுட்பமான ஈசியூ-வில் கோளாறு ஏற்பட்டால் இந்த விளக்கு அதை உணர்த்தும்.

Most Read Articles
English summary
Read in Tamil about Car Dashboard lights and their meaning.
Story first published: Saturday, June 3, 2017, 16:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X