யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி பயங்கர விபத்து!

Written By:

டெல்லி- ஆக்ரா இடையிலான யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் புகைமூட்டத்தால், 5 கார்கள் அடுத்தடுத்து ஒன்றன் பின் ஒன்றாக மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து வெளியான நேரலை வீடியோ பதைபதைக்க வைக்கிறது.

யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் 5 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி பயங்கர விபத்து!

டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் அதிக காற்று மாசு காரணமாக புகைமூட்டமும் நிலவுகிறது. இதனால், பகல் வேளைகளில் புகைமூட்டம் நிலவுவதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதுபோன்ற சமயங்களில் அங்கு வாகன விபத்து தொடர்கதையாக மாறி வருகிறது.

யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் 5 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி பயங்கர விபத்து!

டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் கடும் புகை மூட்டம் நிலவியது. அருகில் செல்பவர் கூட தெரியாத அளவுக்கு புகை மூட்டம் நிலவியதால், இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது.

யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் 5 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி பயங்கர விபத்து!

இந்த நிலையில், டெல்லி- ஆக்ரா இடையிலான யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் சென்ற 5 கார்கள் புகைமூட்டம் காரணமாக இன்று காலை ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்தில் சிக்கின. இதில் பலர் காயமடைந்ததாக தெரிய வருகிறது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு இல்லை.

யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் 5 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி பயங்கர விபத்து!

இந்த விபத்தின் போது எடுக்கப்பட்ட நேரலை வீடியோவில்[செய்தியின் கடைசி ஸ்லைடில் இணைக்கப்பட்டு இருக்கிறது] கார்கள், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கிடப்பதும், இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் பதைபதைப்புடன் வெளியேறும் காட்சிகள் அதிர்ச்சியை தருவதாக இருக்கிறது.

Recommended Video - Watch Now!
[Tamil] Tata Nexon Review: Specs
யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் 5 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி பயங்கர விபத்து!

இதுபோன்ற சமயங்களில் எந்தளவு எச்சரிக்கையாக கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்ட வேண்டும் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. புகைமூட்டம் நிலவும் போது பயணத்தை தவிர்ப்பதே இதுபோன்ற விபத்துக்களிலிருந்து தப்பிப்பதற்கான வழி.

யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் 5 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி பயங்கர விபத்து!

அவசரம் என்றால், மிகுந்த எச்சரிக்கையுடன் செல்வது அவசியம். பனி விளக்கு மற்றும் முகப்பு விளக்கை ஒளிரவிட்டு செல்வதன் மூலமாக பிற வாகன ஓட்டிகளுக்கு உங்களது வாகனம் புலப்படும்.

யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் 5 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி பயங்கர விபத்து!

மிக குறைவான வேகத்தில் வாகனத்தை ஓட்டுவதும், முன்னால் வாகனம் செல்வது தெரிந்தால், அதிக இடைவெளி விட்டு செல்வதும் சாலச் சிறந்தது. அதாவது, உங்களது காரின் பிரேக் பிடிக்கும் திறனை மனதில் வைத்து இடைவெளி விட்டு செல்லவும்.

யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் 5 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி பயங்கர விபத்து!

முன்னால் செல்லும் வாகனத்துடன் உங்களது கார் எதிர்பாராதவிதமாக இடித்துவிட்டால், ஹசார்டு சுவிட்சை ஆன் செய்து இண்டிகேட்டர்களை ஒளிரவிட்டு, உடனடியாக காரைவிட்டு வெளியேற முயற்சிக்கவும்.

யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் 5 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி பயங்கர விபத்து!

இல்லையெனில், பின்னால் வரும் வாகனம் மோதி உங்களுக்கு அதிக காயம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. வாகன விபத்து ஏற்பட்ட இடத்தைவிட்டு உடனடியாக சாலை ஓரம் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிடுங்கள். இந்த எளிய வழிமுறைகளை கையாள்வதன் மூலமாக விபத்து ஆபத்திலிருந்து தப்பலாம்.

கார்கள், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றன் பின் ஒன்றாக மோதிக் கிடக்கும் வீடியோவை காணலாம். புகைமூட்டம் அல்லது பனிமூட்டம் ஏற்படும்போது மிக கவனமாக காரை ஓட்டுவதன் அவசியத்தை புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறோம்.

English summary
Cars collide on Yamuna highway due to thick smog.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark