சென்னையில் பேருந்து & மெட்ரோவில் பயணம் செய்ய ஸ்மார்ட் கார்டு திட்டம் விரைவில் அறிமுகம்..!!

சென்னையில் பேருந்து & மெட்ரோவில் பயணம் செய்ய ஸ்மார்ட் கார்டு திட்டம் விரைவில் அறிமுகம்..!!

By Azhagar

சென்னை நகரத்தில் பேருந்து மற்றும் ரயிலில் பயணிகளை ஒரே கார்டு மூலம் பயணிக்க வைக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

சென்னையில் போக்குவரத்திற்கான ஸ்மார்ட் கார்டு அறிமுகம்..!!

சென்னையில் பேருந்து, மெட்ரோ ரயில், புறநகர் ரயில் போன்ற போக்குவரத்து வசதிகளில் தினமும் 42 லட்சம் மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

சென்னையில் போக்குவரத்திற்கான ஸ்மார்ட் கார்டு அறிமுகம்..!!

இதற்காக சென்னையை சுற்றி 40 கி.மீ வரை பல்வேறு வழிகளில் சுமார் 3365 பேருந்துகளை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது.

சென்னையில் போக்குவரத்திற்கான ஸ்மார்ட் கார்டு அறிமுகம்..!!

மக்களுக்கான பயண சேவையை மேம்படுத்தப்பட்ட சமீப ஆண்டுகளுக்கு முன்னர் மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் போக்குவரத்திற்கான ஸ்மார்ட் கார்டு அறிமுகம்..!!

பயன்பாட்டிற்கு வந்த பிறகு தினமும் சென்னை மெட்ரோவில் பல ஆயிரம் பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள்.

சென்னையில் மெட்ரோ ரயில் கட்டமைக்கப்படுவதற்கு முன்னர், ஸ்மார்டு கார்டு பயன்பாட்டுக்கு வரும் என்றும்,

Recommended Video

[Tamil] Honda CBR 650F Launched In India - DriveSpark
சென்னையில் போக்குவரத்திற்கான ஸ்மார்ட் கார்டு அறிமுகம்..!!

அதை பேருந்து மற்றும் ஆட்டோ கட்டணத்திற்கும் பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டு இருந்தது.

சென்னையில் போக்குவரத்திற்கான ஸ்மார்ட் கார்டு அறிமுகம்..!!

இந்த திட்டம் பல ஆண்டுகள் காத்திருப்பிற்கு பிறகு விரைவில் இந்தாண்டிற்குள் தமிழக போக்குவரத்து துறை அறிமுகப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

சென்னையில் போக்குவரத்திற்கான ஸ்மார்ட் கார்டு அறிமுகம்..!!

ஸ்மார்ட் கார்டு அறிமுகப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தலைமை செயலாளருடன் மெட்ரோ ரயில் அதிகாரிகள் கலந்து ஆலோசித்து வருகின்றனர்.

சென்னையில் போக்குவரத்திற்கான ஸ்மார்ட் கார்டு அறிமுகம்..!!

இதன் காரணமாக இந்தாண்டின் இறுதிக்குள் அல்லது, 2018 தொடக்கத்தில் ஸ்மார்டு கார்டு போக்குவரத்து திட்டம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் போக்குவரத்திற்கான ஸ்மார்ட் கார்டு அறிமுகம்..!!

மொபைல் மற்றும் இணைய வசதிக்கு ரீசார்ஜ் செய்வது போன்று, இந்த ஸ்மார்டு கார்டை பயனாளிகள் ரீசார்ஜ் செய்துக்கொள்ளலாம்.

சென்னையில் போக்குவரத்திற்கான ஸ்மார்ட் கார்டு அறிமுகம்..!!

ரீசார்ஜ் செய்யப்பட்ட ஸ்மார்டு கார்டை, பேருந்து மற்றும் மெட்ரோவில் கொடுக்கப்பட்டுள்ள ஸ்வைப்பிங் மெஷினில் தேய்து பயணம் செய்யலாம்.

சென்னையில் போக்குவரத்திற்கான ஸ்மார்ட் கார்டு அறிமுகம்..!!

பயண தூரங்களுக்கு ஏற்றவாறு விலைப்பட்டியல் தயாரிக்கப்பட்டு இருப்பதன் படி, ஸ்மார்டு கார்டின் ரீசார்ஜ் செய்யப்பட்ட பணம் ஏற்றுக்கொள்ளப்படும்.

சென்னையில் போக்குவரத்திற்கான ஸ்மார்ட் கார்டு அறிமுகம்..!!

ஏற்கனவே டெல்லி நகரத்தில் இந்த பயன்பாடு நடைமுறையில் உள்ளது. மேலும் மும்பை மற்றும் கொல்கத்தாவிலும் முழு அளவில் செயல்படவுள்ளது.

சென்னையில் போக்குவரத்திற்கான ஸ்மார்ட் கார்டு அறிமுகம்..!!

போக்குவரத்திற்கான ஸ்மார்டு கார்டு நடைமுறை பயன்பாட்டிற்கு வந்தால், சாலைகளில் டிராஃபிக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் போக்குவரத்திற்கான ஸ்மார்ட் கார்டு அறிமுகம்..!!

பெரும்பாலான கார் ஓட்டுநர்களும் மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்ய அதிக வாய்ப்புள்ளது.

போக்குவரத்திற்கான செயல்பாடுகள் இவ்வாறு மேம்படுத்தப்படுவதன் மூலம், பல தரப்பு மக்களும் போக்குவரத்து தேவைகளில் பயனடைவர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 31, 2017, 10:28 [IST]
English summary
Read in Tamil: Chennai gets Smart Card Technology for Bus and Metro Transportation. Click for Details...
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+