புதிய செவர்லே எசென்சியா செடான் கார் ஏற்றுமதிக்கு மட்டுமே!!

Written By:

இந்தியாவில் இந்த ஆண்டுடன் செவர்லே கார்கள் விற்பனையை நிறுத்திக்கொள்ளப் போவதாக அறிவித்து ஆட்டோமொபைல் உலகிற்கு அதிர்ச்சி கொடுத்தது ஜெனரல் மோட்டார்ஸ்.

இந்நிலையில் அந்நிறுவனம் இந்தியாவில் அடுத்தடுத்த மாதங்களில் வெளியிட இருந்த 2017 செவர்லே பீட் மற்றும் புதிய பீட் எசென்சியா கார்களின் விற்பனைக்கான வெளியீட்டை ரத்து செய்துள்ளது.

செவர்லே எசென்சியா காருக்கு நாம் குட்பை சொல்லும் நேரமிது..!

இதில் கடந்தாண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவின் போது ஜெனரல் மோட்டார்ஸ் புதிய எசென்சியா காரை காட்சிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

செவர்லே பீட் கார் இந்தியாவில் அறிமுகமான போது அதனுடைய விற்பனை உச்சத்தில் இருந்தது. தற்போது செவர்லே கார்களில் பலருக்கும் தெரிந்த மாடல் பீட் தான்.

செவர்லே எசென்சியா காருக்கு நாம் குட்பை சொல்லும் நேரமிது..!

தற்போது ஜெனரல் மோட்டார்ஸ் தயாரித்திருக்கும் செவர்லே பீட் எசென்சியா கார் செடான் மாடல் கார்களில் முற்றிலும் புதிய வடிவமைப்பை கொண்டது.

செவர்லே எசென்சியா காருக்கு நாம் குட்பை சொல்லும் நேரமிது..!

ஜெனரல் மோட்டார்ஸ் பீட் எசென்சியா காரை டாடா டிகோர் செடான் காரின் நேரடி போட்டியாக சந்தையில் களமிறக்க திட்டமிட்டு இருந்தது.

செவர்லே எசென்சியா காருக்கு நாம் குட்பை சொல்லும் நேரமிது..!

மேம்படுத்தப்பட்ட மாடலில் தயாராகியுள்ள செவர்லே 2017 பீட் கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு மாடல்களில் இந்தியாவில் வெளியிட திட்டமிடப்பட்டது.

செவர்லேவின் 'மை லிங்' தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இதனுடைய உள்கட்டமைப்பில் கவனம் ஈர்க்கிறது.

செவர்லே எசென்சியா காருக்கு நாம் குட்பை சொல்லும் நேரமிது..!

இந்தியா சாலைகளில் ஜெனரல் மோட்டார்ஸ் சமீபகாலங்களில் செவர்லே எசென்சியா பீட் காருக்கான சோதனை ஓட்டத்தையும் கூட நடந்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

செவர்லே எசென்சியா காருக்கு நாம் குட்பை சொல்லும் நேரமிது..!

ஆனால் தற்போது இந்தியாவில் அந்நிறுவனத்திற்கு ஏற்பட்டு இருக்கும் நெருக்கடியால் செவர்லேவின் இந்த இரண்டு புதிய மாடல்களுக்கும் நாம் குட்பை சொல்ல வேண்டிய நேரம் உருவாகியுள்ளது.

செவர்லே எசென்சியா காருக்கு நாம் குட்பை சொல்லும் நேரமிது..!

ஜெனரல் மோட்டார்ஸின் அறிவிப்பு இந்தியாவில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தாலும், தொடர்ந்து இந்தியாவை ஏற்றுமதிக்காக அந்நிறுவனம் பயன்படுத்தவுள்ளது.

செவர்லே எசென்சியா காருக்கு நாம் குட்பை சொல்லும் நேரமிது..!

அதன்படி, மும்பை அருகே உள்ள ஜெனரல் மோட்டார்ஸின் தொழிற்சாலையில் புதிய பீட் மற்றும் எசென்சியா கார்கள் தயாரிக்கப்படுகின்றன.

செவர்லே எசென்சியா காருக்கு நாம் குட்பை சொல்லும் நேரமிது..!

அங்கியிருந்து, மெக்சிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்க பகுதி நாடுகளுக்கு செவர்லே கார்களை ஏற்றுமதி செய்யவுள்ளது ஜெனரல் மோட்டார்ஸ்.

செவர்லே எசென்சியா காருக்கு நாம் குட்பை சொல்லும் நேரமிது..!

இன்னும் ஓரீரு மாதங்களில் இந்தியாவில் உள்ள தனது தொழிற்சாலையில் கார்களை வலது பக்க டிரைவிங் முறையில் தயாரிக்கப்படுவதை அதிகாரப்பூர்வமாக நிறுத்துகிறது ஜெனரல் மோட்டார்ஸ்.

English summary
The all-new Beat Essentia concept previews the company's upcoming compact sedan set to Export Only.. Click for more

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark