மின்சார கார் உற்பத்தியில் பிரபல நிறுவனங்களை ஈர்க்கும் சீன நாடு

வோக்ஸ்வேகன், ஜெனரல் மோட்டார்ஸ், டொயோட்டா, வால்வோ, மஸ்ரேடி, போர்ஸே ஆகிய நிறுவனங்கள் மின்சார கார் தயாரிப்பில் சீனாவை முன்னிறுத்தி இயங்கவுள்ளன.

By Azhagar

மின்சாரத்தை சீன நாடு மாற்று ஆற்றலாக கருதி செயல்படுத்தவுள்ளது. இதனால் தற்போதே சீன அரசு, மின்சார கார்களுக்கான சந்தையை உலகளவில் கைப்பற்ற திட்டங்களை தீட்டி வருகிறது.

மின்சார கார் தயாரிப்பில் சீனாவின் ‘பேராசை’

சீனாவின் அரசும் இதற்கு பக்கபலமாக இருப்பதால், மின்சார கார் உற்பத்தியில் அந்நாடு உலகளவில் பெரிய புரட்சியையே உருவாக்கி விடும் முனைப்பில் உள்ளதற்கான சாத்தியக்கூறுகள் தற்போதே உள்ளன.

மின்சார கார் தயாரிப்பில் சீனாவின் ‘பேராசை’

கார் தயாரிப்பில் முன்னணியில் இருந்து வரும் வோக்ஸ்வேகன், ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் டொயோட்டா போன்ற நிறுவனங்கள் சமீபத்தில் சீனாவில் நடந்து முடிந்த மோட்டார் கார் கண்காட்சியில் பங்கேற்றன.

மின்சார கார் தயாரிப்பில் சீனாவின் ‘பேராசை’

அப்போது மின்சார கார் உற்பத்தியில் சீனாவுடன் சேர்ந்து உற்பத்தியில் ஈடுபடுவதற்கு முன்மொழிந்தன. தற்போதைய நிலையில் மின்சார் கார்களின் வளர்ச்சி பிரகாசமாக உள்ளது என அந்நிறுவனங்கள் கண்டறிந்துள்ளன.

மின்சார கார் தயாரிப்பில் சீனாவின் ‘பேராசை’

மின்சார கார்கள், தானாக இயங்கக்கூடிய வகையிலும், கார்களை தயாராகவுள்ளன. அதற்கான திட்டங்களையும் ஏற்கனவே பல நிறுவனங்கள் தயாராக்கி வைத்திருகின்றன.

மின்சார கார் தயாரிப்பில் சீனாவின் ‘பேராசை’

இந்த போட்டியில் ஆடி நிறுவனமும் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. சமீபத்தில் மின்சாரத்தால் இயங்கக்கூடிய ஈ-ட்ரான் ஸ்போர்ட்பேக் கான்செப்ட் காரை ஆடி அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் வோக்ஸ்வேகன் நிறுவனம் மின்சாரம் மற்றும் டீசலில் இணைந்து செயல்படக்கூடிய காரை உருவாக்கி வருகிறது.

மின்சார கார் தயாரிப்பில் சீனாவின் ‘பேராசை’

ஆடி, வோக்ஸ்வேகன் ஆகிய நிறுவனங்கள் மட்டுமில்லாமல், டொயோட்டா, வால்வோ, மஸாராட்டி, போர்சே ஆகிய நிறுவனங்களும் மின்சார கார் உற்பத்தை மற்றும் சந்தைப்படுத்துதலில் சீனாவை உற்று நோக்கி வருகின்றன.

மின்சார கார் தயாரிப்பில் சீனாவின் ‘பேராசை’

இதில் வால்வோ மிகவும் முந்திக்கொண்டு ஒரு காரியத்தை சீனாவில் நிறைவேற்றியுள்ளது. அந்நிறுவனம் தயாரிக்கும் முதல் மின்சாரக் காரை 2019ம் ஆண்டு சீனாவில் அறிமுகப்படுத்துகிறது.

மின்சார கார் தயாரிப்பில் சீனாவின் ‘பேராசை’

மேலும் 2018ம் ஆண்டில் ஃபோர்டு நிறுவனம் முற்றிலும் ஹைப்ரீடில் இயங்கும் காரை சீனாவில் அறிமுகப்படுத்துகிறது. இதில் 70 சதவீதமான உற்பத்தியும் சீனாவிலே நடைபெறும் எனவும் ஃபோர்டு அறிவித்துள்ளது.

மின்சார கார் தயாரிப்பில் சீனாவின் ‘பேராசை’

இந்த நிலை தொடர்ந்தால் 2025ம் ஆண்டில் சீனாவில் அனைத்தும் கார்களும் மின்சார பயன்பாட்டை கொண்டவையாக இருக்கும். அதற்கான கட்டமைப்புகளை சீனா தற்போதே தொடங்கி விட்டது என்பது முக்கிய காரணம்.

மின்சார கார் தயாரிப்பில் சீனாவின் ‘பேராசை’

மின்சாரம் என்ற புதிய ஆற்றலை கொண்டு வாகனங்களை தயாரிக்க சீனாவின் அரசும் அங்குள்ள நிறுவனங்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளித்து வருகிறது. அதனால் 507,000 அலகுகளி அங்கு மின்சார கார் உற்பத்தி நடைபெறவுள்ளது.

மின்சார கார் தயாரிப்பில் சீனாவின் ‘பேராசை’

சீனா ஏற்படுத்தியிருக்கும் இந்த கட்டமைப்பு, உலகளவில் பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களை அதிகமாக ஈர்த்துள்ளது. இதன்மூலம் மின்சார கார் உற்பத்தியில் முதன்முறையாக சீன அரசு மற்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அதிக சலுகைகளை தரவுள்ளதாக அறிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Automakers such as Volkswagen, General Motors, Toyota to Volvo, Maserati, Porsche are looking to China to drive sales in the electric car segment.
Story first published: Monday, April 24, 2017, 16:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X