சக்திவாய்ந்த புதிய மின்சார டிரக் மாடலை வெளியிட்ட கம்மின்ஸ் நிறுவனம்!

Written By:

அமெரிக்காவை சேர்ந்த கம்மின்ஸ் நிறுவனம் டீசல் எஞ்சின் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்குகிறது. இந்த நிலையில், எதிர்காலத்தில் வர்த்தகத்தை தக்க வைப்பதற்கு மின்சார வாகன தொழில்நுட்பம்தான் சிறந்ததாக இருக்கும் என்பதை கணித்து, புத்தம் புதிய மின்சார டிரக் மாடலை வெளியிட்டு இருக்கிறது.

புதிய மின்சார டிரக் மாடலை வெளியிட்ட கம்மின்ஸ் நிறுவனம்!

கம்மின்ஸ் நிறுவனத்தின் மின்சார டிரக் இயோஸ் என்ற பெயரில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இது தற்போது கான்செப்ட் எனப்படும் மாதிரி வாகனமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த மாதிரி வாகன மாடலை ரவுஷ் என்ற எஞ்சினியரிங் நிறுவனம் உருவாக்கி தந்துள்ளது.

Recommended Video
Jeep Compass Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
புதிய மின்சார டிரக் மாடலை வெளியிட்ட கம்மின்ஸ் நிறுவனம்!

இந்த டிரக்கை முழுமையாக உருவாக்குவதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும். அதேநேரத்தில், வரும் 2020ம் ஆண்டிற்குள் இந்த டிரக்கிற்கான மின் மோட்டார் மற்றும் மோட்டாரிலிருந்து உற்பத்தியாகும் சக்தியை சக்கரங்களுக்கு கடத்துவதற்கான பாகங்களை உருவாக்கிவிடுவோம் என்று கம்மின்ஸ் கூறி இருக்கிறது.

புதிய மின்சார டிரக் மாடலை வெளியிட்ட கம்மின்ஸ் நிறுவனம்!

ட்ரெயிலரை இழுத்துச் செல்வதற்கான ஜீப் எனப்படும் இழுவை வாகனமாக இது வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த வாகனமானது 22 டன் ட்ரெயிலரை இழுத்து செல்லும் திறன் கொண்ட மின்சார டிரக்காக இருக்கும். ஜீப் மட்டுமே 9 டன் எடை கொண்டதாக இருக்கும்.

புதிய மின்சார டிரக் மாடலை வெளியிட்ட கம்மின்ஸ் நிறுவனம்!

இந்த டிரக்கின் ஜீப்பில் 12 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு இணையான சக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்ட மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த டிரக்கில் 140kW திறன் வாய்ந்த பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கும்.

புதிய மின்சார டிரக் மாடலை வெளியிட்ட கம்மின்ஸ் நிறுவனம்!

ஒருமுறை சார்ஜ் செய்தால் 161 கிமீ தூரம் வரை பயணிக்கும். குறைந்த தூரத்திற்கு அதிக பாரத்திலான பொருட்களை டெலிவிரி செய்வதற்கு இந்த டிரக் பயனுள்ளதாக இருக்கும்.

புதிய மின்சார டிரக் மாடலை வெளியிட்ட கம்மின்ஸ் நிறுவனம்!

மேலும், நீண்ட தூரம் செல்வதற்கான மற்றுமொரு ஹைப்ரிட் மாடலையும் கம்மின்ஸ் நிறுவனம் உருவாக்கி வருகிறது. இந்த டிரக்கில் மின் மோட்டார் மற்றும் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த டிரக் 480 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டு வருகிறது.

புதிய மின்சார டிரக் மாடலை வெளியிட்ட கம்மின்ஸ் நிறுவனம்!

மேலும், டிரக்கின் ஜீப் மற்றும் ட்ரெயிலரில் சோலார் பேனல்களை பொருத்தி, பயணிக்கும் தூரத்தை அதிகரிக்கவும் கம்மின்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், இழுவிசையை குறைப்பதற்காக சிறந்த ஏரோடைனமிக் டிசைனுடன் டிரக்கை உருவாக்க முனைந்து வருகின்றனர் கம்மின்ஸ் நிறுவனத்தின் பொறியாளர்கள்.

புதிய மின்சார டிரக் மாடலை வெளியிட்ட கம்மின்ஸ் நிறுவனம்!

மின்சார கார் தயாரிப்பில் உலக புகழ்பெற்று விளங்கும் அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனமும் இதுபோன்ற ஹெவி டியூட்டி ரக மின்சார டிரக்கை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறது. டெஸ்லா நிறுவனம் உருவாக்கி வரும் மின்சார டிரக் மாடல்கள் 320 கிமீ மற்றும் 480 கிமீ தூரம் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
American engine manufacturer Cummins has revealed its first all-electric truck concept named as Aeos. The company known for its diesel engines has beaten Tesla, which is also planning to unveil an electric truck.
Story first published: Friday, September 1, 2017, 10:55 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos